Tuesday, December 28, 2010

நான் & நான்

இது என்னோட ப்ளாக்தான? அப்பொ நான் என்ன எழுதினாலும் திட்ட மாட்டிங்களே? ரைட்டு. எப்பவும் போல இது யாரையோ அர்ச்சனை பண்ணி எழுதின பதிவு இல்லை. எனக்கு நானே அர்ச்சனை. சந்தோஷமா படிங்க இல்லை அடுத்து கவிதை எழுதுவேன்.

நான் : டெம்ப்ளேட் கமெண்ட் போடறது தப்பா? போடறவனும் கஷ்ட்டபடவில்லை ப்ளாக் ஓனரும் கவலைபடவில்லை. நடுவுல உனக்கு ஏன் நாயே நக்கலு?

நான் : லூசுதனமா பேசாதடா!! பதிவு போர் அடிக்கிது சொல்லி கமெண்ட் பாக்கலாம் போனா ஆக, அருமை, எருமை சொல்லி கமெண்ட். எந்த ப்ளாக் போனாலும் அதே கமெண்ட். எரிச்சலா இல்லை? அதான் நக்கலடிக்கிறேன்.

நான் : அப்போ நீ ப்ளாக்கே படிக்காம வா நாயே. நீ படிக்கலனு யார் இப்பொ அழுதா? ஓட்டு மட்டும் போட்டு வா. அப்படிதான் கவிதை எழுதர ப்ளாக்க பார்த்தா உனக்கு கற்பனை பொங்குது ஏன்? நல்ல ரசிக்க தெரிஞ்சவன் இந்த வரி நல்லா இருக்கு சொல்லி பாராட்டரான். இல்லைனா அருமை, நல்லா இருக்கு இப்படிதான் சொல்ல முடியும். அதுக்கு என்ன ஒரு எதிர் கவிதை, பாராட்டரவங்களை கலாய்க்கரது. என்ன பெரிய ரவுடியா நீ? ராஸ்கள்.

நான்: டாய்!! நான் ரவுடினு நான் சொன்னா? அது என்னாமோ கவிதை எழுதறவங்கள பார்த்தா சிரிப்பா வருது மச்சி. முக்கியமா ரசிக்கரவங்கள பார்த்தா. ஏன்னே தெரியாலை கலாய்க்கனும் தோனுது மச்சி.

நான் : தோனும்டா தோனும். ஆமாம் அது என்ன பொம்பள புள்ளை ப்ளாகல கமெண்ட் போடறவன் எல்லாம் சாட்ல போய் கலாய்க்கறியாம்? உனக்கு ஏன் நாயே இந்த பொழப்பு. நாலூ பேரு பாராட்டினாதான நல்ல எழுத தோனும். உனக்கு பிடிக்கலனா சும்மா இருக்கலாம் இல்லை?

நான் : யோ!! சும்மா இரு அங்க விஷயமே இல்லை சும்மா அங்க போய் ஆக எப்படிதான் இப்படி எழுதறிங்க சொன்ன கடுப்பா இருக்காதா? நல்லா எழுதர ப்ளாக்ல பாராட்டினா யார் வேண்டாம் சொன்னா. ஒன்னுமே இல்லாத ப்ளாக்ல 50 கமெண்ட் 100 கமெண்ட் இருக்கு எல்லாம் டெம்ப்ளேட். உன் ப்ளாக்ல கூட தான் இருக்கு சொல்லாத. இங்க இருக்கது எல்லாம் ஒன்னு சாட் இல்லைனா என்னை திட்டி இருப்பானுங்க. பாராட்டுறேன் சொல்லி ஓவரா வழியரானுங்க மச்சி! அதான் சாட்ல போய் கலாய்க்கரேன்.

நான் : அப்போ பெண்கள் எல்லாம் தங்க கட்டி பசங்க மட்டும் தான் ஜொள்ளு விடறாங்களா? எண்ணாட சொல்லவர நீ?

நான் : நான் சொன்னா? நான் அப்படி சொன்னா? நீயா நினைச்சிகிட்ட நான் என்ன பண்ண முடியும்? ஒரு கவிதை இல்லைனா செண்டிமெண்டா யாரும் எழுதிட கூடாது அங்க போய் லிட்டர் லிட்டரா... விட வேண்டியது.  கண்ணிர் மச்சி நீ ஏன் தப்பா நினைக்கிற. பசங்களை இறங்கி கலாய்க்கலாம் மச்சி. பெண்களை கலாய்ச்சா நாலு பேரு சொம்ப தூக்கிட்டு பஞ்சாய்த்து வருவாங்க. அதான் பயயயயம். இப்போ என்ன டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா கலாய்க்க கூடாது அவ்வளாவு தான? ரைட்டு விடு. ஆனா ரமேஷ், அருண், கும்மி பசங்க எல்லாம் இதுல விதி விலக்கு சரியா?

நான் : இப்போ தான் நியாபகம் வருது. அது என்னா தொடர் பதிவு எழுதறவன் கிட்ட வம்பு? கேட்டா ஜாலிக்கு சொல்லுவ.

நான் : அட! எதாவது ஒரு நல்ல விஷயமா எழுதினா நான் ஏன் கேக்க போறேன். மன்னர்களை பத்தி எழுதினாங்க நான் கேட்டனா? பதிவர்கள் அறிமுகபடுத்திக் கொள்ள பதிவுலகில் நான் எழுதினாங்க நான் எதாவது சொன்னா? சும்மா ரஜினி 10, கமல் 10, புடிச்ச பாட்டு 10, 2010ல வந்த பத்து படம்..... டென்ஷன் பண்றாங்க மை லார்ட்... :))

நான் : இப்போ கடைசியா என்னதாண்டா சொல்லவர...

நான் : ஆரம்பத்துல சொன்னது தான்... :))

Wednesday, November 24, 2010

மிஸஸ் ஆஃப் த மிஸ்டர்


முஸ்கி : நமது கோகுலத்தில் சூரியன் வெங்கட் இந்த லிங்க் கொடுத்து. ரங்கமணிகள் மானத்த காப்பாத்த இதுக்கு எதிர் பதிவு போட்டே ஆகனும் ஒரே அடம்.... ஆன இந்த பதிவு சாமி சத்தியமா என்னது இல்லை. ஒரு பிரபல பதிவர் எழுதி கொடுத்தாரு. அவர் வேறை யாரும் இல்லிங்கோ நம்ம அருண்பிரசாத் தான் 


இனி பதிவுக்கு போகலாம்:

=> ஹுக்கும்... காலைல எழுந்தவுடனே.. அலாரம் சத்ததைவிட உங்க சத்தம்தானே அதிகமா இருக்கு.... இதுல முத்தம் வேற தராங்களாம்... அடுப்படில உருட்டுற சாமான் எங்க தலைல வந்து விழாததுதான் குறை.


=> எட்டரை மணிக்கு டைனிங் டேபிள்ல உட்கார்ந்து “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழ சொல்லி. எழுந்துருக்கலாம்ல”னு கத்தினா காலைல டிபன், மதியம் சாப்பாடு, ராத்திரி டின்னர் எல்லாமே கட் ஆகுதே இது எந்த ஊர் நியாயம்...

=> பச்சை, மஞ்சள், சிவப்பு... இதுல கிளிப்பச்சை வேற... நீங்க சொல்லிட்டு போய்டுவீங்க... அதுக்கு அப்புறம் வெளிய போக அந்த கலர்ல வந்ததால 2 மாடு மிரண்டு இருக்கு, 10 பேர் கண்ணு நொல்லை ஆகி இருக்கு... இவங்க மட்டும் நம்மள விட அழகா காட்டிப்பாங்களாம்....நாங்க ராமராஜன் மாதிரி வரணுமாம்.... எங்க கண்ணுக்கு லென்ஸ் தேவை இல்லை.... மூளை நல்லாவே வேலை செய்யுது....


=>  4 நாள் சோறு போடாம ஓட்டல்ல சாப்பிட வெச்சிட்டு.... திடீருனு வீட்டு சாப்பாடு போட்டு, அது ஓட்டல் சாப்பாட்டை விட மோசமா இருந்ததை நேரா சொல்ல முடியாம ” எந்த ஓட்டல்ல வாங்கினது”னு ஓட்டல் மேல பழிய போடும் எங்க நல்ல மனசை அடுப்பிலயா புகைய வெப்பீங்க.


=> வீட்டுல தான் நச்சு நச்சுனு பேசிட்டே இருக்காங்கனு ஞாபகமா மொபைலை வீட்டுல மறந்து வெச்சிட்டு போனாலும் பிரச்சினையா... சரி... மொபைல் கைல இருந்தா? என்ன நடக்குதுனு பாருங்க...

1. வீட்டு வாசல்ல இருக்கறப்போ போன் செய்து  - கார் சாவி எடுத்தாச்சா? கேக்குறது
2. கார் உள்ள உட்கார்ந்த பிறகு  - பெட்ரோல் இருக்கா?னு கேக்குறது
3 டிரைவிங்ல இருக்கறப்போ - மறந்து போன மளிகை சாமான் லிஸ்ட் சொல்லுறது
4. ஆபிஸ் போனவுடன் - போய் சேர்ந்தாச்சா?னு கேக்குறது
5. ஆபிஸ் சீட்ல உட்கார்ந்தவுடன் - பையன் ஸ்கூல்ல கம்பிளைண்ட்னு சொலுறது....


இப்படி இன்னும் நிறைய..... 10 பகுதி போடலாம்... ஏங்க, தெரியாம என்ன தெரிஞ்சே கேக்குறேன்.... ஆபிஸ் போன கூட நிம்மதியா விடமாட்டீங்காளா... ஏற்கன்வே டேமேஜர் குடைச்சல் வேற தாங்கல


=> செல்போன்ல ஒரு பெண்ணு பேர் பார்த்தா போச்சு.... call register, SMS inbox, Sent items, saved messages, drafts, gallery, ஏன் call durationகூட விட்டு வைக்காம அலசி ஆராய்ஞ்சி.... அந்த பெண்ணோட ஜாதகம், நட்சத்திரம் வரைக்கும் விசாரிக்கறதுக்கு... இந்த பிரச்சினை தேவையா?


=> அது எப்படி மீட்டிங், பிசினஸ் டிரிப்னு சொன்னவுடனே சந்தேகம் வந்து அடிக்கடி கால் பண்ணி, எங்களால போன் எடுக்க முடியாதுனு தெரிஞ்சும் ஆபிஸ்  லேண்ட் லைன்ல போன் பண்ணி செக் பண்ணுறீங்க


=> நீங்க ஓவர் குண்டுனு தெரிஞ்சும் ஐஸ்கிரீம், சாக்லெட் பக்கமே கை போகுதே ஏன்?


=> ஷாப்பிங் போன பில்லு கட்ட யார் கிரெடிட் கார்டா இருந்தா என்ன... மாச கடைசில பில்லு கட்டுறது யாரு? அந்த கிரெட்டிட் கார்டு ஒரு add on cardனு கூட இன்னும் தெரியாது.


