Friday, September 23, 2011

காதல் பதிவர்கள் - புரியாத புதிர்

முஸ்கி : உண்மையாவே சந்தேகம். அதான் ப்ளாக்க தூசி தட்டிட்டேன். இது அதிகபிரசங்கிதனம் தான் இருந்தாலும் சந்தேகம்னு வந்தா கேட்டுடனும். நான் மட்டும் தான் இப்படி எல்லாம் எழுதரேன் அதனால என்னை தான் சொல்லி இருக்க அப்படினு குதிக்காதிங்க செல்லம்ஸ். உங்களை மாதிரி நிறைய பேரு இருக்காங்க. ஓவர் டூ டாப்பிக்.

லிவ்விங் டூகெதர்ல ஒரு பொண்ணும் பையனும் பிடிச்சி ஒன்னா இருந்தா தப்பு அப்படினு நாம எல்லாம் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டோம். ஆனா நம்மள சேர்ந்த பல பேரு கலை, கவிதை, ரசனை, இலக்கியம் சொல்லி அதைவிட மோசமா எழுதலாமா. அவங்க வீட்டுகுள்ள செய்யரத எல்லாம் நாம கடை போட்டு விக்கரோம்.

கவிதைன்னு சொல்லி காமத்த கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தரிங்க. என்னனனன.. வார்த்தையில் வர்ணம்பூசி அதோட வக்கரத்தை குறைத்து காட்டறிங்க. பொண்ணு எழுதினா பையனும் பையன் எழுதினா பொண்ணுங்களும் ஆஹா.. அருமை அப்படின்னு வெக்கபட்டுகரிங்க. என்ன சார்? காமம் வாழ்வில் ஒரு பாகம் அதை ஏன் மறைக்கனும் அப்படினு கேக்கரிங்களா? அப்போ நாளைக்கு எல்லாரும் டெய்லி நைட் வீட்டுல நடக்கரத வீடியோ பிடிச்சி பாருங்க நான் காதலை எப்படி பொழியரேன்னு கடை வைப்பிங்களா? உங்களுக்குன்னு சில விஷயங்கள பர்சனலா வச்சிக்க மாட்டிங்களா?

கோபத்தின் உச்சியில் இருந்த என் காதலியின் இதழ்களை தடவி பின்னர் அவள் கழுத்தில் விரல்களால் கோலம் வரைந்து அங்கிருந்து கீழ் நோக்கி....... இப்படின்னு புள்ளி வச்சி நிறுத்தரிங்களே அப்படினா படிக்கரவங்களும் அதோட கற்பனை நிறுத்திபாங்களா இல்லை அதுக்கு மேல அவங்க யோசிக்கனும் அப்படினு தான் நீங்க எல்லாம் எழுதரிங்களா? பசங்க எழுதரதுகூட பரவாயில்லை போல சில பொண்ணு கவிதையா பேசரேன் சொல்லி முகம் சுளிக்கிர மாதிரி எழுதரது இருக்கே.. அப்பா சாமி... அதிலும் சில பொண்ணு, பையன் கோவமா எழுதர அப்போ தான் அவங்க மனசுல எவ்வளவு வக்கரம் இருக்குனு தெரியும். என்னாங்க சார்/மேடம் நீ மட்டும் என்ன எழுதி கிழிக்கிறியா? நான் ஒன்னும் நல்லவன், நல்லவள் அப்படினு போர்வை போத்திட்டு எழுதலையே சார் / மேடம். 

பிடிச்சா படி இல்லைனா மூடிகிட்டு போ அப்படினு ஒரு மொக்கையா பதில் சொல்லாதிங்க. நீங்க நல்லா எழுதறிங்க அப்படினு நம்பிதான உங்களை பின் தொடர்கிறோம். ஆனா நீங்க அப்போ அப்போ இது மாதிரி பண்ணா எப்படிங்க? ஆண் பதிவர்களே உங்களை பின்தொடரும் பெண் பதிவர்களை மட்டும் மனசுல வச்சி எழுதாதிங்க. பெண் பதிவர்களே உங்களை பின்தொடரும் ஆண் பதிவர்களுக்கா மட்டும் எழுதாதிங்க. சில பேரு குறிபிட்ட சிலருக்காக ப்ளாக் எழுதராங்க அவங்களை விட்டுடலாம்.

இந்த பதிவு போட்டதால காதல் கவிஞர்கள் (இருபாலரும்) செயற்குழு கூட்டி என்னை கிழி கிழின்னு கிழிப்பிங்க. பரவாயில்லைங்க, ஆனா கொஞ்சம் டீசண்டா கிழிங்க. இதே பதிவை நடை மாத்தி எழுத ரொம்ப நேரமாகாது. உன்கூட இருக்கவனும் தான் அப்படி எல்லாம் எழுதரான் சொல்லுவிங்க. இது அவனுங்களுக்கும் சேர்த்துதான்... :)

டிஸ்கி : இதை உங்களோட ஒரு நேர்மையான ரசிகனின் அதங்கமா எடுத்துக்கரதும் இல்லை உங்களை எல்லாம் வம்பு இழுக்கரதா நினைச்சி பொங்கி எழரதும் உங்கள் விருப்பம். நன்றி!!

.

Tuesday, August 02, 2011

மூன்று முகம்


எழுத மேட்டர் இல்லாம வெட்டியா இருக்க விஷயத்த தெரிஞ்சிகிட்டு என்னை தொடர் பதிவுக்கு அழைத்த மாணம் கெட்ட வெறும்பயலை காறி துப்பிட்டு பதிவுக்கு போலாம் வாங்க. இன்னும் துப்பாதவங்க எல்லாம் போய் துப்பிட்டு வாங்க ஒன்னும் அவசரமில்லை. ஆனா அங்க போய் ஓட்டு போடாதிங்க அப்புறம் அது வேற பிரபலமாகி அதை படிச்சி நாலு பேரு நாண்டுகிட்டு சாவான். அந்த பாவம் உங்களுக்கு ஏன்.


