Thursday, September 02, 2010

டெரர் காதல்....

வாங்க அப்பு!! ஊர்ள இருக்க எல்லா பயலும் இப்போ பண்ற ஒரே வேலை காதல்... அட இந்த கொலைகார பசங்க வெளியூர்காரன், ரெட்டை வால், இலுமினாட்டி இவனுங்க எல்லாம் திடிர்னு சிரிக்க வைக்கரானுங்க, அழவைக்கராங்க, வெக்கபட வைக்கராங்க கேட்டா காதலிக்கறேன் சொல்றானுங்க... அதான் நானும் காதலிக்க போறேன்... சைந்தவி மாதிரி பொண்ணு கிடைக்க நான் ஒன்னும் சிபி இல்ல. அதனால வாங்க என்னோட சனியன காட்டரேன்.

அதோ நடந்து வருகிறாள் என் காதல் தோ-வதை... ச்சீ தேவதை. பறட்டை தலை, சோடபுட்டி கண்ணாடி, உதட்டுக்கு வெளியே துருத்தி நிற்க்கும் இரண்டு அழகிய பல், பத்து நாள் துவைக்காத கப்படிக்கும் சுடிதார், நேற்று சூப்பர் மார்க்கட்டில் திருடிய வாட்ச், வாத்து நடை, பிஞ்சி போன செருப்பு... இன்று முழுவது பார்த்து கொண்டு இருக்கலாம் (வேற பக்கமா). இதோ அருகில் வந்துவிட்டாள்...

ஹாய்!!  ஆஹா... லாரியில் முன் வீலில் அடிபட்ட நாய் மாதிரி என்ன ஒரு குரல்!! ஈயத்தை காய்ச்சி ஊற்றியாது போல் இருந்தது காது. சொல்லு டியார்!! பதிலுக்கு நானும் அதே லாரியில் பின் வீலில் அடிபட்ட நாய் மாதிரி பேசி பழிவாங்கினேன்.... நேத்து பூர நான் தூங்கவே இல்லடா.. மிச்சம் உள்ள எச்சி சோறுக்கு வால் ஆட்டும் நாய் போல் சினிங்கியது என் தேவதை.  ஏண்டா செல்லம்? என்று கேட்டு தொலைத்தேன். ராத்திரி எல்லாம் கண்ணு முழிச்சி உனக்காக ஒரு கவிதை எழுதினேன்.

இதற்க்கு எல்லா காரணம் ஜில்லு. அவர் மேல் எப்பொழுதும் எனக்கு ஒரு தனி பாசம். அது இப்பொ கொலை வெறியாகமாறி இருந்தது. இதோ கவிதை ஆரம்பித்து விட்டாள். காதை மூடி கொள்ளுங்கள்.

கட்டி வச்ச கெட்டி சோறே
கெட்டுபோன மிச்ச சோறே!
ஃப்ரியா கிடைக்கும் ஃபாரின் பீரே
பிரிந்து போகதே என் உயிரே!

(இப்போ காதல்ரசம்/சாம்பார் மிக்க எங்கள் உரையாடல்)

அவள் : என்கிட்ட உனக்கு என்னடா பிடிக்கும்

நான் : உன் கையில் கட்டி இருக்க வாட்ச்

அவள் : நீ இப்படி எச்சகிளதனமா கேப்பனு தெரியும் அதன் நான் இரண்டு திருடி வந்தேன். இந்தா....

நான் : என்கிட்ட உனக்கு என்னடி பிடிக்கும்?

அவள் : இப்படி எதை கொடுத்தாலும் மான, ரோசம் இல்லாம வங்கி வச்சிக்கிரபார் இதான் பிடிக்கும்....

இருவரும் : ஹா.. ஹா...ஹா..

(நாங்கள் சிரித்த ஒலி கேட்டு இரண்டு கிளி செவிடு ஆனது, நாலு புறா செத்து விழுந்தது, ஒரு பல்லி பைத்தியாம் ஆனது..)

