Friday, May 04, 2012

திறமை வரமா? சாபமா?

குழந்தைகளே சில நேரத்தில் திறமை கூட சாபமா மாறிவிடுகிறது அதை பற்றி தான் நாம இன்னைக்கு பார்க்க போகிரோம்.

ஊருக்குள்ள எத்திக்கல் ஹாக்கர் (Ethical Hacker) அப்படினு ஒரு சில பயபுள்ளைங்க இருக்கு. இவங்க வேலை ஹாக்கிங் தான் ஆனா ஹாக் பண்ணி உள்ளே போய் ஒன்னும் செய்ய மாட்டாங்க. இங்க இங்க எல்லாம் பாதுகாப்பு குறைவா இருக்கு இதை சரி பண்ணுங்கனு சொல்லி உங்களை எச்சரிப்பாங்க. இவங்களை பத்தி சுறுக்கமா சொன்னா நல்ல திருடனுங்க. ஒரு வீட்டில் நுழைந்து திருட முடியுமா பார்ப்பங்க. வெற்றிகரமா உள்ளே போய்ட்டா வீட்டு உரிமையாளரை கூப்பிட்டு பாருங்க இந்த ஜென்னல் உறுதியா இல்லை அது வழியா சுலபமா உள்ளே வந்துட்டேன் இதை மாத்துங்க அப்படினு எச்சரிப்பாங்க.

அமெரிக்க போன்ற நாடுகளிலும் வளரும் கார்பரேட் கம்பனிகளிலும் இவங்களுக்கு நல்ல வரவேற்ப்பு. அந்த நிறுவனங்களின் நெட்வெர்கில் ஏதாவது குறை இருக்கிரதா, டேட்டா பேஸ் செக்கியூரிட்டி, பயர் வால், ஸ்பாம் பாக்ஸ் இப்பாடி எல்லாத்திலும் எங்க ஓட்டை இருக்கு கண்டுபிடிக்க வேலைக்கு வச்சி இருக்காங்க. ஹாக்கர்களில் இரண்டு வகை உண்டு. அமெச்சூர் ஹாக்கர் (குறும்புகார பசங்க), புரபஷ்னல் ஹாக்கர்ஸ் (ஆபத்தான பயபுள்ளைங்க) இதில் எவன் ஹாக் பண்ணாலும் எல்லாரும் இவரு மூஞ்சியை தான் பார்ப்பாங்க இவரு தான் உக்காந்து நோண்டி சரி பண்ணுவாரு. சரி பண்ணதும் எல்லாரும் பாராட்டுவாங்க.

அப்படியே கேமராவை ஆப் பண்ணி ஆன் பண்ணா இவரை பார்த்து பாதி பேருக்கு பயம். இவரு கிட்ட இருந்து மெயில் வந்தா அதை ஓப்பன் பண்ண பயம் ஒரு வேலை ஏதாவது கோடிங் வச்சி நம்ம பாஸ்வேர்டை எடுத்துடுவானோ. ஏதாவது சி.டி, பென் டிரைவ் கொடுத்தா அதை சிஸ்டம்ல போட பயம். இதில் ஏதாவது ஆட்டோ இன்ஸ்டால் புரோகிராம் இருந்து நாம என்ன என்ன சாட் பண்ரோம் எல்லாம் அவருக்கு போகுமோ நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடுமோ. நம்ம பாஸ் இவன் கிட்ட சொல்லி நம்ம சிஸ்டம்ல வேலை செய்யாம என்ன செய்யரோம் பார்க்க சொல்லி இருப்பாரோ. அவ்வளவு ஏன் ஓரே ரூம்ல உக்காந்து அவன் சீரியஸா ஏதாவது பண்ணிட்டு இருப்பான் அந்த மூளையில் உக்காந்து கடலை போடர புண்ணாக்குக்கு டவுட்டு வரும் ஒரு வேளை ஒயர்லெஸ்சை ஹாக் பண்ணி நாம டைப் செய்வதை இவன் பாக்கரானா அப்படினு ஒரு டவுட்டு வரும்.

ஒரு கிரிக்கெட் ப்ளேயர் வெளிய போய் தான் ஒரு பெரிய ப்ளேயர்னு பெருமையா சொல்லிக்கலாம், ஒரு கலைக்டர், டாக்டர், எஞ்ஜினியர், ஆடிட்டர், க்ளார்க், கேஷியர், மாடு மேய்க்கரவன், ஒட்டகம் மேய்க்கரவன் எல்லாரு அவன் செய்யர வேலையை சொல்லிக்கலாம் ஆனா பாவபட்ட எத்திக்கல் ஹாக்கர் மட்டும் நான் ஒரு புரோகிராமர் இல்லைனா நெட்வெர்க்கிங் அப்படினு சொல்லி அதோட முடிச்சிக்குவான். சில அரைகுறை ஹாக்கர்ஸ் இருக்கு இதுங்க லைட்டா விஷயம் தெரிஞ்சதும் அடுத்தவன் அக்கவுண்டை ஹாக் பண்ணி தன் பெருமையை காட்டிக்கும் உடனே ஊரே அவரை பார்த்து பயப்படும் அதில் ஒரு பெருமை. அதுங்க பன்ற அலப்பரையில் சும்மா இருக்கவனையும் சேர்த்து மக்கள் சந்தேகபடும்.


போலீஸ்காரங்களுக்கும் இதே நிலமைதான். அவங்க சும்மா லிப்ட் கேக்க கை காட்டினா கூட போச்சிடா என்னமோ பிரச்சனைன்னு பயப்பட வேண்டியது. இதனால் நான் என்ன சொல்ல வரேன்ன எனக்கு நைட் தூக்கம் வராத காரணத்தால் இந்த மொக்கை பதிவு. மற்றும் டெரர் கும்மியை சேர்ந்த பொறுக்கிகள் எல்லாம் மரியாதையாக பதிவு எழுத தொடங்கவும் இல்லை என்றால் நான் தினம் ஒரு பதிவு எழுதுவேன் என்று கூறி கொள்கிறேன்.

டிஸ்கி : இப்போ தத்துவம் கத்தி வைத்து இருப்பவன் எல்லாம் காவு வாங்கிட மாட்டான் அவன் காவல்காரனா கூட இருக்கலாம்.

.