=> வாரத்துல ஒருநாள் மட்டும் அம்மா வீட்டுக்கு போறேன் சொல்லுற உங்களுக்கு மாதத்துல எத்தனை வாரங்கள்.


=> எங்க வீட்டு விசேஷத்துக்கு கிளம்பும் போது மட்டும் உங்களுக்கு உடம்பு சரியில்லாம போகுதே ஏன்?


=> 5 நிமிசம், 5 நிமிசம்னு சொல்லி 2 மணி நேரம் ரெடியாகி.... எங்கள் டென்ஷன் ஏத்தி.... 10 கி மீ போன பின்னாடிதான் கேஸ் ஆப் பண்ணீங்களானு கேக்க நியாபகம் வருதே ஏன்?


=> கிரிக்கெட் மேட்ச் இருக்குற நாள்லதான் அந்த மெகாதொடர் முடியற மாதிரி சேனலை மாத்த சொல்லி நாடகத்துல அழுது, அதுக்கு நீங்க அழுது, எங்களையும் அழ வைக்கிற உங்களை எந்த காட்டுல , வேணாம் வேணாம் பாக்கிஸ்தான்ல கொண்டு போய் விட்டா என்ன?


=> ரெஸ்டாரெண்ட் போய் நாங்க ஆடர் பண்ணி அதை நீங்க எப்பவும் குறை சொல்லி நாங்க திட்டு வாங்குறதை விட உங்களை ஆர்டர் பண்ண சொல்லி நாங்க வேற வழி இல்லாம சாப்பிடுற நல்ல புள்ளைங்களையும் குறை சொல்லுறது ஏன்?


டிஸ்கி : இது சிரிக்க மட்டும் எழுதியது. யாராவது ஓவர சிந்திச்சி பதிவுலகில் சண்டை மண்டை உடைந்தால் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டே சந்தோஷமா வேடிக்கை பார்ப்பேன்.
.

Saturday, November 20, 2010

எதோ ஒன்னு....

இந்த லிவ்விங் டுகேதர் / கலாச்சரம் இம்சை தாங்களபா... ஆள் ஆளுக்கு கருத்து சொல்றாங்க. அதான் நானும் எதோ சொல்லி தொலைக்கிறேன். ஆனா ஒன்னு இங்க வந்து கருத்து சொல்றேன் சொல்லி யாராவது ம@#$%, ம@##$%டனு பேசினிங்கனா அப்புறம் நான் #$%^த்த, @#$$#னு கேப்பேன். கெட்ட வார்த்தைல பேசினா எல்லாரும் பயந்து போய்டுவாங்க நினைக்காதிங்க சாமிகளா. ரொம்ப நாளா எழுதர புள்ளைங்க அவங்க பேர் கெட்டு போய்டகூடது சொல்லி டீசெண்டா அடங்கி போய்டராங்க. எல்லாரும் திருப்பி பேச ஆரம்பிச்சா நாம தாங்க மாட்டோம். திட்டுங்க தப்பு பண்றான் தெரிஞ்சா நல்லா திட்டுங்க. நீங்க செஞ்ச் தப்ப மறைக்க திட்டாதிங்க. ஆன எனக்கு அந்த பிரச்சனை இல்லை அதனால நீங்க நாக்க புடுங்கர மாதிரி கேள்வி கேட்டா நான் நீங்க நாக்கு, மூக்கு, வாய், பல்லு எல்லாம் புடுங்கிட்டு சாகர மாதிரி திருப்பி கேள்வி கேப்பேன். அதனால ஜாலியா சண்டை போடலாம். தயவு செஞ்சி நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க.

நன் ஒன்னும் இங்க புதுசா சொல்ல போரது இல்லை. எல்லாரும் சொல்லிட்டு இருக்க விஷயத்த தான் திருப்பி நானும் கத்த போறேன். அவங்க எல்லாம் சொல்றாங்க லிவிங் டுகேதர் சொன்னா நீங்க நினைக்கிற மாதிரி செக்ஸ் இல்லை அவங்க சேர்ந்து வாழராங்க கல்யாணம் மட்டும் தான் பண்ணிக்கில. சரி ரைட்டு அது அங்க இங்க என்ன நடக்குது தெரியுமா?? ஒரு வருஷம் பெங்களுர் போய் வேலை செஞ்சிட்டு வந்து மச்சி செம ஜாலி லைப்டா ஒரு வருஷத்துல 3 பிகர் கூட லிவ்விங் டுகேதர்டா சொல்றான். அது என்னடா கர்மம் கேட்டா கூட வேலை செய்யர பெண்ணு மச்சி அது எல்லாம் உனக்கு புரியாது சொல்றான். உடனே ஆள காட்டு நான் வெட்டி போடரேன். லிவ்விங் டுகேதர் புனிதமே அவனால கெட்டு போச்சுன்னு சொல்ல கூடாது. காந்தி மாதிரி வாழரவன் தைரியமா வெளியா சொல்லுவான் ஓசாம மாதிரி இருக்கவன் ஒளிய தான் பார்ப்பான். நாம வாழர மேலை நாட்டுல இது எல்லாம் சகஜம் தான். அது நம்ம ஊருக்கு வர அப்பொ வரட்டும். கௌசல்யா மேடம் கவலை படரதால அது வராம இருக்க போறது இல்லை (வந்தாச்சி இன்னும் நல்லா வளரல). இல்லை கலகலப்ரியா மேடம் சண்டை போடரதால நாளைக்கே இங்க எல்லாரும் தாலி கட்டாம இருக்க போரதும் இல்லை. 

எனக்கு தெரிஞ்சி நாம எல்லம் காட்டுவாசியா திரிஞ்ச அப்பொ நோ கல்யாணம். ஆரம்பத்துல மிருகங்கள் மாதிரி பிடிச்சவங்கக் கூட சேர்ந்து சந்தோஷமா இருந்தோம். அப்புறம் கொஞ்சம் அறிவு வளர்ந்த அப்புறம் மாத்தி மாத்தி லவ் பண்ணி பயபுள்ளைங்க லிவ்விங் டுகேதர்ல வாழ ஆரம்பிச்சிது. அதுக்கு அப்புறம் இவன் பொண்டாட்டியை அவன் கை பிடிச்சான் , அவன் பொண்டாடியை இவன் கை பிடிச்சான், ஏன் கூட இருந்தவன் என்னை விட்டு அவ கூட போய்டான் இப்படி எல்லாம் சண்டை வந்து கடைசில யாரோ ஒரு நாட்டாமை கண்டு பிடிச்ச தீர்ப்பு தான் கண்ணாலம்.... ஜாதி, மதம், மொழி, இனம். நாடு எல்லாம் வேற வேற இருக்கலாம் ஆன எல்லா இடத்துலையும் இந்த கருமம் அதங்க கல்யாணம் இருக்கு. அப்பொ உலகம் பூர இப்படி தான் கல்யாணம் வந்துச்சா? டவுட்டு..

ஆரம்பத்துல துணி இல்லாம திரிஞ்சோம். அப்புறம் கீழ மட்டும் மறைத்தோம், அப்புறம் 2 பீஸ், இப்படியே வளர்ந்து வித விதமா டிரஸ் பண்ணோம். இப்பொ?? மறுபடி 2 பீஸ் போய்டோம். என்ன்ன்ன.. அப்பொ இலை, தழை.. இப்பொ பிரண்டட் துணி. எல்லாமே ஒரு சுழர்ச்சி தான். இதுக்கு போய் ஏன் அடிச்சிகிட்டு சாகறிங்க? லிவ்விங் டுகேதர் புடிச்சவன் அப்படியே வாழட்டும் மேல் நாட்டுல. இங்க முடிஞ்சவரை வராம இருந்தா நல்லது வந்துட்டா ஒன்னும் பண்ண முடியாது... நாங்க பேசறாது ஒழக்கமா வாழர நாலு பேர் பத்தி இல்லை. அந்த பேர சொல்லி தப்பு பண்ற நானுரு பேர பத்தி. திரைக்கு பின்னாடி வச்சி மச்சி இங்க துபாய்ல ஒரு பொண்ணுடா பெட் ஷேரிங் கேக்கரா என்னடா சொல்ற சொன்ன... டே மப்ளே செல் நம்பர் சொல்லுடா தான் கேப்பேன். அதே நான் இந்தியால இருந்தா எவானாவது இப்படி சொன்ன... அட போ மச்சி சும்ம வயித்து எரிச்சல கிளப்பாத.. எங்க அப்பா கிட்ட செருப்படி வாங்கி வைக்கவா கேப்பேன். நீங்க காறி துப்பர கல்ச்சர் தான் கொஞ்சமாவது தனி மனித ஒழுக்கத்த காப்பாத்திகிட்டு இருக்கு. 

யாரோ சொன்னாங்க அமெரிக்காவுல பொட்டு வச்சா டாட்டட் ஹெட் (Doted Head) சொல்லி நக்கல் அடிப்பாங்க சொல்லி. அவனுக்கு அது புதுசு அதான் நக்கல் அடிக்கிறான். இங்க வந்து சொன்னா அவனை செருப்பாலே அடிப்போம். காட்டுவாசி கூட்டத்துக்கு நடுவுல போன நம்மல வித்தியாசம பார்ப்பாங்க. அதுக்காக நாம எல்லாம் இங்க ட்ரெஸ் இல்லாம் சுத்த முடியுமா? எங்க போறிங்களோ அங்க அந்த கலாச்சாரத்த கடைபிடிங்க அதை இங்க திணிக்க வேண்டாமே. ஒரு விஷயம்... நல்ல விஷயமா இருந்த இங்க எடுத்து வாங்க. அணும், பெண்ணும் சேர்ந்து வாழரது தனி மனித சுகந்திரம் அதுல தலை இடாதிங்க சொல்றது 100% சரி. ஆன சேர்ந்து வாழனும். சும்மா வருஷத்துக்கு ஒருத்தவங்க கூட இருந்து இவங்க சரி இல்லை அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா மாப்பு வசந்து சொன்ன மாதிரி சொல்றத தவிர வேற வழி இல்லை... 

டிஸ்கி : இங்கு வரும் கமெண்டுகளுக்கு ப்ளாக் ஓனர் பொறுப்பு இல்லை. அவர் அவர் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளவும்... :)) .  இதனால வரும் சட்ட சிக்கல், பேண்ட் சிக்கல் எல்லாம் துபாய் கோர்ட்டில் வைத்து தீர்க்கபடும்... வேறு எந்த கோர்டுக்கும் வர இயலாது விருப்பம் உள்ளவர்கள் மட்டும் சண்டை போடவும்... :))

.

Saturday, November 13, 2010

அப்பாக்கள் பாவம்... :-(

இது பிள்ளைகள் மேல் பாசமாக இருக்கும் அப்பாக்களின் கண்ணீர் கதை. இங்கு குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் யாவும் உண்மை.