1. விரும்பும் 3 விஷயங்கள்

அ. தொடர் பதிவை ஒழிக்கனும்.
ஆ. டெரர்கும்மி குரூப்ல ஒருத்தவனாவது உருப்படனும்.
இ.  இதையும் படிக்க வந்த உங்களுக்கு கோவில் கட்டனும்.

2. விரும்பாத 3 விஷயங்கள்

அ.  நான் கேக்காம அட்வைஸ் பண்றது.
ஆ. அடுத்தவன் பிரைவசியில் எட்டி பார்ப்பது.
இ.  இப்போ எனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது கேட்டு அதை நீங்க செய்ய போறிங்களா? இல்லை தான.. அப்போ உங்க கிட்ட இதை எல்லாம் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.

3. பயப்படும் 3 விஷயங்கள்

அ. பல நாக்கு மனிதர்கள்.
ஆ.செல்வாவின் கதைகள். 
இ. எனக்கு முன்னாடி ரமேஷ்க்கு கல்யாணமாகிடுமோ

4. புரியாத 3 விஷயங்கள்

அ.  இருபது வருடம் வளர்த்த பெற்றோரை விட இன்று பார்த்த யாரோ ஒருவன் / ஒருவள் அதிக நெருக்கமா மாறிவிடுவது
ஆ. இன்னும் பன்னிகுட்டி ராம்சாமி உயிரோட இருப்பது.   
இ. பிரபஞ்ச இரகசியம்.

5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 * 2 பொருட்கள்

அ.  டேபிள் தெரியாத அளவு பேப்பர்ஸ்.
ஆ. மொபைல், பர்ஸ், விசிட்டிங் கார்ட் பாக்ஸ். 
இ.  சிடி, காண்ட்ராக்ட் கோப்புகள். 

6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்

அ. சந்தானம் காமடிஸ். 
ஆ. என் புகைப்படம். 
இ. புலியை பார்த்து சூடு போட்டு கொள்ளு சில பதிவுலக பூனைகள்.

7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்

அ. இதுக்கு நக்கலா என்ன பதில் போடலாம்னு ரோசிக்கிறேன். 
ஆ. ஒன்னும் தோனாம தலைய சொறியறேன்.
  
இ. இப்போ காத சொறியரேன். (3 போதுமா?)


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. கேட்ட கேள்விக்கு சீரியஸாக பதில் சொல்ல 
ஆ. கப்பல் ஓட்டுவதற்க்கு.
இ. பிளைட் ஓட்டுவதற்க்கு. 

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்

அ. சூடான தோசையுடன் மிளகாய் சட்னி அல்லது தக்காளி சட்னி
ஆ. பருப்பு சாம்பாருடன் வருத்த கோழி கறி / சுருள வருத்த பாகற்காய் 
இ. சாப்பிட கூடைய அனைத்து உணவு வகைகள். 

12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

அ. மச்சி! நீ வேலை செய்யாம பளாக் பக்கம் சுத்திகிட்டு இருந்தன்னு உன்னை வேலைவிட்டு தூக்கிடாங்கடா. 

ஆ. பனங்காட்டு நரி புதுசா பதிவு போட்டு இருக்கான். 

இ.  (ஒன்னும் தோனவில்லை.... கொஸ்டின் பாஸ்)


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்

அ. சத்தம் இல்லாத தனிமை வேண்டும்...
ஆ. ஒவ்வொறு பூக்களுமே
இ. ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து போனாளே


14. பிடித்த 3 படங்கள்

அ. ஜெயம்கொண்டான் 
ஆ. ரஜினி படம்.
இ. புதையல் தேடும் படம்.


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்

அ. உயிர் 
ஆ. நக்கல் 
இ. உங்க அன்பு 


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்

அ. யாருமில்லை
ஆ. யாருமில்லை
 
இ. யாருமில்லை 

Thursday, July 21, 2011

தலைப்பு தெரியாது

சின்ன சின்ன ஆசை : ஆள் நடமாட்டம் இல்லாதா பச்சை பசேல் என்ற காடு. சூரிய ஒளி கூட எட்டி பார்க்காத ஏகாந்தம். பறவைகளின் ஒலியும், வண்டுகளின் ரீங்காரம், மிருகங்களின் கர்ஜனையும் மட்டும் எனக்கு துனையாக.

இரவில் வெட்ட வெளியில் பக்கத்தில் பற்ற வைத்த நெருப்பை மட்டும் துனையாக கொண்டு உறங்க வேண்டும். காலையில் சூரியனின் இளம் கதிர்கள் என்னை துயில் எழுப்ப வேண்டும். அருகில் உள்ள அருவியில் உடல் குளிரும் வரை ஆனந்த குளியல். பின்னர் கரை ஏறி சூரியனின் இளம் சூட்டின் கதகதப்பில் உடல் காய வேண்டும்.

அங்கு இங்கு உலாவும் குட்டி விலங்குகளை வேட்டையாடி நெருப்பில் சுட்டு ஆற்று படுகையில் உள்ள பாறயில் படிந்து இருக்கும் உப்பை தடவி அதை சுவைக்க வேண்டும். சில நேரம் காட்டு விலங்குகள் என்னை துரத்தவும் வேண்டும் தப்பியோடி தஞ்சம் புக மறைவிடமும் வேண்டும்.