டிஸ்கி : இந்த காதல் காவியம் ஆதரவு இல்லாமல் தவிக்கும் அனைத்து கள்ள காதலர்க்கும் சமர்ப்பணம். (ஜில்லு இனிமே கவிதை எழுத மாட்டேன் மாரியாத்த கோயில்ல வந்து சத்தியம் பண்ணு... இல்ல நான் எழுதறத நிறுத்த மாட்டேன்.. :)))  )

.

88 comments:

என்னது நானு யாரா? said...

இப்படி பேய் தனமா மூஞ்சிய வெச்சிருந்தா வேற என்னா மாதிரி பொண்ணு கிடைப்பா? ஐஸ்வரியா ராயா கிடைக்கும்?

அதுக்கு நீங்க முகத்தை ஆபரேஷன் செஞ்சி அபிஷேக்பச்சன் கணக்கா மாத்துங்க. அப்புறம் பாருங்க எத்தனை பொண்ணுங்க ஐஸ்வரியா ராயை போல உங்க கிட்ட காதல் செய்றதுக்கு க்யூ கட்டி நிக்கும்ங்கிறதை.

வெறும்பய said...

(நாங்கள் சிரித்த ஒலி கேட்டு இரண்டு கிளி செவிடு ஆனது, நாலு புறா செத்து விழுந்தது, ஒரு பல்லி பைத்தியாம் ஆனது..)

//

மச்சி படிக்கிற என் கண்ணில ரத்தம் வழியுதுடா...

வெறும்பய said...

வெளியூர்காரன் ப்ளாகில நீ மொக்க போட்டதுக்கு ஒன்ன ஓட விட்டு ஒதச்ச ஒரே காரணத்துக்காக தான் இப்படி கன்றாவி கதையெல்லாம் எழுதுறேன்னு சத்தியமா நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்...

வெறும்பய said...

அதோ நடந்து வருகிறாள் என் காதல் தோ-வதை... ச்சீ தேவதை. பறட்டை தலை, சோடபுட்டி கண்ணாடி, உதட்டுக்கு வெளியே துருத்தி நிற்க்கும் இரண்டு அழகிய பல், பத்து நாள் துவைக்காத கப்படிக்கும் சுடிதார், நேற்று சூப்பர் மார்க்கட்டில் திருடிய வாட்ச், வாத்து நடை, பிஞ்சி போன செருப்பு... இன்று முழுவது பார்த்து கொண்டு இருக்கலாம் (வேற பக்கமா). இதோ அருகில் வந்துவிட்டாள்...

//

இவ்வவளவு அழகான ஒரு ரசிப்பு தன்மை உன்ன விட்டா வேற யாருக்கு வரும்...

வெறும்பய said...

இதற்க்கு எல்லா காரணம் ஜில்லு. அவர் மேல் எப்பொழுதும் எனக்கு ஒரு தனி பாசம். அது இப்பொ கொலை வெறியாகமாறி இருந்தது.

//

எலேய் ஜில்லு இதுகெல்லாம் நீ தான் காரணமா...

வெறும்பய said...

கொஞ்சம் வேலையிருக்கு... யாரவது ஆடு வெட்ட வந்த என்ன மறக்காம கூப்பிடுங்கப்பு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி அப்டின்னா உன் ஆளு போட்டோவ ப்ளாக் முத்த பக்கம் மாட்டு ஒரு பய உள்ள வர மாட்டான்...

Mohamed Faaique said...

இது கதையல்ல காவியம் தலைவரே.....
ஒவ்வொரு வரியிலும் காதல் தேன் சொட்டுது..
ஒவ்வொரு பாராவும் அற்புதம் அற்புதம்...
உங்க ஆளு செம கட்ட...
அத பாக்குற நீங்க தண்ணி அடிக்கமல மட்ட...
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அல்ல..அல்ல ............
அதையும் தாண்டி ...................

TERROR-PANDIYAN(VAS) said...