சம்பவம் 1 : நான்கம் வகுப்பு படிக்கும் தருன் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருக்கிறான், அப்பா சமையல் செய்கிறார். அம்மா டி.வி.யில் சீரியல் பார்க்கிறார். மகன் தனியாக சிரமபடுகிறான் என்றூ மகன் மேல் உள்ள பாசத்தில் சமையலுக்கு இடையில் மகனுக்கு உதவி செய்கிறார். சமையலில் குறை இருந்தால் மனைவி திட்டுவார் என்ற பயத்தில் பாடத்தில் ஒரு சில விஷயங்களை தவறாக சொல்லி கொடுத்துவிட்டார். மகன் 100க்கு 13 மார்க்கு வங்கி விட்டான். இது ஒரு தவறா? அதுக்கு போய் நீங்க சொல்லி கொடுக்கலனா அவன் 83 மார்க் வாங்கி இருப்பான்னு ஒரே திட்டு. நீ சொல்லி கொடுத்து இருந்தா அவன் 3 மார்க்குகூட வாங்கி இருக்க மாட்டான் சொல்லி முடிக்கல பூரி கட்டை மண்டைல லேண்ட் ஆகிடுத்து. அந்த கணவன் கண்ணை கசக்கிட்டு சமயல் கட்டுகுள்ள போன காட்சி இன்னும் என் மனசுல இரணமா இருக்கு.

சம்பவம் 2 : அம்மா அரைகிலோ ஐஸ்கிரிம் தனியா உக்காந்து சாப்பிடராங்க. அப்பா எப்பவும் போல சமைக்கிறார். சமையல்கட்டுல இருந்து  ஹால் வந்து ப்ரிஜ் திறந்து ஒரு மிராண்டா எடுக்கறார் (அவங்ககிட்ட அனுமதி வாங்கிதான்). அவர் பொண்ணு பச்ச புள்ளை பாவம் ”டாடி எனக்கு” அப்படினு கேக்குது. ஊருக்கே தெரியும் நாம எல்லாம் வெளிய டெரரா இருந்தாலும் மனசு பூ மாதிரி, அதுலையும் சின்ன புள்ள கேட்டா மனசு மெழுகு மாதிரி உருகி போகும். நம்ம ஆளும் கொஞ்சமா... நிஜமா கொஞ்சோண்டுதான் கொடுத்தான். அதுக்குள்ள முதுகுல அணல் அடிக்குது பணியன் கருகர வாசனை (ஆத்துகார அம்மா மொரைக்கராங்க இல்ல..). அவளுக்கு மட்டும் உடம்புக்கு எதாவது வரட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு அப்படினு மிரட்டல். நம்ம ஆளும் இராத்திரி புல்லா சாமி கும்பிட்டான். என்ன புண்ணியம்.. காலைல புள்ளைக்கு ஜுரம் (அவ்வ்வ்வ்). வீட்டுக்கு போக பயந்துட்டு ஆபிஸ் விஷயமா வெளியூர் போறேன் சொல்லிட்டு நம்ம ஆளு மூனு நாள பஸ் ஸ்டாண்ட்ல தூங்கி பப்ளிக் பாத்ரூம்ல குளிச்சி ஆபிஸ் போறான். என்ன கொடுமை சார் இது??

வர வர நாட்டுல பாசத்த காட்ட கூட பயப்பட வேண்டி இருக்குபா. நம்ம பூ மாதிரி மனசு யாருக்கு புரியுது. இந்த புள்ளைங்களும் கரைக்டா அம்மா கொடுக்க மாட்டாங்க அப்பா தான் இளிச்சவாயன் தெரிஞ்சி நம்மல தான் அட்டாக் பண்ணுதுங்க.  பொது மக்களே ஆண்கள் செய்வது சரியென்றால் எனக்கு தமிழ் மணத்தில் பாசிட்வ் ஓட்டு போடுங்கள். தவறு என்றால் நெகடிவ் ஓட்டு போடுங்கள். அதற்க்கு முன்னால் தமிழ் மணம் ஓட்டு பட்டை தேடி கண்டு பிடியுங்கள். 

டிஸ்கி : யோ மங்கு நீயும் ராம்ஸும் (அதான்யா நம்மா முன்னால் பன்னிகுட்டி) என் மனச ரொம்ப பாதிக்க வச்சிட்டிங்க. நீ ஒரே சீரியஸ் பதிவா போடற. அவர் ஒரே சீரியஸ் கமெண்ட்டா போடறாரு. போங்க போய் சமுகத்த திருத்தி நாசமா போங்க. நானும் வந்து கொஞ்ச நாள்ள சமுகத்த திருத்தரேன். பிரபலபதிவர் ஆனதுல இருந்து நீங்க சரி இல்லை. அப்படினு திட்டனும் போல ஆசையா இருக்கு. ப்ச்ச்.. என் நண்பர்கள போய்டிங்க அதனால இரண்டு காமடி பதிவர்களை இழந்த வருத்ததுடன் உங்கள் புதிய பரிமாணத்தை வாழ்த்தி வரவேற்று பின்தொடர்கிறேன்.

.

Saturday, November 06, 2010

ஒரு கடிதம்...

மக்கா எல்லாறும் நல்லா இருக்கிங்களா? கண்டிப்பா நல்லாதான் இருப்பிங்க ஏன்னா நான் பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சி. இண்ணைக்கு மட்டும் ஏண்டா எழுதற கேக்கறிங்களா?? தீபாவளி சொல்லி எல்லா பயலும் கடை பூட்டிட்டான் என்ன செய்யரது தெரியவில்லை அதான். நானே சொந்தமா கருத்து சொல்ல போறேன். நான் பேசி முடிக்கறவரை யாரும் குறுக்க பாயகூடாது.

நானும் ரொம்ப நேரம் யோசிச்சி பார்த்தேன் யாரை தாக்கி புனைவு எழுதலாம்னு ஒரு ஆளும் சிக்கல. தைரியமா பதிவை மட்டும் போட்டு எதிர்ப்பு தெரிவிச்சி வர கமெண்ட்ஸ் பப்ளிஷ் பண்ணாம போட்டு அமுக்கி கொல்ர ஒரு பதிவர பத்தி எழுதலாம் நினைத்தேன். அதாங்க நாட்டுக்கு நல்லது பண்றவங்க எல்லாம் வாய்ல மட்டும் பண்ணுங்க செயல்ல காட்டாதிங்க அப்படினு சொன்னாரே வெண்ணிற இரவுகள் அப்படினு ஒரு பதிவர்.. ஐயையோ!!! புனைவுள பேர் சொல்ல கூடாது இல்ல?? சாரி சாரி மறந்துடேன்... Firstல இருந்து.. செயல்ல காட்டாதிங்க சொன்னாறே கருமைக்கும் பகலுக்கும் எதிரான பதிவர் அவர்தான்.  அப்புறம் அவர் ஹிட்ஸ் வாங்க அவர் எழுதறாரு நமக்கு என்னா சொல்லி விட்டேன். அதுவும் இல்லாம வெளியூர்கரன் ஒருத்தன் சண்டைக்கு வரன். கேட்டா பட்டா பட்டி போட்ட ஒரு ஆளும் இந்த பயலும் சேர்ந்து இங்க இரண்டு பேர (அடிக்க) தத்து எடுத்து இருக்காங்களாம். வேற யாரும் அவங்க மேல கை வைக்க கூடாதாம்.

இப்பொ யார கலாய்க்கலாம்... அட!!! யார்பா அது சோத்து கை பக்கம் கும்பலா நிக்கறிங்க.. ஓஓஓ Followers... ஸிஸ்டர்ஸ், பிரதர்ஸ், மாமன், மச்சான் எல்லாறும் இருக்கிங்க போல லைட்டா முன்னாடி வாங்க. ஆமாம் நிறையா ப்ளாக்ல 100, 200, 300 இருக்கிங்க ஆனா ஒட்டு 30, 40 கமெண்ட் 50 இல்லைனா 60 தான் வருது. நீங்க எல்லாம் ஆளுக்கு ஒரு கமெண்ட் போட்டா கூட 200 கமெண்ட் தாண்டுமே? உண்மை சொல்லுங்க நீங்க எல்லாம் ஒரே ஒரு பதிவு மட்டும் படிச்சிட்டு புடிச்சி Follow பண்ணிட்டு அதுக்கு அப்புறம் அந்த ப்ளாக் பக்கம் எட்டி பாக்காதவங்க தான?? இல்லைனா நிஜமா படிக்கறிங்களா?? சும்மா ஒரு டவுட் கேட்டா இப்படி கோச்சிகறிங்க.

இரண்டு மூனு பதிவு படிங்க பிடிச்சா அப்புறம் தொடருங்க. அது மாதிரி இரண்டு மூனு பதிவு ரொம்ப மொக்க போடராங்க தோனுச்சினா Unfollow பண்ணிடுங்க.. இல்லைனா நீங்க 300 பேரும் அவர் பதிவ இன்னும் படிக்கறிங்க நம்ம்ம்ம்பி அவர் மொக்க போட்டே போவாரு. அட உங்களுக்கு டாஷ்போர்டு பாக்கா ஈஸியா இருக்குமே சொன்னேன்.  நல்ல பதிவு (உங்களுக்கு பிடிச்ச பதிவு) மட்டும் காமிக்கும் இல்ல...அது மாதிரி இந்த பிரபல பதிவர் எல்லாம் என்னை 300 பேர் Follow பண்றாங்க அவங்க ஆதரிப்பாங்க சொல்லி டிசைன் டிசைனா எழுதறாங்க....நீங்க நல்லவங்க ஆதறிக்க மாட்டிங்க. ஆனா என்னை மாதிரி கமெண்ட் போடரவங்க முதல்ல சொல்ற வார்த்தை... உங்களை பின் தொடர்ர 250 பேரும் முட்டாளா தான் இருக்கனும்... ஏதோ பாத்து செய்ங்க...

இத படிச்சதும் மொதல்ல என்னை Unfollow பண்ணுவிங்களே... ஹா..ஹா..ஹா ரைட்டு நடக்கட்டும். அப்புறம் அது என்னா இப்பொ எல்லாறூம் புதுசா நீயுஸ் லெட்டர் அனுப்ப ஆரம்பிச்சிட்டிங்க முடியலபா விட்டுங்க..... அண்ணெ என்ன சொன்னிங்க சரியா கேக்கல... அதான் அதுலே Unsubscribe இருக்கே அதை கிளிக் பண்ணுடா வெண்ணையா?? தாங்ஸ் அண்ணே... கிளிக் பண்ணிடரேன்.

.

Monday, October 04, 2010

பிரபல பதிவர கண்டு பிடிச்சிட்டேன்...

முஸ்கி : மக்கா இங்க வந்து ஓட்டு, கமெண்ட் போட்டு வம்புல மாட்டிக்காத. படிச்சிட்டு அப்படியே ஓடி போய்டு. நாம அடுத்த பதிவுல ஜாலியா கும்மி அடிக்கலாம்.