கொட்டும் மழையில் நனைய வேண்டும் உடல் குளிரில் கண்ணில் தெரியும் குகையில் ஒதுங்க வேண்டும். உள்ளே இருந்து பசி இல்லாத சிங்கம் தலை நிமிர்த்தி பார்த்து மீண்டும் துயில் தொடர வேண்டும்.
 
இந்த நரகத்தின் நாகரிகம் மறந்து பதிவுலகின் பாலிடிக்ஸ் துறந்து.
 
மீண்டும் ஒரு முறை ஆதிமனிதனாய்... :)
 
டிஸ்கி : இந்த காட்டில் அரியவகை ஜெந்துக்கள் டெரர் கும்மி குரூப்பும் வசிக்க அனுமதி உண்டு.
 
.

Sunday, July 10, 2011

கலி முத்தி போச்சி....

உறங்கி கொண்டு இருந்த கணேஷ் திடுகிட்டு விழித்தான். அருவமாக எதோ ஒன்று அவன் படுக்கைக்கு அடுத்து நிற்பதை போல் உணர்ந்தான். எழுந்து விளக்கை போடலாம் என்று நினைத்த போது விளக்கை போட வேண்டாம் என்று யாரோ கூறுவதை போல் உணர்ந்தான். என்ன நடக்கிறது என்று யோசிக்க முயற்சி செய்த நேரத்தில் அவன் தலையை யாரோ வருடுதுவது போல் உணர்ந்தான்.

உடலில் உள்ள ரோமகால் எல்லாம் சில்லிட்டு அடிவயிற்றில் ஒரு பயத்தினை உணர்ந்த வேளையில் அவன் நினைவு தவறியது. கண்விழித்து பார்த்தபொழுது அவன் ஒரு முற்றிலும் புதிய உலகில் இருந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு உயிரினமும் இல்லை ஆனால் உணர்வுக்கு எட்டிய தூரத்தில் பல அருவங்கள் உலவி கொண்டு இருப்பதை உணர முடிந்தது.

அருகில் உணர்ந்த ஒன்றை கூப்பிட நினைத்தான் அது தானாக அருகில் வந்தது. என்ன வேண்டும் என்ற கேள்வி அது கேட்பது போல கணேஷ் மனதில் தோன்றியது. நீங்கள் யார்? நான் எங்கு இருக்கிறேன் என்று கேட்க்க நினைத்தாதும். நீங்கள் அல்ல நாம் யார் என்று கேள் என்ற பதிலை அது அவன் மனதில் பதிய வைத்தது. அப்போது தான் கணேஷ் கவனித்தான் அவனும் அருவமாக மாறி இருந்தான். இங்கு ஒலிகள் இல்லை எல்லா உரையாடல்களும் நேரடியாக மனதில் இருந்து நடந்து கொண்டு இருக்கிறது.

அது மேலும் தகவல்களை பறிமாரியது என் அடையாளம் XXBBAC நீ XXYYZZ ஒரு முக்கிய சோதனைக்காக உன்னை பூமிக்கு அனுப்பி வைத்தோம். அங்கு உன் பெயர் கணேஷ். சோதனை முடிந்ததால் இங்கு திரும்ப அழைக்கபட்டாய். நாம் இப்படி தகவல்களை பறிமாறிகொள்ள நமக்கு கனிசமான அளவு எரிபொருள் தேவை படுகிறது. அது பூமியில் உள்ள மனிதர்களின் மூளையில் இருந்து உண்டாகும் மின்சார சக்தியால் மட்டுமே உண்டாக்க முடியும்.

அதற்க்காக நாம் ஒரு குறிபிட்ட இடைவெளியில் பூமியில் ஒரு செல் உயிரிகளை விதைத்து வளர்க்கிறோம். அது பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதானாகி பின்னர் நானோ மனிதன் என்ற நிலையை அடையும் பொழுது நாம் மொத்தமாக பூமியில் அழிவை உண்டாக்கி அவர்கள் மூளைகளை அறுவடை செய்வோம். செல்கள் எந்த அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது என்று பார்க்க நமது இனத்தை சேர்ந்த ஒருவரை பூமிக்கு அனுப்பி அவார்கள் மூளையில் உள்ள தகவல்கள் சேகரித்து வந்து பரிசோதிக்கிறோம்.

ஆனால் இந்த முறை விதைத்த செல்கள் எல்லாம் வீணாகிவிட்டது. நாம் எத்தனையோ வழிகளை உபயோகித்தும் கோபம், பொறாம், வஞ்சம் இப்படி பல களைகள் அவர்கள் செல்களில் கலந்து இருப்பது தெரிகிறது. அதனால் வேகமாக இந்த பூமியை அழித்துவிட்டு புதிய பூமியை படைக்க வேண்டும் என்று கூறி கொண்டே recycle என்ற பட்டனை தட்டியது ரீசைக்கிள் என்று அழைக்கபட்ட தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும் அந்த எந்திரம் பூமியை தன்னை நோக்கி இழுக்க தொடங்கியது.....

.

Sunday, May 29, 2011

கஷ்ட்டமர் கேர்


உலகத்திலே மிக சிறந்த பேங்க், தொலைபேசி நிறுவனம் எல்லாம் இங்கதான் இருக்குப்பா.. அதுலையும் அவங்க பன்ற வாடிக்கையாளர் சேவை… சான்ஸே இல்லை ஒண்ணு நீங்க சாகணும் இல்லை அவங்க பேங்க்க விட்டு போகணும். அதுவரைவிட மாட்டாங்க.