வெறும்பய சொன்னது…
//வெளியூர்காரன் ப்ளாகில நீ மொக்க போட்டதுக்கு ஒன்ன ஓட விட்டு ஒதச்ச ஒரே காரணத்துக்காக தான் இப்படி கன்றாவி கதையெல்லாம் எழுதுறேன்னு சத்தியமா நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்..//

டாங்க்கிஸ் மச்சி. என்கூட சோர்ந்து அடிவாங்கின மானம் கெட்டபய நீதானு நானும் யாருக்கும் சொல்ல மட்டேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

எலேய் மக்கா!! உங்க எல்லாருக்கும் சொல்றேன். எனக்கு ஆணி இருக்கு. இப்போ கிளம்பறேன்... மதியம் வருவேன்.... இங்க எவனாவது வந்து எங்க காதல பத்தி தப்பா பேசினிங்க. அப்புறம் இத தொடர் பதிவா எழுதுவேன். ஜாக்கரதை!!!!

Ram said...

MUDIYALA...UNGAL KADHAL KADAI....IDHU KADHAI ILLA KAVIYAM...

TERROR-PANDIYAN(VAS) said...

@Ram கூறியது...
//MUDIYALA...UNGAL KADHAL KADAI....IDHU KADHAI ILLA KAVIYAM...//

ஹி..ஹி.ஹி..டாங்க்கிஸ் ராம் சார்!!

(எலேய் மக்கா!! இவர்தான் என் குரு. நோ! நோ! பொருள கீழ போடுடா...பதிவுலக குரு இல்ல.. அதுக்குள்ள அவசரபடாத... நிஜ வாழ்க்கைல குரு. ரெம்ப அறிவாளிபா.. வந்து அசீர்வாதம் வாங்கிகோ...)

Ram said...

Yen Indha Kola veri unaku,Idhu eppadi irukunna "Vadivelu Gurunu oruthana kootitu vandhu vangi kodukara madhiriye enaku thonudu...." venam venam....

Jey said...

கவிதை கலக்கல்.
காதல் மொழிகள் அருமை.
மொத்தத்தில் ஒது ஒரு காவியக் காதல்...

(பாண்டி கஷ்டப் பட்டு பாராட்டிருக்கேன்..., இதுக்கு எத்தனை பேர் என்னை கும்மி எடுக்கப்போராங்களோ தெரியாது... ஏதாவது பாத்து செய்..) .

harini said...

// கவிதை கலக்கல்.
காதல் மொழிகள் அருமை.
மொத்தத்தில் ஒது ஒரு காவியக் காதல்...//
ஜெ அண்ணன் இது ஓவரஇல்ல உங்களுக்கு இந்த காதல் கொலையா படிக்கிறதுக்கு

Jey said...

//harini கூறியது...
// கவிதை கலக்கல்.
காதல் மொழிகள் அருமை.
மொத்தத்தில் ஒது ஒரு காவியக் காதல்...//
ஜெ அண்ணன் இது ஓவரஇல்ல உங்களுக்கு இந்த காதல் கொலையா படிக்கிறதுக்கு //

இந்த பயபுள்ளய போரபோக்குல அப்படியே ஏத்திவிட்டு போயிட்டே இருக்கனும்....அப்பதான்... யார்கிட்டயாவது அடிவாங்கிட்டு வந்து சொல் பேச்சு கேக்கும்....:)

harini said...

மக்க terror உனக்கு எத்தனை நாள் மனதில் வஞ்சகம் வச்சிட்டு இருந்த

ஜில்தண்ணி - யோகேஷ் said...

என்னயா நடக்குது இங்க ?

என்னோட மொக்க கவுஜய படிக்காதன்னா கேட்டாதானே,இப்ப பாரு தலையில எலுமிச்சபழம் தேக்கிற நிலமைக்கு வந்துட்டு :)

பாவம் யாரு பெத்த புள்ளயோ :) இப்டி பொலம்புது

ப.செல்வக்குமார் said...

///இன்று முழுவது பார்த்து கொண்டு இருக்கலாம் (வேற பக்கமா). இதோ அருகில் வந்துவிட்டாள்...
///
ஓடிருங்க ..

ப.செல்வக்குமார் said...