மக்கா ஒரு சந்தோஷமான விஷயம்... நான் பிரபல பதிவர்னா (அதிர்வு... பயபடாதிங்க பயபடாதிங்க அந்த வார்த்தை சொன்னாலே சும்மா அதிரும் இல்ல...) யார்னு கண்டு பிடிச்சிட்டேன்.  நம்புங்கபா உண்மையாதான். பிரபல பதிவர்னா யாரு தெரியுமா?? 100 மேற்பட்டோர் பின் தொடரனும். குறைந்தது 50 பதிவு எழுதி இருக்கனும். எது எழுதினாலும் ஓட்டு போட ஆள் இருக்கனும். டைம் கிடைக்கற அப்பொ எல்லாம் கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்னு எழுதி தள்ளிட்டே இருப்பாங்க. நல்ல தரமான பதிவுக்கு மட்டும் ஓட்டு, கமெண்ட் போடுவாங்க. எப்படி தரமான பதிவுனு கண்டு பிடிக்கறதா? அது எனக்கு தெரியாது.. ஏன்ன நான் பிரபல பதிவர் இல்லிங்கோ...ல்லிங்கோ...ங்கோ..கோ.

இப்பொ ஒரு பிரபல பதிவர்கிட்ட எப்படி நடந்துகணும் சொல்லுகிறேன் கேளுங்க. நீங்க புதுசா எழுத வந்தவரா இருந்தா அவர் எது சொன்னாலும் ஆமாம், ஆமாம் ஆமாம், நீங்க சொன்னா சரிதான், அருமையான கருத்து இப்படி சொல்லனும். எதாவாது எதிர்த்து கூறு கெட்ட தனமா கோள்வி கேட்டிங்க.... "டாய் சைலன்ஸ்... பேசிக்கிட்டு இருக்கோம் இல்லை!!" அப்படினு இளைய தளபதி மாதிரி கோவ படுவாங்க. பயமா இருக்கு இல்ல? பயமா இருக்கு இல்ல? அப்பொ அவங்க கிட்ட கேள்வி கேக்காத. எழுதி இருக்கது புரியலனாவா?? உனக்கு புரிஞ்சா என்ன புரியாட்டி என்ன வாய மூடிட்டு படிச்சிட்டு வா பங்காளி.

என்னாது நீங்களும் பிரபல பதிவரா?? அப்பொ சரி நீங்க என்ன சொன்னாலும் கருத்துதான். உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் இல்லைன வரவேற்கிறேன் அப்படினு சொல்லுவாங்க. தைரியமா உள்ள போங்க. அவ்வளோ ஏன் நீங்க நக்கல் அடிச்சாலும் பிரச்சனை இல்லை because நீங்க இரண்டு பேரும் பிரபல பதிவர்ஸ் பாஸ். உங்களுக்குனு பதிவுலகத்துல ஒரு இது இருக்கு... அதான்பா பிரிஸ்டீஜி... நேத்து வந்தவன் எல்லாம் கேள்வி கேட்டா அந்த அது... இதுவாகிடாது??

ஐயோ!! முன்னாடியே சொல்லனும் நெனச்சேன் மறந்துடேன். சார் / மேடம் இது யார பத்தியும் எழுதின புனைவு இல்லிங்கோ ஒரு வேலை நீங்க பிரபல பதிவரா இருந்து எதாவது சில விஷயம் உங்க கூட ஒத்து போச்சினா அது ஒரு தற்செயலான நிகழ்வு. அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் உங்கள் மனதை இந்த பதிவு புண்படுத்தி இருந்தால் நான் ரொம்ப வருத்தபடரேன் பிரபல பதிவர் அவர்களே. உங்களால இந்த நக்கல ரசிச்சி சிரிக்க முடிஞ்சா சிரிங்க. முடியலையா அடுத்த பதிவுக்கு வாங்க. ஆனா கண்டிப்பா வரணும். ஏன்னா எனக்கு நாலு நண்பர்கள் வேணும். ஏன்னா நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலிங்கோ...


எலேய் மக்கா!! மறுபடியும் சொல்றேன் ஓட்டு, கமெண்ட் போட்டு மாட்டிக்காத. யாராவது பிரபல பதிவர் கோபபட்டு என்னை கிழி கிழினு கிழிச்சா ஜாலியா ப்ளாக் மூடிட்டு புது பேர்ல புது ப்ளாக் ஆரம்பிச்சி நக்கல் அடிப்பேன்... என் கைல இருந்து கம்பியூட்டர பிடுங்கி கடல்ல போடர வரை நக்கல் அடிப்போன். அட பிடுங்கி போட்டாலும் கவலை இல்லிங்க... ஏன்னா இது ஆபிஸ் கம்பியூட்டர் நீங்க பாத்து சூதானமா இருந்துகோங்க..... :)))

டிஸ்கி : பிரபல பதிவர்.... அட்ரா அட்ரா சொல்லி பாத்தாலே ஒரு கெத்தா இருக்கு. எப்படியாவது ஒரு பிரபல பதிவர் ஆகிடனும்.
.

Saturday, October 02, 2010

ஒரு சந்தேகம்....

ஆல் அல்ல கை, நல்ல கை, நொல்ல கை, அரசியல் பண்றவங்க, பின்னாடி இருந்து குத்தர துரோகிங்க, புது பதிவர், பிரபல பதிவர், நாட்ட திருத்த வந்த நாட்டாமைங்க எல்லாருக்கும் வணக்கம்!!

எனக்கு ஒரு விஷயம் புரியல அதான் உங்க கிட்ட விளக்கம் கேக்கலாம் வந்தேன். கும்மி அடிக்கலாமா அடிக்கா கூடாதா? மொக்கை போடலாம போட கூடாதா? உங்ககிட்ட சொம்பு இல்லைனாலும் பரவாயில்லை வந்து தீர்ப்பு சொல்லுங்க.. பாதி பேர் கும்மி/மொக்க ஜாலியா இருக்கு சொல்றிங்க பாதி பேர் என் ப்ளாக் புனிதம் கெட்டு போச்சு சொல்றிங்க. நாங்க எல்லாம் நாட்டை திருத்த பதிவு எழுதல சார்.... ஐயோ சார்னு சொல்லிட்டேன் ஆண்னாதிக்கவாதி சொல்லுவிங்க. First ல இருந்து சொல்றேன் நாங்க எல்லாம் நாட்டை திருத்த பதிவு எழுத வரவில்லை.

எங்களுக்கும் தனி மனித வாழ்க்கைல நிறைய பொறுப்பு இருக்கு, ஆபிஸ் போனா Bank Recon, collection, balance sheet, auditing, flow chart, Server Down, Spam mails, Admin work, telephone calls இப்படி ஆயிரம் டென்ஷன் இருக்கு. இராவணன் விக்ரம் சொல்ற மாதிரி (தலைக்குள்ள ஆயிரம் காட்டு கூச்சல்). நாங்க மன இருக்கத்த குறைக்க ஜாலியா எழுதறோம், கும்மி அடிக்கிறோம். ஏற்க்கனவே மூளை சூடாகி ஆவி பறக்குது இதுல இங்கையும் வந்து சீரியஸ் மேட்டர் படிக்கனுமா?? மேதாவிதனத்த காட்டர மாதிரி விவாதிச்சி மண்டை காயனுமா??

சசசசசாமி நீங்க எல்லாம் பதிவ படிச்சி அறிவ வளத்துகோங்க வேண்டாம் சொல்லவில்லை ஆன எங்கள விட்டுங்க. எதாவது புது விஷயம் எழுதி இருந்தாலும் பரவயில்லை. உங்களுக்கு முன்னாடி நூறு பேர் எழுதிய விஷயத்த நீங்க 101வது ஆள எழுதுவிங்க அதை படிக்கலனா கோவபடறிங்க. படிக்கிற மாதிரி எழுதறது உங்க கைல தான் இருக்குங்க...

தேவா அப்படினு ஒரு பிரபல பதிவர்....  ஹிப்ரூ மொழியில் இன்னும் எழுதும் ஒரே பதிவர், தமிழ்ல எழுதுங்க சார், புரியர மாதிரி எழுத தெரியாத அப்படினு அவர பல கமெண்ட் அடிச்சி இருக்கேன். அவர் கோவபடல அதே கையால கவிதை, கதை சூப்பர் மாப்ஸ் கமெண்ட் போட வச்சாரு. அதான் சார் ஒரு எழுத்தாளன் வெற்றி (எவ்வளோ காசுடா வாங்கின கேக்காதிங்க. நான் பாராட்டி அவருக்கு சல்லி காசுக்கு புண்ணியம் இல்லை). 

அப்படி உங்க ப்ளாக்ல கும்மி அடிக்க கூடாத? கமெண்ட் மாட்ரேஷன் போட்டு தொலைங்க சார் / மேடம்... (ஐயோ!!! சார் அப்படினு முதலில் சொலிட்டேன்...). சரிரிரி உங்க ப்ளாக் உங்க இஷ்டம் மாட்ரேஷன் போட வேண்டாம், நீங்க எல்லாம் மெத்த படிச்ச மேதாவிகள் ஒரே ஒரு வார்த்தை நாகரிகமா சொல்லுங்க இங்கு கும்மி அடிக்காதிர்கள் நண்பர்களேனு. எங்களுக்கும் ஆண்டவன் கொஞ்சம் சுயமரியாதை, சுய கௌரவம் எல்லாம் வச்சி தொலைச்சிடான். நீங்க சொல்லி கேக்கலனா வெளிய போட நாயே சொல்லுங்க.

நாகரிக சீமான்களே, சீமாட்டிகளே நான் தற்குரிதான் ஆனா கும்மி அடிக்கிறவன் எல்லாம் தறுதலை, பொறம்போக்கு, மொள்ளமாரி நீங்க நினைக்கறது தப்பு. அந்த குரூப்ல Admin, Auditor, HR, Majestic Mechanical Engineer, Bio Medical Engineer, Marine Engineer, System Admin, Programmer இப்படி பல புத்திசாலிங்க இருக்காங்க அதனால நீங்க நல்லா எழுதினா அவங்களூம் கண்டிப்பா ரசிப்பாங்க. சக்கரை இருக்க இடத்துக்கு எறும்பு தான வரும். சும்மா சக்கரைனு லேபிள் ஒட்டிட்டு ஏன் எறும்பு வரல? இந்த கும்மி அடிக்கிற பயலுக கும்மி அடிக்கிற நேரம் ஊர் எல்லாம் போய் அங்க சக்கரை கொட்டி கிடக்கு சொல்ல கூடாதா? இப்படி எல்லாம் கேக்காதிங்க சாமிகளா. எப்பவாது நாங்க நல்லா கும்மி இருக்கோம் வந்து பாருங்க அப்படினு கூப்பிட்டு இருக்கமா?

உங்களுக்கு பிடிச்சத நீங்க செய்ங்க, படிங்க... எங்களுக்கு பிடிச்சதை நாங்க செய்ரோம், படிக்கிறோம்...

டிஸ்கி : யார் மோலயும் கோவபட்டு இதை எழுதலிங்கக்கா / எழுதலிங்கனா. மனசுல தோனுச்சி கொட்டிட்டேன்... இன்னும் நிறையா விஷயம் இருக்கு... ஆனா இதுக்கே பதிவு பெருசா இருக்கு கலாய்ப்பனுங்க.

.

Sunday, September 26, 2010

இறைவனிடம் ஒரு வரம்....