பேங்க்குக்குள்ள போனதும் கஸ்டமர்கேர் அப்படினு சொல்லிகிட்டு ஒரு அம்மணி உக்காந்து இருக்கும் . இவங்க வேலை, தப்பி தவறி எவனாவதுஉள்ள வந்தா அவனை சிரிச்சிகிட்டே செருப்பால அடிக்கிறது. அடிச்சி தொரத்திட்டு மறுபடியும் வெட்டியா உக்காந்து கம்ப்யூட்டர்ல நோண்டரது.

மேடம்! இந்த சந்தேகத்தைகொஞ்சம் விளக்க முடியுமா? சாரி சார் இதை நீங்க கால் செண்டர்ல தான் கேக்கனும். அவங்க லைன் பிஸியாவே இருக்கு. இல்லையே இப்போ பாருங்க அப்படினு சொல்லிட்டு அந்த அம்மனி முயற்சிபண்ணுச்சி 15 நிமிஷ‌ம் ஆச்சி அப்பவும் லைன் கிடைக்கவில்லை. பாத்தீங்களா இப்போ நான் என்ன செய்யரது கேட்டா சாரி சார் அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது அப்படினு ஒரு பதில்.

இதை சொல்லவா உன்னை அங்க சம்பளம் கொடுத்து உக்காரவச்சி இருக்கான்? இதை சொல்லவா காலைல மேக்கப் பண்ணிட்டு கிளம்பி வந்து உக்காந்து இருக்க? வாடிக்கையாளர் பிரச்சனை தீர்க்க முயற்சி பண்ணுங்க.. வாடிக்கையாளர தீர்த்து கட்ட முயற்சி பண்ணாதிங்க.

சரி இதுங்க கிட்ட பேசினா வேலைக்கு ஆகாது சொல்லி உன் மேனேஜர் மடையனை கூப்பிடு சொன்னா அவரு வருவாரு எதோ மொத்த துபாய் விலைக்கு வாங்கி போட்டவரு மாதிரி. என்ன சார் பிரச்சனை கேப்பாரு. இதாண்டா நாயே அப்படினு விளக்கினா சார் இதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது அப்படினு பதில் சொல்லுவாரு. சரி நான் புகார் பண்ணனும் இ-மெயில் ஐ.டி கொடு அப்படினு கேட்டா அதை கால் செண்டர்ல கேளுங்க சார் அப்படினு பதில் சொல்லுது அந்த மேனேஜர் மடையன். இப்போ இப்படி பேசுவானுங்க. நாம இதுங்க தொல்லையே வேண்டாம் அப்படினு அக்கவுண்ட் க்ளோஸ் பண்ணிட்டு போனா அப்போ வந்து ஆள்மாத்தி ஆள் பிச்சை எடுப்பானுங்க. 

இவனுங்க நோகாம ஏ.சி.ல உங்காந்து நோம்பு கும்பிட எவனோ வந்து நம்ம கிட்ட கெஞ்சிகிட்டு நிப்பான். இதுங்க இப்படியே ஒரு ஒரு கஸ்டமரா  துரத்திவிட்டுஅப்புறம் வருமானம் இல்லைனு ஓனர் கடைய மூடினதும் அடுத்த கடைய பார்த்து போய் மானம், ரோஷம்,வெக்கம் எதுவுமே இல்லாம எனக்கு கஸ்டமர் கேர்ல 10 வருஷம் அனுபவம் அப்படினு சொல்லி சம்பளத்துக்குபேரம் பேசுங்க. இதுங்க எல்லாம் எப்போ தான் திருந்துமோ…. :(

.

Tuesday, March 29, 2011

ஹலோ பொண்டாட்டி கூட வாக்கிங் போறவரே..!!

வணக்கம் மக்களே! இன்னைக்கு நம்ம கிட்ட சிக்கி இருக்கது பொண்டாட்டி கூட வாக்கிங் போறாவங்க. அதுவும் முக்கியம ப்ளட்பார்ம் மேல போறவங்க.

ஏண்டா வெண்னைகளா!! உன் பொண்டாட்டிய கூட்டிகிட்டு நீ வாக்கிங் போ. ஆனா வழியவிட்டு போ. எதுக்குடா எங்க வழிய அடச்சிகிட்டு போறிங்க? எதோ உங்க விட்டு எஸ்டேட்ல நடக்கர மாதிரி. அதுவும் கொஞ்சம் ஓரமா போய் தொலையலாமில்ல? நாடு ப்ளட்பார்ம்ல நடப்பாரு. இவரு பாதி வழி அடச்சிபாரு. இவரு பொண்டாட்டி மீதி அடச்சிக்கும்.

இரண்டு பேரும் ஜோடியா பக்கத்து வீட்டு தாத்த எதிர்த்த விட்டு பாட்டிய கூட்டிகிட்டு ஓடி போனத பத்தி ரொம்ப சீரியஸா பேசிகிட்டு போவிங்க. நாங்க எல்லாம் எதோ பாதுகாப்பு படை மாதிரி உங்க பின்னாடியே எப்போடா அய்யா வழி விடுவாரு சொல்லி வரனும்.

சரி இந்த எருமை மாடுங்க வழிவிடாது சொல்லி தப்பி தவறி எக்ஸ்கியூஸ் மீ சொல்லிட கூடாது. ஏதோ அவரு பெட்ரூம்ல வந்து எக்ஸ்கியூஸ் மீ சொன்ன மாதிரி கேவலமா ஒரு லுக் விட்டு அப்புறம் இவரு வழிவிடுவாரு. உங்களுக்கு பின்னடி ரொம்ப பக்கத்துல செருப்பு சத்தம் கேட்ட கொஞ்சம் திரும்பி பாருங்க. யாராவது தொண்டைய செருமும் சப்தம் கேட்ட வழி விடுடா நாயே சொல்றாங்க புரிஞ்சிகிட்டு வழிய விட்டு தொலைங்க.