// இதோ கவிதை ஆரம்பித்து விட்டாள். காதை மூடி கொள்ளுங்கள்.///
அட இந்த மொக்கஎல்லாம் என்னை ஒண்ணும் பண்ண முடியாது .!

ப.செல்வக்குமார் said...

//(ஜில்லு இனிமே கவிதை எழுத மாட்டேன் மாரியாத்த கோயில்ல வந்து சத்தியம் பண்ணு... இல்ல நான் எழுதறத நிறுத்த மாட்டேன்.. :))) )///
இதுக்கெல்லாமா பயந்துடுவோம் ... மாப்பு நீ கவிதை எழுதறத நிறுத்திடாத ..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// ஜில்லு இனிமே கவிதை எழுத மாட்டேன் மாரியாத்த கோயில்ல வந்து சத்தியம் பண்ணு... இல்ல நான் எழுதறத நிறுத்த மாட்டேன்.. ///

இது நடக்காதுடியே

நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா பண்ணுனதுதான்(ஐயோ டயலாக் சரியா வரலையே)

டெர்ரரு நீங்க இனிமேல் பதிவே எழுத மாட்டேன்னு சொன்னாகூட நான் கழுத சாரி கவித எழுதுறத விடமாட்டேன்

harini said...

கவிச்சக்கரவர்த்தி terror பதிவுலகின் எட்டுத்திக்கும் பரவட்டும்!!!!!!!!!!!!!

வெறும்பய said...

harini சொன்னது…

கவிச்சக்கரவர்த்தி terror பதிவுலகின் எட்டுத்திக்கும் பரவட்டும்!!!!!!!!!!!!!
//


யாருப்பா அது இப்படி காமெடி பண்றது...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// யாருப்பா அது இப்படி காமெடி பண்றது... ///

மச்சி இது டெர்ரரோட வேலை தான்

இதுமாதிரி என்னை அப்பப்ப புகழ்ந்து கொண்டே இருங்க, உங்கள கவனிக்க வேண்டிய விதத்துல கவனிக்குறேன்னு எதாவது பிட்ட போட்டிருப்பாரு அதான் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர் கீழ்பக்கம் ஏரியா ல சுத்திக்கிட்டு இருக்குறதா கேள்விப்பட்டேன்...

எஸ்.கே said...

சார் ரொம்ப ரொம்ப நல்ல சிரிச்சேன்.மத்தவங்களை சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அது உங்களுக்கு நல்லா வருது. Keep it up!

harini said...

//இதுமாதிரி என்னை அப்பப்ப புகழ்ந்து கொண்டே இருங்க, உங்கள கவனிக்க வேண்டிய விதத்துல கவனிக்குறேன்னு எதாவது பிட்ட போட்டிருப்பாரு அதான்//
hi.........hi..............hiiiiiiiiiiii.......

அருண் பிரசாத் said...

யோவ்... உன்னாள தான் யா இந்த பதிவுலகம் இன்னும் உயிரோட இருக்குது.

திடீருனு எல்லா பயலும் திருந்திடானுங்க... விடாத புடி

பனங்காட்டு நரி said...

ஹி ஹி ஹி ஹி ..,மச்சி பிளாக்கர் படுத்துது ...,நைட் வந்து கும்முரேன்

ப.செல்வக்குமார் said...

///திடீருனு எல்லா பயலும் திருந்திடானுங்க... விடாத புடி///
நான் இன்னும் திருந்தலையே ..

cs said...

itha padichcha naan

ayyo seththen

வினோ said...

yenna arumaiyana kadhal kaaviyam... Jillu inthukkaagave nee innum kavithai ezhuthu..

Anonymous said...

//ஜில்தண்ணி - யோகேஷ்

பாவம் யாரு பெத்த புள்ளயோ :) இப்டி பொலம்புது//எனக்கும் அதே டவுட்டு தான்...

மங்குனி அமைசர் said...