நீங்கள் எப்பொழுதாவது உங்கள் மணிபூரகம் வேகமாக சுழல்வதை உணர்ந்து இருக்கிறிர்களா. உங்கள் வயிற்றின் மைய பகுதியில் இருந்து ஒரு தீ ஜுவாலை எழுந்து உங்கள் உடல் முழுவது பரவுவதை உணர்ந்து இருக்கிறிர்களா? நான் உணர்ந்து இருக்கிறேன். என் பிறந்தோம்? என்ன சாதித்தோம் என்ற கேள்வி மூளையில் சம்மட்டி கொண்டு அடிக்கும் பொழுது. உடலில் உள்ள ஒவொறு திசுவும் இந்த கேள்வி எதிரொளிக்கும் பொழுது எனக்குள் இருக்கும் நான் விடையறியாது என்னை நோக்கும் பொழுது உணர்ந்து இருக்கிறேன்.

அந்த கேள்விக்கு விடைகான நான் தேடிய தேடலில் கிடைத்தது வெறும் கேளி பேச்சுகளும், அவமாணங்களும். எந்த திசையில் தேடுவது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் என் தேடுதலின் தீவிரம் குறைந்தது ஆனால் உள் எறியும் தீயின் வேகம் கூடியது. அனல் பொருக்க முடியாமல் பல முறை தாயின் கருவரையில் சென்று ஒளிந்து கொள்ள ஆசை பட்டதுண்டு. இறைவன் சன்னிதியில் மண்டி இட்டு என் சுயம் மறக்க செய் என்று இரஞ்சியது உண்டு. 

துறைகள் பல மாறி விடை தேடினேன். விடை கிடைக்கவில்லை ஆனால் எரிந்து கொண்டு இருந்த தீயின் வேகம் குறைந்தது. மனம் தேடலை மறந்து கால வெள்ளத்தில் அமைதியாக நீந்தி கொண்டு இருந்தது. எரிந்து கொண்டு இருந்த இடத்தில் வெறும் சாம்பலும் கரியும். இனி கவலை இல்லை அமைதியாக காலத்தை கழிக்கலாம் என்று என்னி இருந்த நேரத்தில் எனக்குள் எதோ ஒரு மாற்றம். மீண்டும் அந்த அனலை உணர்கிறேன். முன்பிலும் அதிகமாக.

கரியும் சாம்பலும் என்று என்னிய இடத்தில் ஒரு எரிமலை உறங்கி கொண்டு இருந்தது. அது வெடித்து சிதறி தீ குழம்பு உடல் முழுவதும் பரவுகிறது. இதயக்கூட்டை அடைந்து அங்கிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளம் போல் நாடி நரம்பு எல்லாம் தீ குழம்பு பாய்கிறது.  இறைவனிடம் மீண்டும் இரஞ்சுகிறேன் நான் முன்பே தேடி தேடி சோர்ந்து விட்டேன் அதனால் இந்த தீயை அனைத்துவிடு. என்னை அமைதியாக வாழ விடு.

டிஸ்கி : மிடில் கிளாஸ்ல பிறந்து எதாவது சாதிக்கனும் நினைத்து குடும்ப சூழ்நிலை காரணமா சாதிக்க முடியாம போன என் அருமை சகோதர சகோதரிகளுக்கு சமர்பணம்....


பதிவு புரியலனா இங்க போய் படிங்க அருமையான விளக்கம்.... மனுஷன திருந்தவிட மாட்டறானுங்க.... பதிவ படிச்ச விளைவு இங்க

Wednesday, September 15, 2010

வள்ளல்கள் அழியவில்லை..

தனது பதினாறு வயதுக்குரிய துள்ளும் நடையுடன் வந்து கொண்டு இருந்தான் ரவி. காற்றில் அலைபாயும் கேசம், ஒரு நொடி பார்த்த திசை மறுநொடி பார்க்காத கண்கள், காற்றில் தாளம் இடும் கைகள், பூமியை விலைக்கு வாங்கியவன் போன்று செருக்கான நடை, சினிமா பாடலை உச்சரிக்கும் உதடுகள் இப்படி அறிமுகம் செய்ய ரவி அத்தனை அதிர்ஷ்டம் செய்து இருக்கவில்லை.

பல நாள் எண்ணெய் காணாத கேசம், சோர்ந்துபோன விழிகள், நாள் முழுவது வேலை செய்து களைத்து போன கைகள், தளர்வான நடை, உறுதியான மனம் இதுதான் வாழ்க்கை அவனுக்கு கொடுத்து இருந்தது. தந்தை பக்கவாதம் வந்து படுத்த பின்னர் ஆரம்பித்த அவனது பொருள் தேடல் இன்னும் தொடர்கிறது.

நெரிஞ்சி முள்ளாய் எப்பொழுதும் அவனை வாட்டும் வறுமையை இன்று சம்பள நாள் என்ற நினைவு குருஞ்சி பூபோல் அவன் முகத்தில் ஒரு புன்னகை தோன்றி மறக்க செய்தது. நான் கிளம்பறேன் அண்ணெ. பலர் அவரை அண்ணன் என்று அழைத்தாலும் ரவியிடம் மேஸ்திரிக்கு தனி பாசம் உண்டு. எதிர்த்து பேசமாட்டான், வேலை சுத்தமாக இருக்கும், எந்த கெட்டபழக்கம் இல்லாதவன். அதனால் அவன் மேல் தனி வஞ்சையுண்டு.

சரி, இந்தா உன் சம்பளம். மேஸ்திரி கொடுத்த காசை எண்ணிபாக்காமல் சட்டை பையில் வைத்தான். அவனுக்கு மேஸ்திரி மேல் அவ்வளவு நம்பிக்கை. என்னிபாருடா என்று சொன்னவறுக்கு ஒரு புன்னகை பதிலாக கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தான். இன்று மளிகை கடை பாக்கி கொடுத்துவிடலாம் என்று சாலை கடக்க போனவன் கண்களிள் பட்டது அந்தா காட்சி. ஒரு முதியவர் மயங்கி கிடந்தார்.

ஓடி சென்று அவரை தூக்கினான். மூச்சி இருந்தது பக்கதில் இருந்த கடையில் இருந்து சோடா வங்கி வந்து முகத்தில் தெளித்தான். மெல்ல கண்விழித்தவரிடம் வீட்டு விலாசம் கேட்டு அவரை ஆட்டோ வைத்து அழைத்துபோய் வீட்டில் இரக்கிவிட்டான். அந்த முதியவர் நேற்றிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. பென்ஷன் வாஙக வந்து கிடைக்காமல் திரும்பி நடந்து வரும்போது மயங்கி விழுந்து இருக்கிறார். சட்டை பையில் இருந்து ஐனூறு ருபாய் எடுத்து அவர் எவ்வளவோ மறுத்தும் கேக்காமல் அவர் கையில் திணித்தான்.

மளிகை கடை அண்ணாச்சி நல்லவர். அடுத்த மாதம் தருகிறேன் என்று சொன்னால் ஒன்றும் சொல்ல மாட்டார். அம்மா திட்டும் சமாளித்து கொள்ளலாம். பூமியை விலைக்கு வாங்கியவன் போன்று செருக்காக வீடு நோக்கி நடக்க தொடங்கினான். இப்பொழுது அவன் நடையில் தளர்வு இல்லை துள்ளள் இருந்தது.கைகள் காற்றில் தாளம் போட்டது.உதடுகள் எதே சினிமா பாடலை முனுமுனுத்து கொண்டு இருந்தது.

யார் சொன்னது வள்ளல்கள் ஏழு என்று. அள்ளி கொடுத்த நேரத்தில் தன் வறுமை நினைக்காத இந்த ரவியும் ஒரு வள்ளல்தான். இது போன்ற வள்ளல்கள்தான் இன்னும் மனிதம் அழியாமல் வாழவைத்து கொண்டு இருக்கிறார்கள்.

டிஸ்கி : நேத்து வரைக்கும் நல்லாதானட இருந்த டெரர்... இன்னைக்கு இப்படி அனியாயம போய்ட்டியே.... மாலை வாங்க கூட காசு கொடுக்காம போய்டியே...

.

Friday, September 10, 2010

ஆண்கள் சமஉரிமை....

முஸ்கி : இது அடுப்படியில் சிக்கி தவிக்கும் அபலை ஆண்கள் உரிமைக்கு கொடுக்கபடும் ஒரு குரல்... கணவணை சமைக்க சொல்லிவிட்டு Farm ville விளையாடும் பெண்கலுக்கு எதிரான குரல்...

இன்று என் சகோதரியுடன் தொலைபேசியில் உரையாடி கொண்டு இருந்தேன். எப்பொழுதும் நான் பேசும்போது இடைக்கு இடை கமெண்ட் அடிக்கும் மச்சான் குரல் மிஸ்ஸிங்.... எங்கமா அவரு கேட்டா “அவர் டீ போட்டு இருக்காருனா”... யாருக்கு??.... எனக்கும் அவருக்கும்....... நீங்க என்ன பண்றிங்க..... நான் Farm ville விள்ளாடறேன். ஒரு நாள் சமைக்கட்டும் தப்பு இல்லை...

அப்பாவி திருமணமாகிய ஆண் மக்களே உங்களுக்குதான் எத்தனை எத்தனை பிரச்சனை. காலையில் எழுந்து மனைவிக்கு காப்பி போடனும். அதில் எதாவது குறை சொல்லி அதை உங்கள் முஞ்சியில் ஊத்துவார் (அதை துடைத்துவிட்டி). சமையல் அறையில் புகுந்து காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தயாரிக்க வேண்டும் (அவங்களா?? சத்தமா பேசாதிங்க துக்கம் கலஞ்சிட்டா நம்ம ஆளு திட்டு வாங்குவான்). 

பின்னர் அடம் பிடிக்கும் பிள்ளையை குளிப்பாட்டி,  உணவு கொடுத்து, சீருடை அணிவித்து, சாக்ஸ் தேடி, ஷு பாலிஷ் போட்டு நீங்கள் தயார் செய்தால்.. உங்க மனைவி வந்து.. இருங்க நான் போய் ஸ்கூல் பஸ் ஏத்திவிட்டு வரேன்... (உதவி பண்றாங்களாம்...). பஸ் எத்திவிட்டு உடனே வராங்களா??? வரமாட்டங்க சார்!!! அங்க அவங்கள மாதிரியே பல அம்மணிங்க கனவனுக்கு உதவி பண்ண வந்து இருப்பாங்க. ஒரு பத்து நிமிஷம் நின்னு அவங்ககூட எல்லாம் பேசிட்டு... புயல் மாதிரி வீட்டுக்குள்ள வருவாங்க, மின்னல் மாதிரி பாத்ரூம் உள்ள போவாங்க (குளிக்கிறாங்களா தெரியாது... வாரத்துக்கு இரண்டு சோப் தீருது).

குளிச்சிட்டு வந்து.. சாரி பாத்ரூம்ல இருந்து வெளிய வந்து (உண்மை தெரியாம பேசகூடது..). அதுக்கு அப்புறாம் அவங்க மேக்கப் ஸெஷன் (இதை மன்னிச்சிடலாம், இல்லைனா ஊர்ல பாதிபய கண்ணு அவிஞ்ச பாவத்துக்கு நாம பொறுப்பு ஆகிடுவோம்). இங்க மறுபடி அர்ச்சனை.. கிரீம் தீர்ந்து மூனு நாள் ஆச்சி, நீங்க இன்னும் பௌடர் வாங்கி வரலியா? சொல்ற வேலை ஒன்னுகூட செய்றது இல்லை இருக்கிங்களா...? ச்ச (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பபா).