கேக்கனும் நினைச்சேன்... அது என்னடா குடிக்காமலே தோள் மேல கைய போட்டுகிட்டு ஆடி ஆடி நடக்கறிங்க?  என்னாது அது? அதான் லவ்வா? இல்லை இரண்டு பேரும் குடும்பத்தோட போய் குடிச்சிட்டு வறிங்களா? லெப்டல கொஞ்சம் வழி இருக்கே நாம ஓவர் டேக் பண்ணி போலாம் பார்த்தா அப்போ தான் இவரு லெப்ட்ல ஆடுவாரு. சரி.. ஏழரை லெப்ட்ல போய்டுத்தே சொல்லி நாம ரைட் எடுத்தா அப்போதான் இவரு ரைட்ல வருவாரு. 

இந்த பொழப்புக்கு ரமேஷ் மாதிரி மூனு பாட்டு லிங்க் போட்டு இதுவும் பதிவு நானும் பதிவரு சொல்லி காலத்த ஓட்டலாம். ஏன்னா உங்களை எல்லாம் கேரளாவுல கூட அடிமாட சேர்த்துக்க மாட்டாங்க.

.

Sunday, February 06, 2011

டேமேஜர்.... கிர்ர்ர்ர்ர்

கடவுள் படச்சதுல மிக அற்புதமான விஷயம் மேனேஜர். எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா? காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது. அதே கோவத்துல கார்ல ஏறி உக்கரது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல என்ன கேள்வி கேக்கலாம் யோசிக்கிறது. உள்ள வந்ததும் ஒரு வேலை கொடுப்பாரு அதை செய்ய ஆரம்பிக்கிறதுகுள்ள ஒரு நிமிஷம் இங்க வாங்க சொல்லுவாரு. அரை மணி நேரம் ப்ளேடு போடுவாரு. சரி சீட்டுக்கு போங்க சொல்லுவாரு. அடுத்த அஞ்சி நிமிஷத்துல. ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா... அரை மணி நேரமா என்னாங்க பண்ணிங்க? அப்போ வரும் பாருங்க கோவம்... ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னாடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்.

சின்ன லெவல்ல இருந்து படிப்படியா உழைச்சி மேல வந்தவன் எல்லாம் ரொம்ப ஆட மாட்டான். ஆன குத்து மதிப்பா படிச்சி MBA முடிச்சிட்டு நேரா மேனேஜர் சீட்டுல உக்கார்ர அறிவாளிகள் இருக்காங்க பாருங்க. அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் எவனாவது வாயில நொழையாத ஒரு வெள்ளைகாரன் பேர சொல்றது. அவன் என்ன சொல்லி இருக்கான் சொல்லி தெரியுமா கேட்டு நம்ம உயிர வாங்கரது. அந்த லூசு என்ன சொல்லி இருந்தா எனக்கு என்ன? அப்படி என்னடா கருத்து சொல்லி இருக்காரு கேட்ட மரம் வெட்ட ஒரு மணி நேரம் கொடுத்தா அதில் 30 நிமிடம் கோடாலிய கூர்படுத்த செலவு செய்யனுமாம். அது மாதிரி வேலை செய்யரதுக்கு முன்னடி ப்ளான் பண்ணி செய்யனுமாம். இது நம்ம ஊர்ல இருக்க சாதரண மரம் வெட்டரவன் தினம் செய்யரது. இந்த விஷயத்த ஒரு வெள்ளகாரன் சொல்லுவான் அதை இந்த வெளக்கெண்னை ஆயிரம் ரூபாய் கொடுத்து புக்க வாங்கி படிச்சிட்டு வந்து பெரியா ராக்கெட் விஞ்ஞானி ரேஞ்சிக்கு பேசும்.

அது மாதிரி மீட்டிங் வச்சி வேலை நேரத்துல வெட்டியா எதாவது பேசும். போன வாரம் ஏன் நீங்க அதை தப்பா பண்ணிங்க? சாரி சார் தெரியாம நடந்து போச்சி இனி கவனமா இருக்கேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் இனி செய்ய மாட்டிங்க அது வேற விஷயம். அப்போ ஏன் தப்பு செஞ்சிங்க? நாம பதில் சொன்னாலும் ஒத்துக்காது. சும்மா கூட கூட பேசாதிங்க. தப்பு செஞ்சிட்டு எதிர்த்து வேற பேசறிங்க அப்படினு திட்டும். நான் எங்கடா நாயே எதிர்த்து பேசினேன்? நான் பேச ஆரபிச்சா நீ பி.பி ஏறி செத்து போய்டுவடா அப்படினு மனசுகுள்ள நினைச்சி நம்ம பி.பி தான் ஏறும்.

என் நண்பன் நரி சார்பா உங்களுக்கு ஒன்னு சொல்றேன். வேலை கொடுத்தா முழு விபரம் கொடுங்க. அரை குறையா டீடேய்ல் சொல்ல வேண்டியது அப்புறம் ஏன் தப்பா செஞ்ச திட்ட வேண்டியது. எப்போ தான் சரியா செய்விங்க சொல்லி கேள்வி வேற. நீ எப்போதாண்டா உனக்கு என்னா வேணும் கரைக்டா கேப்ப? தப்பி தவறி அவரு முக்க உடைச்சிடிங்க அவ்வளவு தான் உங்களை பார்த்து நக்கலா இரு சிரிப்பு சிரிப்பாரு. அதுக்கு அர்த்தம் அப்ரைசல் வரட்டும் உனக்கு ஆப்பு வைக்கிறேன்.

இந்த அப்ரைசல் அப்படின்ற விஷயத்த எந்த மகான் கண்டு பிடிச்சாரு தெரியவில்லை. அவரு பாவம் வேலை செய்யரவன திறனாய்வு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுக்க அவரு கண்டு பிடிச்சாரு. ஆன இந்த சாவுகிராக்கிங்க அதை வச்சி சிங்கத்த எல்லாம் நாய் மாதிரி குரைக்க சொல்லுது. ஜால்ரா போடற நாய் எல்லாம் சிங்கம்னு சொல்லி எல்லார் முன்னாடி பாராட்டுது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா.....

இந்த லூசுகளுக்கு மேல ஒரு பெரிய லூசு இருக்கும் அந்த லூசு மாச மாசம் இந்த லூச கூப்பிட்டு ரிப்போர்ட் கேக்கும். நம்ம லூசு கரைக்டா ரிப்போர்ட் பேர மட்டும் நோட்டுல எழுதும் (இது எதோ பெருசா நோட்ஸ் எடுத்து கிழிக்கிது அது சந்தோஷபடும்). நம்ம கிட்ட வந்து இந்த ரிப்போர்ட் வேனும் சொல்லும். நாமலும் கேனதனமா இவன் பண்ண கொடுமை எல்லாம் மறந்து ராத்திரி பகலா கஷ்ட்டபட்டு ரெடி பண்ணி கொடுப்போம். நம்ம முன்னாடியே அதை கொண்டு கொடுக்கும். பெரிய லூசு சொல்லும் Well done! you did a wonderful job. u all should take him as a example அப்படினு பாரட்டும். இந்த நாய் வாய் எல்லாம் பல்லா சிரிக்கும் வாய் தவறி கூட நான் பண்ணல அதோ ஒரு கேணை நிக்கிறன் பாரு அவன் தான் பண்ணான் சொல்லாதூ. ஆனா ஏதாவது தப்பு இருக்கே கேட்டா அதே மீட்டிங்ல என்னாங்க பார்த்து பண்ண மாட்டிங்களா கேக்கும்.

மேனேஜர்கள் பற்றி பல ப்ளாக் அறிஞர்கள் கருத்து. மேனேஜர் எல்லாம் வைக்க போர்ல படுத்து கிடக்கிற நாய் மாதிரி விட்டு தள்ளுங்க. விட்றா மச்சா அவன் தண்ணி குடிக்கிர அப்போ தொண்டை அடச்சி சாவான். ஒரு நாள் பூமா தேவி சிரிக்க போறா மேனேஜருங்க மட்டும் உள்ள போக போறானுங்க இப்படி பல கருத்துகள்.

ரமேஷ் & மாலுமி : எண்டா நாயே! பன்னி, பரதேசி இது எல்லாம் ஒரு பொழப்பாடா உங்களுக்கு (இவனுங்க இரண்டு பேரும் மேனேஜர்)

டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள மேனேஜர் இருக்கலாம் அவர்களுக்கு திட்டுவிலக்கு அறிக்க படுகிறாது.

.

Thursday, January 13, 2011

உண்மை சம்பவம்... :(

ராத்திரி 12.30 நான் சிவனேனு அருண் ப்ளாக்ல கமெண்ட் போட்டு விள்ளாடிட்டு இருந்தேன். அப்போ இந்த பன்னிகுட்டி சொல்லுச்சி சரி சரி போயி, தூங்கு, காலைல சிக்கிரம் எந்திரிச்சு ஆபிசு போக வேணாமா? நாளைக்காவது டைமுக்கு வரலேன்னா செருப்பால அடிப்பேன்னு பாசு இன்னிக்கு திட்டுனத மறந்துட்டியா? அப்படினு. அட நாமதான் தினம் அரை மணி நேரம் முன்னாடி ஆபீஸ் போய்டுவமே அதுவும் இல்லாம நல்ல வாய்ல சொன்னாலே பலிக்காது. இந்த பன்னிகுட்டி பல்லு விளக்கி 6 மாசமாச்சி இவன் சொல்லி எங்க பலிக்க போகுது  நினைச்சி தூங்கிட்டேன். ஆன பாருங்க இந்த பன்னிகுட்டி ஒரு கற்புகரசன் போல (நாய் சூனியம் வச்சிடான்).

காலயில கடமை தவறாம 5.20 அலாரம் அடிச்சிது. நான் தான் அது தலையில் தட்டிட்டு சும்மா கண்ண மூடினேன். திரும்ப கண்ண திறந்து பார்த்தா 5.50...அவ்வ்வ்வ் ஆபீஸ் வேன் சரியா 6.01 போய்டும் (அந்த டிரைவர் டிஜிட்டல் க்ளாக்கு பொறந்து இருப்பான் போல). பஸ் ஸ்டாப்  என் வீட்டுல இருந்து நடந்து போனா 15 நிமிஷம் ஓடுனா 10 நிமிஷம். பெட்ல இருந்து எழுந்து ட்ரெஸ் மாத்தி, ஷூ போட்டு, லிப்ட் வெய்ட் பண்ணி கிரவுன்ட் ப்ளோர் வர 5 நிமிஷம் (என்னாது குளிக்களையாவா.... யோ!! பல்லு விளக்கவே டைம் இல்லை). எப்படி பார்த்தாலும் 15 நிமிஷம் வேணும்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா வேலை ஆகாது. சரி பஸ்ல போலாம் முடிவு பண்ணேன். பஸ் எத்தனை மனிக்கு... 6.40. சரினு போய் ஹீட்டர் ஆன் பண்ணிட்டு வந்து மறுபடி படுத்தேன் (அட தண்ணி சூடாக 30 மினிட்ஸாகும்).... 6.20 அலாரம் வச்சிட்டுதான் படுத்தேன்.