சாப்பாடு ரெடியா அப்படினு ஒரு அதிகார குரல். நம்ம ஆளு அவனுக்கு தெரிஞ்ச பிரட் சண்ட்விச், உப்புமா, தோசை இப்படி எதாவது செஞ்சி கொண்டு போய் நீட்டுவான். என்ன சண்ட்விச் இது, உப்புமா என் இப்படி கொழஞ்சி போச்சி, தோசை என்ன இப்படி கருக்கி வச்சி இருக்கிங்க, ஒரு நாள் ஒழுங்க சமைக்க துப்பு இல்லை. இப்படி எதவது குறை சொல்ல வேண்டியது... (அவ்வ்... அவ்வ்வ்.. அவ்வ்வ்வ்.. எழுதர எனக்கே இவ்வளோ அழுகை வருது..). 

அதுக்கு அப்புறம் அபீஸ் கிளம்பி செருப்பு போடும்போது...... புது செருப்பு கேட்டு பத்து நாள் அச்சி, வெறு பத்து ஜேடி செருப்பு வச்சிட்டு மனுஷி எப்படி வேலைக்கு போறது? (என்ன லுக்கு? உங்களுக்கு அதே பிஞ்சி போன ஷுதான்..). இப்பொ டிரைவர் வேலை. பத்திரமா கொண்டு போய் அவங்க ஆபிஸ் வாசபடில இறக்கிவிட்டு. பைக் ஸ்டார்ட் பண்ணி அவங்க கண்ணுல படாத இடமா வண்டி நிறுத்தி ஒரு பெருமூச்சி விடுவிங்க பாருங்க... அதான் உங்க ஆகஸ்ட் 15....

டிஸ்கி : இது காலைல மட்டும் நடக்கற கொடுமை. தப்பி தவறி எப்பவாது என் வீட்டுகு வர பெண்பதிவர் யாரவது சண்டைக்கு வந்திங்க. அப்புறம் மதிய கொடுமை, மாலை கொடுமை எல்லாம் எழுதுவேன்... ஆண் பதிவர்களே நீங்க பொங்கி எழுங்கள்... ஆண்கள் சம உரிமைக்கு போராடுவேம்...

Wednesday, September 08, 2010

சிரிப்பு போலீஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....


முஸ்கி : இது நான் சுய நினைவு இல்லாமல் எழுதிய பதிவு

பதிவுலகி எனக்கு அறிமுகமான அழகிய மனம் கொண்ட சிலரில் சிரிப்பு போலீஸ் @ ரமேஷ் மிக முக்கியமானவர். VKS vs VAS என்று கோகுலத்தில் சூரியனில் மோதி கொண்டாலும், கமெண்ட்ல் கட்டி புரண்டு சண்டை இட்டாலும், பதிவுகளிள் பல்பு கொடுக்கல் வாங்கல் இருந்தாலும் திரைக்கு பின்னால் எப்பொழுதும் ஒரு புன்னகையுடன் வரவேற்று படைப்புகளை பாராட்டவும் தவறுகளை சுட்டிகாட்டவும் தவறாதவர் (பன்னாடை இதுக்கே ஒன்னும் தெரியாது). 

காலையில் கண்ட திரைபடத்தை மாலையில் மறந்துவிடும் நமக்யிடையில் என்றே கண்ட (கண்ட) திரைப்படத்தில் இருந்து புதிர் போட்டுஅசத்துவார். அவரை எவ்வளவு நையாண்டி செய்தாலும் நகைச்சுவையாக எடுத்து கொள்வார் (சூடு, சொரனை, மானம், ரோஷம் ஒன்னும் கிடையாது...).

தினமும் ” தி ஹிந்து “ நாளிதழ் படிப்பதை வாடிக்கையாக கொண்டு இருத்தாலும் ஆங்கிலம் தெரியாது என்று தன்னை தனே நையாண்டி செய்து நம்மை சிரிக்க வைப்பவர்.ஒரு மென்பொருள் அலுவலகத்தில் ஜனரல் மேனேஜராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டாலும் தன்னை பதிவுலகில் டேமேஜர் என்று அழைப்பதை அன்போடு அனுமதிப்பவர்.

சிறிதும் ஈகே இல்லாத மனிதர்.  அவரைபற்றி பேசினால் இன்று முழுவதும் பேசலாம் (ஆனால் கேட்க ஆள் இல்ல). இத்தனை சிறந்த பண்புகள் மிக்க நமது ரமேஷ் மண்ணில் தோன்றிய நன்னாள் இது. அவர்..

ஆன்டிகளின் அண்னனாக (சாரி)
பெண்களின் கண்னணாக!
நமது மனதில் ஒரு மன்னனாக!
பதிவுலகில் ஒரு பவளமாக!
மண்ணில் ஒரு மாணிக்கமாக!
பாரில் ஒரு பகலவனாக...

நற்பெயரும், புகழும் பெற்று நலமுடனும் வளமுடனும் நீடுடி வாழ முழு மனதுடன் இறைவனை பிராத்திகிறேன்....

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரமேசு....

கலை நிகழ்ச்சி:

வெடி சிரிப்பு வெங்கட் வாழ்த்து ஐடியா.
நக்கல் நாயகன் அருண்பிரசாத் நையாண்டி.
இளம் புயல் இம்சை அரசன் பாபு கவிதை.
.

Thursday, September 02, 2010

டெரர் காதல்....

வாங்க அப்பு!! ஊர்ள இருக்க எல்லா பயலும் இப்போ பண்ற ஒரே வேலை காதல்... அட இந்த கொலைகார பசங்க வெளியூர்காரன், ரெட்டை வால், இலுமினாட்டி இவனுங்க எல்லாம் திடிர்னு சிரிக்க வைக்கரானுங்க, அழவைக்கராங்க, வெக்கபட வைக்கராங்க கேட்டா காதலிக்கறேன் சொல்றானுங்க... அதான் நானும் காதலிக்க போறேன்... சைந்தவி மாதிரி பொண்ணு கிடைக்க நான் ஒன்னும் சிபி இல்ல. அதனால வாங்க என்னோட சனியன காட்டரேன்.

அதோ நடந்து வருகிறாள் என் காதல் தோ-வதை... ச்சீ தேவதை. பறட்டை தலை, சோடபுட்டி கண்ணாடி, உதட்டுக்கு வெளியே துருத்தி நிற்க்கும் இரண்டு அழகிய பல், பத்து நாள் துவைக்காத கப்படிக்கும் சுடிதார், நேற்று சூப்பர் மார்க்கட்டில் திருடிய வாட்ச், வாத்து நடை, பிஞ்சி போன செருப்பு... இன்று முழுவது பார்த்து கொண்டு இருக்கலாம் (வேற பக்கமா). இதோ அருகில் வந்துவிட்டாள்...

ஹாய்!!  ஆஹா... லாரியில் முன் வீலில் அடிபட்ட நாய் மாதிரி என்ன ஒரு குரல்!! ஈயத்தை காய்ச்சி ஊற்றியாது போல் இருந்தது காது. சொல்லு டியார்!! பதிலுக்கு நானும் அதே லாரியில் பின் வீலில் அடிபட்ட நாய் மாதிரி பேசி பழிவாங்கினேன்.... நேத்து பூர நான் தூங்கவே இல்லடா.. மிச்சம் உள்ள எச்சி சோறுக்கு வால் ஆட்டும் நாய் போல் சினிங்கியது என் தேவதை.  ஏண்டா செல்லம்? என்று கேட்டு தொலைத்தேன். ராத்திரி எல்லாம் கண்ணு முழிச்சி உனக்காக ஒரு கவிதை எழுதினேன்.

இதற்க்கு எல்லா காரணம் ஜில்லு. அவர் மேல் எப்பொழுதும் எனக்கு ஒரு தனி பாசம். அது இப்பொ கொலை வெறியாகமாறி இருந்தது. இதோ கவிதை ஆரம்பித்து விட்டாள். காதை மூடி கொள்ளுங்கள்.

கட்டி வச்ச கெட்டி சோறே
கெட்டுபோன மிச்ச சோறே!
ஃப்ரியா கிடைக்கும் ஃபாரின் பீரே
பிரிந்து போகதே என் உயிரே!

(இப்போ காதல்ரசம்/சாம்பார் மிக்க எங்கள் உரையாடல்)

அவள் : என்கிட்ட உனக்கு என்னடா பிடிக்கும்

நான் : உன் கையில் கட்டி இருக்க வாட்ச்

அவள் : நீ இப்படி எச்சகிளதனமா கேப்பனு தெரியும் அதன் நான் இரண்டு திருடி வந்தேன். இந்தா....

நான் : என்கிட்ட உனக்கு என்னடி பிடிக்கும்?

அவள் : இப்படி எதை கொடுத்தாலும் மான, ரோசம் இல்லாம வங்கி வச்சிக்கிரபார் இதான் பிடிக்கும்....

இருவரும் : ஹா.. ஹா...ஹா..

(நாங்கள் சிரித்த ஒலி கேட்டு இரண்டு கிளி செவிடு ஆனது, நாலு புறா செத்து விழுந்தது, ஒரு பல்லி பைத்தியாம் ஆனது..)

டிஸ்கி : இந்த காதல் காவியம் ஆதரவு இல்லாமல் தவிக்கும் அனைத்து கள்ள காதலர்க்கும் சமர்ப்பணம். (ஜில்லு இனிமே கவிதை எழுத மாட்டேன் மாரியாத்த கோயில்ல வந்து சத்தியம் பண்ணு... இல்ல நான் எழுதறத நிறுத்த மாட்டேன்.. :)))  )

.

Sunday, August 29, 2010

வாழ்த்துக்கள்

முஸ்கி : சிரிப்பு போலீஸ் வாழ்த்துக்களின் தொடர்ச்சி

நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...

(அந்த அழகான பெண் நிருபர் சிரிப்பு போலீஸ் காண போலீஸ் ஸ்டேஷன் செல்கிறர்)

ஏட்டு : யாருமா நீ?

நிருபர் : இங்க அழகா, அறிவா ரமேஷ்னு ஒருத்தர்....

ஏட்டு : அப்படி யாரும் இங்க இல்லமா.

நிருபர் : இல்ல சார் இந்த ஸ்டேஷ்ன்தான் சொன்னாங்க.

ஏட்டு : ரமேஷ்னு ஒருத்தர் இருக்காரு ஆன நீ அழகா இருப்பாரு சொல்றியே, அதுலயும் அறிவு ரொம்ப ரொம்ப கஷ்டம்.

நிருபர் : தப்பா தகவல் சொல்லி இருக்காங்க போல. அவர பாக்கலாமா?

ஏட்டு : லாக்கப் உள்ள விசாரனை நடக்குது போய் பாருங்க.

நிருபர் : ஓ!! என்ன விசாரனை?