என்ணடா ரொம்ப நேரமாகியும் அலாரம் அடிக்கில டவுட்ல டைம் பார்த்தா 6.30. அலாரம் எடுத்து பார்த்தா 6.20 வைக்கிறேன் சொல்லி 5.20 வச்சி இருக்கேன்... மறுபடியும் ரன்னிங் 2 மினிட்ஸ்ல குளிச்சி, 1 மினிட்ல பல்லு விளக்கிட்டு நேத்து போட்டு இருந்த ட்ரெஸ் எடுத்து மாட்டிட்டு ஷூ கூட போடாம ஓடி வந்து லிப்ட்க்கு வெயிட் பண்ணா அந்த லிப்ட் அப்போதான் எதோ கல்யாணமான புது பொண்ணு மாதிரி ஆடி அசஞ்சி வருது. ஒரு வழியா கீழ வந்து பார்த்தா நம்ம நல்ல நேரம் ஒரு டாக்ஸி வந்தது. உயிர் போனாலும் பரவாயில்லை சொல்லி டாக்ஸி குறுக்குல பாஞ்சி அவனை நிறுத்தி பஸ் ஸ்டேண்ட் சொன்னேன்.

அவன் ரொம்ப நல்லவன் போல நம்ம அவசரத்தை புரிஞ்சிட்டு வேகமா போக முயற்சி பண்ணினான். ஆனா நம்ம கெரகம் ட்ராபிக் ஜாம்.... மறுபடியும் சத்திய சோதனை. வேற ரூட் எடுக்க சொல்லி போன அங்க சிக்னல் போட்டான் (என்னால முடியலை). சிக்னல் க்ராஸ் பண்ணி பஸ் ஸ்டேன் வந்தா சரியா 6.40. டிக்கட் கவுண்டர் போகாம நேர பஸ் நிக்கற இடத்துக்கு போய் பஸ்ல ஏறி ஒரு 2 மின்ட்ஸ் ப்ளீஸ் சொல்லிட்டு வேகமா டிக்கட் கவுண்டர் வந்த இன்னைக்கு பார்த்து பெரிய வருசை. ஒரு வழியா டிக்கட் எடுத்து வந்து பார்த்தா பஸ் போய்டுத்து (இவனும் டிஜிட்டல் க்ளாக்கு பொறந்து இருப்பான் போல.. ராஸ்கல்).

அடுத்த பஸ் எப்போ கேட்டா 8 மணிக்கு சொல்றானுங்க. ஒன்னே கால் மணி நேரம் இருக்கு சரி லைட்டா சாப்பிடலாம் சொல்லி ஹோட்டல் போனேன். ஒரு ஸண்ட்விச் & டீ சொன்னேன். அவரு எதோ  திருப்பி திருப்பி கேக்கராரு டென்ஷன்ல ஒரு மண்ணும் புரியலை நானும் எனக்கு தெரிஞ்ச எல்லா ஹிந்தி வார்த்தை யோசிச்சி பார்த்துடேன். அவரு நாலாவது வாட்டி கேட்ட அப்புறம் தான் புரியுது என்ன சண்ட்விச் வேனும் சொல்லி மலையாலத்துல கேட்டு இருக்காரு… இன்ஸல்ட்… ஒரு சிக்கன் சண்ட்விச் சொல்லி வாங்கிட்டு (டீய மறக்கல). வெளிய  வந்து ஸண்ட்விச் வாயில வச்சா ரமேஷ் பதிவ படிச்ச மாதிரி வாந்தி வருது. பிலிப்பினோ சண்ட்விச்சா மாத்தி கொடுத்து இருக்கான். வேகாத சிக்கன் எவன் திங்கறது…. தூக்கி குப்பைல போடு. டீய கையில எடுத்தேன், ஒரே முச்சில குடிச்சி முடிச்சேன் (அடிக்கிற குளிர்ல அது ஆரிபோய் ஐந்து நிழிஷமாச்சி)

எடுத்தேன் லேப்டாப்ப பஸ் ஸ்டண்ட்ல உக்காந்து என் சோக கதைய பதிவ எழுத ஆரம்பிச்சேன். சோகத்தை எல்லாம் சொல்லிட்டே டைம் பார்த்தா 7.45.. பஸ் நிக்கிற இடத்துக்கு போக 5 நிமிஷம் வேனும் இந்த பஸ்ஸும் போனா சங்கு தான். அதனால அப்படியே அடிச்சவரை ஸேவ் பண்ணிட்டு… மீ ஏஸ்கேப்.

பஸ்ஸுல ஏறி உக்காந்தா அந்த டிரைவர் அடிக்கிற குளிர்ல ஏசிய போட்டு விட்டான் (பனி கரடிக்கு பொறந்து இருப்பான் போல).  ஒன்றை மணி நேரம் குளிர்ல பயணம் பண்னி ஒரு வழியா 8 மணி ஆபீஸ்க்கு 9.30 வந்து சேர்ந்தாச்சி.

டிஸ்கி : யோ பட்டா!! என் சோக கதை இது. மவனே இங்க வந்து நீ பாத்ரூம் போன கதை எல்லாம் எதுக்குடா சொல்ற அப்படினு கேவலமா திட்டின. அப்புறம் நாளக்கு ஹோட்டல் சீக்கிரம் சாத்தி அதனால நான் சாப்பாட்டுக்கு பட்ட கஷ்டத்த பதிவா போடுவேன்... முடியலை மச்சி... :)

.