எட்டு : மார்க்கட்ல வாங்கின மாமூல் சரியா பிரிச்சி கொடுக்கல சொல்லி கைதி எல்லாம் சேர்ந்து அவர அடிச்சிட்டு இருக்காங்க.

(நிருபர் வருவதை கண்டு ரமேஷ் கைதிகளிடம் கெஞ்சி வெளியில் வருகிறார். லாக்கப் பார்த்து...... பிச்சிடுவேன் பிச்சி!!! கைதி கொடுரமாக முறைக்க. கண்ணாலே அவன் காலில் விழுகிறார்)

ரமேஷ் : (பல் எல்லாம் காட்டி) சொல்லுங்க!!!

நிருபர் : (என்ன இப்படி இளிக்குது... இதான் சிரிப்பு போலீஸா) Good Morning!!

ரமேஷ் : (பெருமையுடன்) My name is Ramesh.

நிருபர் : But, நான் உங்க பெயர் கேக்கவில்லை. வணக்கம் சொன்னேன்.

ரமேஷ் : ஹி..ஹி..ஹி... எனக்கு இங்லிஷ் வராது. தமிழ்லா....

நிருபர் : சரி. சரி. விநாயகர் சதுர்த்தி வருது.. நீங்க வாழ்த்து சொல்லனும்.

ரமேஷ் : அதுக்கு முன்னாடி நான் ஒரு கேள்வி கேக்கனும்.

நிருபர் : சினிமா சம்மந்தம் இல்லாம கேளூங்க.

ரமேஷ் : (பிகர் ரெம்பா உஷார இருக்கே. நமக்கு வேற ஒன்னும் தெரியாதே)நீங்க ரொம்ப அழக இருக்கிங்க. உங்க பெயர் என்ன?

நிருபர் : குஷ்பு டாடி...

ரமேஷ் : என்னாது டாடியா?

நிருபர் : ஆம டாடி.  நான் உங்க அண்ணன் பொண்னுக்கு தோழி. அவதான் உங்க விலாசம் கொடுத்தா...

ரமேஷ் : ஆஹா!! வடை போச்சே (வாழ்த்து சொல்லாமல். சோகத்துடன் லாக்கப் நோக்கி செல்கிறார்)

நிருபர் : இது சிரிப்பு போலீஸ் இல்ல லூஸு போலீஸ்.. இதுக்கு அவங்க எவ்வளோ தேவலாம்..

டிஸ்கி : ரமேசுசுசு... இனி என்ன கலாய்ப்ப?

.

Wednesday, August 25, 2010

சாத்தான் வேதம் ஓதுகிறது..


அன்பான ஆடு வெட்டிகளே!! 

வணக்கம்!! இப்பொழுது பதிவுலகில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை பதிவுக்கு சம்மந்தம் இல்லாமல் கும்முவது. கும்மி என்பது நாமக்கு மகிழ்ச்சியாக இருக்களாம். ஆனால் அந்த பதிவர் மனம் வருந்துவதை நாம் மறந்து விடுகிறோம். 

நிறைய பதிவர்கள் ரொம்ப நல்லா எழுதராங்க அவங்க பதிவு எல்லாம் வெறும் ஓட்டு போட்டு வந்துடறோம். அவங்கள பாராட்டி நாலு வார்த்தை எழுது ராசா தப்பில்ல. அதுக்கு முதலில் பதிவ படி.  கும்மி அடிக்க சொன்னா மட்டும் வரி வரியா படிப்போம். உனக்கு பிடிக்காத பதிவரா இருந்தாலும் நல்லா எழுதினா போய் பாராட்டு.

 ஆடு வெட்டுங்கள்! தவறான காருத்து கூரினால் இழுத்து போட்டு வெட்டுங்கள் ஆனால் நல்லா பதிவு, கவிதை என்றால் ரசிச்சி நாலு வார்த்தை எழுதுங்க. கும்முங்க அதுக்குனு சில மானம், ரோசம் இல்லத ப்ளாக் இருக்கு அங்க கும்முங்க (என் ப்ளக் மாதிரி).


நான் சொல்றது சரினு பட்டா இனி முதலில் பதிவு பற்றிய உண்மையான கருத்து சொல்லிட்டு அப்புறம் கும்மி அடிக்க ஆரம்பிங்க. மாற்று காருத்து இருந்தா சொல்லுங்க கேட்டு கொள்கிறேன். அன்பா கருத்து சொன்ன வந்து ஸ்மைலி கமெண்ட் போடுவேன். அதிகாரமா சொன்னா ஜய் தலமையில் அருண், பருப்பு, நரி, பன்னிகுட்டி ராம்ஸ், முத்து, ஜய்லானி ஆகிய அசைவ பூசாரிகளூம். சிரிப்பு போலீஸ், வெங்கட், மங்கு, தேவா, செல்வா, ஜில்லு, சௌந்தர், இம்சை பாபு ஆகிய சைவ பூசாரிகலூம் உங்களை அறுப்பார்கள்.

அராஜகம சொன்னா அந்த நிமிடாம் அங்கயே காலில் விழப்படும் என்பதை கொஞ்சம் கூட மானம், ரோசம், சூடு, சொரனை இல்லாமல் சொல்லி கொள்வாதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிரேன்.

அன்பான (நல்ல) பதிவர்களே!!

வணக்கம்!! மறக்காம கமெண்ட் மட்ரேஷன் உபயோக படுத்துங்க இல்லன நானும் என் குரூப்பும் உள்ள பூந்து கும்மி அடிப்போம். அப்புறம் வருத்தபட கூடது. அதே மாதிரி வர விமர்சனங்களை நடுநிலையா வெளியிடுங்க. தகாத வார்த்தை உபயோக படுத்தினா தடை செய்யுங்க ஆன எதிர் காருத்து கூரினால் வெளியிட்டு பதில் கூருங்கள்.

டிஸ்கி : நான் இங்க சொல்லி இருப்பது எல்லாம் என் சொந்த கருத்துகள். இதற்க்கு முன்பு யாரவது இப்படி பதிவு இட்டு இருந்தால் இங்கு தெரிவிக்கவும். அப்புறம் மேல சொல்லி இருக்கவன் எல்லாம் என் நண்பன் இல்ல..... என்ன முதலில் அறுக்க போற துரோகிங்க... வந்து ஆரம்பிங்க ராசா...

Sunday, August 22, 2010

பாவம் போலீஸ்...

அது நான் ஒரு பிரபள தனியார் நிருவணத்தில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம் (நம்புங்க மக்கா... நான் உண்மையா வேலை செய்தேன்). அந்த நிருவனத்தின் புதிய கிளை திறப்பு விழா பக்கத்து நகரத்தில் நடக்கவிருந்தது. அதற்க்கு நானும் அழைக்கபட்டேன் (நம்ப மாட்டிங்களே). சரி அங்க வேலை செய்ய ஆள் இல்லை சொல்லி தலையில் மஞ்சள் தண்ணி தெளிச்சி கூட்டிட்டு பேனாங்க.

சும்மா சொல்ல கூடது மக்கா மதியம் சோறு எல்லாம் போட்டாங்க. நாம சும்மாவே கொடுக்கர காசுக்கு மேல கூவுவோம் இதுல சோறு வேற போட்டாங்கலே. ராத்திரி 12 மணிவரை வேலை செய்துவிட்டு பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். அந்த ஊரில் இருந்து இடையில் நிக்காம வர பேரூந்து இரவு 10 மணிக்கே சென்றுவிட்டது.

அதனால் பக்கத்ல இருக்க சின்ன ஊருக்கு போய் அங்க இருந்து பஸ் மாறி போய்விடலாம் நானே சொந்தமா சிந்திச்சி (என்ன சிரிப்பு?) பஸ் பிடிச்சி போய் சேர்ந்தே. அப்பொழுதுதான் தெரிந்த்து அந்த ஊர்ல அடுத்த பஸ் காலை 3 மணிக்கு (சத்திய சோதனை). சரின்னு பக்கதில் இருந்த கடை வாசலில் அமர்த்தேன்.

காக்க காக்க மாதிரி ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. ஒரு நாலு அதிகரி இரங்கினாங்க... டேய்ய்ய் இங்க வாங்கடா!! அப்படினு ஒரு அதட்டால். என் பக்கத்துல லுங்கி கட்டிடு இருந்த 4 அப்பவிங்க எழுந்து போனங்க. அடுத்து ஒரு அதட்டல் உன்ன மட்டும் தனியா கூப்பிடனுமா?  (என்னாதுது... நானா?? )  சொல்லுங்க சார்... எந்த ஊர்டா? சொன்னேன். இங்க என்ன செய்ற? Bagல என்ன? உன் ஐ.டி கர்டு எடு.. இப்படி பல கேள்வி கேட்டு ஜீப்ல ஏத்தி கூட்டிட்டு போய்ட்டாங்க.

ஸ்டேஷன் போனதும் அங்க ஏற்க்கனவே ஒரு ஆறு பேர் பிடிச்சி வச்சி இருந்தாங்க. எல்லார் கிட்டாயும் அப்பா பெயார், அம்மா பெயார், வீட்டு விலாசம் எல்லாம் வாங்கினாங்க. கைரேகை எல்லாம் எடுத்தாங்க மக்கா... அப்போ அங்க இருந்த ரேடியோல அவங்க உயர் அதிகாரி ஒரு கேள்வி கேக்கராரு.... எத்தனை சந்தேக கேஸ் பிடிச்சிங்க?... இவரு சொல்ராரு.. 11 அச்சி ஸார்... (அட பாவிகளா... எத வச்சியா என்ன சந்தேக பட்டிங்க..). நானும் ரொம்ப அடக்கமா... என் ஸார் என்ன சந்தேக பட்டிங்க கேட்டேன்..

அவரு சொல்ராரு. சந்தேகம் எல்லாம் ஒன்னும் இல்ல தம்பி.. ஒரு நாளைக்கு 10 கேஸ் பிடிக்கனும் டார்கட். அதான் அள்ளி போட்டு வந்தோம். நீங்க கிளம்பளாம். (ஜீப்ல கூட்டி போய் விடமாட்டிங்களா கேக்கலாம் நினைத்தேன்... கைல நீட்டு குச்சி வச்சி இருந்தாரு..). சரினு நடந்தே பழயா இடத்துகு வந்தேன். அடுத்த 10 நிமிசம் இன்னும் ஒரு போலீஸ் ஜீப். அதே வசனம்... (இவிங்க வேற ஸ்டேஷனாம். ஸார் இப்போதான் அந்த கோவில் கிட்ட இருக்க ஸ்டேஷன் போய்ட்டு வரேன் கைல கரி (கைரேகை எடுக்க பூசின மை..) பாருங்க காட்டினேன். அட அவங்க முந்திடாங்கள அப்படினு சிரிச்சிட்டு விட்டு போய்ட்டாரு.

டிஸ்கி : போலீ|ஸ் உயர் அதிகாரிகளே குற்றம் அதிகரிக்காமல் இருக்க நீங்க உங்க கீழ உள்ள அதிகாரிகளூக்கு டார்கட் கொடுக்கரிங்க.. அவங்க பாவம் ஆள் கிடைக்காம கைல கிடைக்கர அல்ல கை எல்லம் சந்தேக படராங்க...நாளைக்கு எங்காவது தப்பு நடந்த. முதலில் சந்தேக கேஸ்ல பிடிச்சவங்கள கும்முவிங்க... எங்க உட்ம்பு அடி தாங்கது ஸார்..... பாத்து செய்ங்க...

Tuesday, August 17, 2010

வாங்க கோடிஸ்வரர் ஆகலாம்...


முஸ்கி : MLM என்று அழைக்கும் மல்டி லெவல் மார்க்கட்டிங் செய்பவர்கள் சிந்திக்க...

ஐயா தெய்வங்களே வணக்கம்!!  உங்களிள் சிலர் கொடுக்கர ரவுசு தாங்கலபா... வெறும் ரு.9999.99 கொடுத்து ஒரு பொருள் வாங்கிட்டு, வெறும் இரண்டுபேரை நீங்க சேர்த்து விட்டுட்டா போதும்... ஒரே மாதத்தில் நீங்கள் கோடிஸ்வரர் இப்படி சொல்லி மார்க்கட்டிங் பன்ராங்க....

ஐயா சாமி நான் அடுத்த வேலை சோறு திங்கவே காசு இல்லாத பரதேசி என்ன விட்டுவிடுபா சொன்னா... அப்படியா!!! நீதான் சரியான ஆள். உன்கிட்டதான் முன்னேறனும் வெறி இருக்கும்... சொல்லி மனுசன வெறியெத்தறது.

(சரி கழட்டி விடலாம் சொல்லி) இங்க என்ன நம்பி 10 பைஸா தரவே ஆள் இல்ல. இதுல இரண்டு ஆள் அதும் 10000 ருபாய்.. விடுங்க பாஸ் வேலைக்கு ஆகது அப்படினு சொன்னா. அப்போ நீங்க இவ்வளோ நாள் வழ்ந்ததே வீன் சொல்லி உசுப்பேத்த வேண்டியது.

(நம்மலும் மான ரோசத்த விட்டு) ஆம ஸார்! இது சரி வராது நான் கிளம்பரேன் சொன்ன!!!! இருங்க ஸார். உங்களுக்கு ஆள்தான பிரச்சனை. என்கிட்ட 10 ஆள் இருக்காங்க அதுல 2 தரேன். நீங்கலும் என்னோட சேர்ந்து வளருங்க சொல்லி ஆசை காட்டரது.

நம்மலும் மனசுமாரி, நமக்காக இவ்வளோ தியகம் செய்யர நண்பர் இந்த உதவி செய்ய மாட்டாரா நினைத்து. மெதுவ... ரொம்ப மெதுவ.. ஸார் ஒரு 10000 ஆயிரம் கடண் கொடுத்து என்ன இதுல சேர்த்து விடுங்க. முதல் கமிஷன் வந்ததும் திருப்பி கொடுத்துடரேன் சொன்னதும்... என்ன ஸார் நோகாம நோம்பு கும்பிட பாக்கரிங்க அப்படினு மனுசன் ஆவரு பாருங்க டென்ஷ்ன்....

ஐயா நீங்க கோடிஸ்வரர் ஆகுங்க வேண்டாம் என்று சொல்லவில்லை! எங்கலுக்கு உதவ நினைக்கிர உங்க பெரிய மனசு புரியுது. ஆனா எங்கள் துரை வேறு சரி வராது சொன்னா விட்டுவிடுங்கள். கட்டாய பாடுத்த வேண்டம். நாளை உங்களை கண்டாளே ஓட வேண்டிய நிலை உருவாக்காதிர்.

டிஸ்கி : நண்பர்களை புண்படுத்த எழுதவில்லை எங்கள் உணர்வுகளை வெளிபடுத்த எழுதியது. படிக்கிர மக்கா நாளை உனக்கும் இந்த நிலை வரலாம் அதனல் மரியாதைய சொல்ரேன் இதுக்கு ஓட்டு போடு... ஒரு ஆள் மாறினாலும் சந்தோஷ்ம்.

Sunday, August 15, 2010

நானும் பதிவுலகில் இருக்கனாம்....

முஸ்கி : செல்வா

1 .) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ..?

எனக்கு ஒர் அளவு எழுத தெரியும் ஆன படிக்க தெரியது.. நீங்க கொஞ்சம் படிச்சி சொல்லுங்கலேன்...

2 .) அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா..? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்கக் காரணம் என்ன ..?

நீங்க இன்னும் படிச்சி சொல்லவே இல்லயே....

3 .)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி ..?


அது ஒரு கேவலமான கதை... வேலை நேரத்துல செய்ய வேலை இல்லாம என்ன பன்னலாம் யோசிச்ட்டு இருந்த நேரத்துல என் உயிர் நண்பன் முஷாஹிதின்... நீயும் என்ன மாதிரியே உருப்படம போ சொல்லி தமிலிஷ் லிங்க் கொடுத்தான். நானும் டாக்டர் பட்டம் வாங்கர அளவு அதை அலசி ஆரய்ந்தேன்... அப்பொ நம்ப கோகுலதில் சூரியன் ப்ளாக்ல இந்த VKS பசங்க அடிக்கர கும்மி பாத்து நம்ம வெங்கட் ஆதரவா கும்மி அடிக்க ப்ளாக் ஆரம்பித்தேன். இப்பொ கட்சி வளர்ச்சிக்கு  இராபகலா பாடுபடரேன்.  நீதி : இதை கேக்கனும் உங்க தலையெழுத்து.....
 
4 .) உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடைய என்ன என்னவெல்லாம் செய்தீர்கள் ..?


இது வலைப்பதிவு இருக்கவங்கல கேக்கனும்...  அடுத்த கேள்வி...
 
5 .) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விசயங்களைப் பகிர்ந்ததுண்டா ..? அதன் விளைவு ..?
 
கண்டிப்பாக. நீங்கள் கேட்ட 3வது கேள்விக்கான பதில் என் சொந்த விஷயம். இன்னும் இதுபோல் பல பயனுள்ள சொந்த விஷயம் சொல்லுவேன். விளைவு இனி நீங்க இந்த பக்கம் வரமாட்டிங்க.
 
6 .) நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா ..?
 
நிச்சயமாக பொழுதுபோக்கு அல்ல. நான் கமெண்ட், பதிவு எழுதுவது அலுவலக நேரத்தில். அதற்க்கு மாதா மாதம் என் அலுவலகத்தில் சம்பளம் தருகிரார்கள்.
 
7 .) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்..? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன ..?


நான் சோட குடிக்க போறன். அதுக்குல்ல நீங்க இங்க போய் 7வது கேள்விக்கு சிகப்பு மைல எழுதி என்ன பதில் இருக்கோ அதை படிச்சிகோங்க.
 
8 .) மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு எப்போதாவது பொறாமை அல்லது கோபம் வந்ததுண்டா ..?


ஜாதி, மதம், இனம், கடவுள், நாடு இப்படி எல்லம் விஷயதுகும் குரூப் குரூப்பா பிரிந்து சண்டை போடரதை பாத்த பொறாமைய இருக்கு. என்ன ஆட்டைல சேத்துகல கோவம் கோவம வருது...
 
9 .) உங்கள் வலைபதிவு பற்றி உங்களை முதல் முதலில் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் ..?


அது ஜய் அப்படினு ஒரு அப்பாவி பட்டிக்காட்டான்.... நம்பிக்கை இல்லன இங்க பேய் பாருங்க...
 
10 .) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்திற்குத் தெரியவேண்டிய அனைத்தையும் கூறுங்கள் ..?


என்னை பற்றி தேர்தல்ல நான் நிற்க்கும்போது சொல்ரேன்.  (கருத்து சொல்லபோறன் இஷ்டம் இல்லாதவங்க கிளம்பளாம்) இப்பொ உங்க வீட்டு ஜென்னல் வெளியே எட்டி பாருங்க அங்க ஒரு உலகம் தெரியுதா? ஆங்ங்.... அந்த உலகத்துக்கு உன்னால முடிந்த நல்லது செய்.... உன்னபத்தி ஊர் பதிவு எழுதும்.
 
டிஸ்கி : ஓட்டு எல்லம் போட்டு பதிவுலக அசிங்க படுத்தாதிங்க... வேற.... ஒன்னும் இல்ல கிளம்புங்க தலை..

Wednesday, August 04, 2010

சோப்பு கிடைத்த ரகசியம்...


பதிவுலக மக்களுக்கு வணக்கம்!! நான் எழுதுவதற்கு தூண்டுகோலாய் இருந்த.... இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். எங்க நான் எழுதிட போறேன் சொல்லி பலபேரு பயத்தோட இருக்காங்க. இருந்தாலும் திருமதி.காயத்ரி அவர்கள் நம்ப மொக்கை பத்தி தெரியாம தொடர்பதிவு  காண்டாமிருகமும் பேபி சோப்பும் அப்படின்னு சொல்லி சொந்த காசுல சூனியம் வச்சிகிட்டாங்க.

ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம் அது பெயர் ரெமோ (காண்டாமிருகம் டைப்பண்ண கடுப்பா இருக்கு) அதுக்கு ரொம்ப நாள பேபி சோப்பு போட்டு குளிக்கணும் ஆசையாம். ஆனா காட்டுல கடையே இல்லையம். அப்போ அங்க ஒரு குரங்கு வந்துச்சாம். ரெமோ அந்த குரங்குகிட்ட தன் ஆசையா சொல்லுச்சாம்.

அத கேட்ட குரங்கு இவ்வளோதான உன் ஆசை சொல்லி ரெமோ காதுல ஏதோ சொல்லுச்சாம். அதை கேட்ட ரெமோ ரொம்ப சந்தோசம் ஆகிடுத்து.

அடுத்த நாள் ரெமோ சந்தோசமா பேபி சோப்பு போட்டு குளிச்சிட்டு இருந்ததாம். அங்க வந்த யானை உனக்கு எப்படி பேபி சோப்பு கிடச்சுது சொல்லி கேட்டுதாம். அதுக்கு யானை காதுல ரெமோ அந்த ரகசியத்த சொல்லுச்சாம்.

குரங்கு ரெமோ கிட்ட என்ன ரகசியம் சொல்லுச்சி? ரெமோ யானை கிட்ட என்ன சொல்லுச்சி? அட.... உங்கள மாதிரிதான் நானும் ஒட்டு கேக்க முயற்சி பண்ணேன். அதுங்க ரொம்ப மெதுவா பேசினதுல ஒன்னும் கேக்கல. அதனால் குரங்கு, ரெமோ மற்றும் யானை ஆகிய மூன்று விலங்குகளையும் இந்த தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்.... அவர்கள் எழுதும்போது சோப்பு கிடைத்த ரகசியத்தை தெரிந்துகொள்ளவும். இப்போ நீங்க உங்க வீட்டுக்கு (ப்ளாக்) போலாம்...


டிஸ்கி :  இதுக்கு மேல தொடர் பதிவுக்கு யாரவது கூப்பிடுவிங்க?