Monday, January 10, 2011

2010 - சில நினைவுகள்

வணக்கம்!! அன்பு நண்பர் கணேஷ் அன்போடு கேட்டு கொண்டதாலும், இவன் எழுதி கிழிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான் என்று இம்சை பாபு அவர்கள் மிக பாசத்தோடு சொன்னதாலும். அன்பு மச்சான் அருண் நான் காலில் விழுந்து கேட்டு கொண்டதால் என் பெயரை பதிவில் சேர்த்து தொடர்பதிவு எழுத அழைத்ததாலும் நான் (லைட்டா) 2010 ஐ திரும்பி பார்க்கிறேன் (என்ன ஒரு மண்ணும் தெரியலை).

சொந்த வாழ்க்கையை பொருத்தவரை கடந்த வருடம் அதிகம் பாதிப்பை கொடுத்த ஒரு வருடம் என்று எதிர்மறையாக எடுக்காமல். அதிகம் கற்று கொடுத்த வருடம் என்று மகிழ்ச்சி கொள்கிறேன். எதிரியின் கையில் மின்னும் வாளில் முகம் பார்த்து ரசிக்க கற்றால் போர்களமும் புன்னகை தேசம்தான். அதை பத்தி சொன்னா உங்களுக்கு ஒரு மண்ணும் புரியாது. அதனால நாம் நேர ப்ளாக் பக்கம் போலாம்.

போன வருஷம் நான் செஞ்ச ஒரே உருப்படியான உருப்படாத விஷயம். இந்த ப்ளாகர் ஐ.டி கிரியேட் பண்ணது. நாட்ட விட்டு ஓடி போடா நாயே சொல்லி துரத்தி அடிச்சதும் முழு நேர நண்பனா இருந்தது லாப்டாப் தான். ஆனா இப்போ சொல்லி முடிக்கிறதுக்குள்ள செஞ்சி முடிக்க தம்பிகள் செல்வா, எஸ்.கே, பிரசாத், சௌந்தர். என்ன பிரச்சனை வந்தாலும் கூட நின்னு தோள் கொடுக்க மச்சன் அருண், மாப்ஸ் தேவா (ரொம்ப நல்லவரு கார் எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்து கூட்டி போய் அவரு செலவுல சாப்படு வாங்கி தருவாரு). என்கிட்ட திட்டு வாங்கவே பொறந்து இருக்க மானம் கெட்ட ஜென்மங்கள் (க்ளோஸ் ப்ரட்ஸ்பா...) பன்னிகுட்டி, ரமேஷ், நரி, வெறும்பய. அட்வைஸ் பண்ணி வழி காட்ட அன்பு அண்ணன் ஜெய்குமார், தல வெங்கட், மங்கு & இம்சையரன் பாபு.

நம்ம பாபு பத்தி சொல்லியே ஆகனும். பாவம் அவரு ரொம்ப நல்லவரு, அன்பானவர். பிக்க முடியாதது எல்லாம் பீசா அப்படினு நம்பி சாப்பிடரவரு. நான் பபுள்கம் வாங்கினா கூட அதுக்குள்ள பாம் இருக்குமா பார்த்து சாப்பிடறவன். என்கூட நட்ப மெயிண்டேன் பண்ண அவருபடற பாடு இருக்கே..... :) . அப்புறம் உடன் பிறவா சகோதரிகள் திருமதி தேவா, திருமதி அருண், திருமதி வெங்கட். நானும் நானும் சொல்லி சொல்ற பேச்ச கேக்காம திறியற தங்கச்சி சுபத்ரா. ஆடு அருக்கர அப்போ ஏன் மச்சி என்னை கூப்பிடல சொல்லி என்னை அருக்க வர பட்டாபட்டி. அடேங்கப்பா பெரிய குடும்பம்பா...

இது இல்லாம நம்ம வேண்டபட்ட விரோதிங்க அனு, ரசிகன், பெ.சொ.வி,  கார்த்தி. நண்பர்கள் மாதவன், சமீர், நாகராஜசோழன், மாலுமி , ஷாலினி, அக்‌ஷயா (தேவா மகள்), ஹரினி (பாபு மகள்) இவங்க எல்லாருக்கும் நன்றி! முக்கியமா எனக்கு நல்ல பொழுது போக காரணமா இருந்த நானும் ரவுடி நானும் ரவுடி சொல்லி எதாவது வம்பு பண்ற பிரபலங்களுக்கும் நன்றி!!

இப்போ ஏன் இதை எல்லாம் சொல்லி எங்க உயிர எடுக்கர கேக்காதிங்க. நான் போன வருஷம் சாதிச்ச ஒரே நல்லா காரியம் இவ்வளவு நண்பர்கள் கிடைச்சது தான். இன்னும் பல பேரு இருக்காங்க ஆனா அவங்க பேரை எல்லம் இங்க சொன்னா இங்க இடம் பத்தாது (அட பாலிடிக்ஸ் வரும்ங்க.. சொன்னா புரிஞ்சிக்க மாட்டிங்களே)

சந்தோஷமான விஷயம் சொன்னா போரம் ஆரம்பிச்சி எங்களுக்குள்ளே அடிச்சிகிறது. சோகமான விஷயம் சொன்னா அடிச்சிகிட்டு இன்னும் எல்லா பயலும் உயிரோட இருக்கது. இந்த தொடர்பதிவின் வழியாக நான் போன வருடம் புண்ணியமா ஒரு ஆணியும் புடுங்கவில்லை என்று எனக்கு உணர்த்திய நண்ப துரோகிகளுக்கு நன்றி சொல்லி. இதை தொடர்ந்து எழுத

மானம், ரோஷம், சூடு சொரனை எதுவும் இல்லாத தில்லு முல்லு மற்றும் ப்ளாக் பிஸ்தா பட்டாபட்டி (கொய்யால எதாவது திட்டி பதிவு போட்ட அந்த ஆடு அருக்கர அப்போ உன்னை கூட்டி போக மாட்டேன்) அழைக்கிறேன்.

.