கட்டி வச்ச கெட்டி சோறே
கெட்டுபோன மிச்ச சோறே!
ஃப்ரியா கிடைக்கும் ஃபாரின் பீரே
பிரிந்து போகதே என் உயிரே!//

டெர்ரர் உனக்குலையும் ஒரு கவிஞன் ஒளிஞ்சு இருக்கான் பாரு , கொஞ்சம் உசுப்பெத்திவிட்டா போதும் புகுந்து விளையாடுவான் போல , உம்..... நடக்கட்டும் , நடக்கட்டும்

மங்குனி அமைசர் said...

என்னா நைட்டு சரக்கு பத்தலையா ????

மங்குனி அமைசர் said...

வெறும்பய கூறியது...

கொஞ்சம் வேலையிருக்கு... யாரவது ஆடு வெட்ட வந்த என்ன மறக்காம கூப்பிடுங்கப்பு...///

யப்பா எனக்கு ஒரு கேரி பேக்குல அந்த ஈரல மட்டும் போட்டு வையுங்க , நான் வந்து பிக் அப் பண்ணிகிர்றேன்

TERROR-PANDIYAN(VAS) said...

என்னது நானு யாரா?
//அதுக்கு நீங்க முகத்தை ஆபரேஷன் செஞ்சி அபிஷேக்பச்சன் கணக்கா மாத்துங்க. அப்புறம் பாருங்க எத்தனை பொண்ணுங்க ஐஸ்வரியா ராயை போல உங்க கிட்ட காதல் செய்றதுக்கு க்யூ கட்டி நிக்கும்ங்கிறதை.//

செஞ்சிடலாம் பங்காளி... அதுக்கு இயற்க்கை வைத்தியம் இருக்கா?

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//எலேய் ஜில்லு இதுகெல்லாம் நீ தான் காரணமா...//

ஆம மச்சி நீ அந்த சில்ல போட்டு தள்ளிடு....

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//மச்சி அப்டின்னா உன் ஆளு போட்டோவ ப்ளாக் முத்த பக்கம் மாட்டு ஒரு பய உள்ள வர மாட்டான்...//

என்?? நீ சைட் அடிக்கலாம் பாக்கறியா?? நடக்கது மாப்ஸ் நடக்கது...

(கொஞ்சம் வர்ணிச்சதும் ஆலையரனுங்க...)

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohamed Faaique
//மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அல்ல..அல்ல ............
அதையும் தாண்டி ...................//

நீங்க பெரிய மனுசன்... வாங்க சார் உக்கருங்க. காபி சப்பிடுறியலா? ஆம “ அதையும் தாண்டி......... “ அந்த ............ எதும் கெட்ட வார்த்தை இல்லையே?

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜய்
//கவிதை கலக்கல்.
காதல் மொழிகள் அருமை.
மொத்தத்தில் ஒது ஒரு காவியக் காதல்...//

தங்க்ஸ் தல!! நீங்கதான் உண்மையான ரசிகன்... ரமேசுகூட மட்டும் சேராதிங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@harini
//ஜெ அண்ணன் இது ஓவரஇல்ல உங்களுக்கு இந்த காதல் கொலையா படிக்கிறதுக்கு//

என்ன மக்கா இப்படி சொல்லிட்ட?? அப்போ உங்கலுக்கு என் கவிதை பிடிக்கல?? சரி இப்போ வேற சொல்ரேன் பாரு... மக்கா மக்கா நில்லு மக்கா.. இப்போ என்ன சொல்லிட்டேன் இப்படி ஓடராரு??

TERROR-PANDIYAN(VAS) said...

@Jey
//இந்த பயபுள்ளய போரபோக்குல அப்படியே ஏத்திவிட்டு போயிட்டே இருக்கனும்....அப்பதான்... யார்கிட்டயாவது அடிவாங்கிட்டு வந்து சொல் பேச்சு கேக்கும்....:)//

தல போனாபோகட்டும் சொல்லி நீங்க கீரிபிள்ளை வச்சி வித்தை காட்டும்போது தட்டு துக்கி பிச்சை எடுத்து உதவி பண்ணலாம் பாத்தேன்... இப்போ மாட்டேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜில்தண்ணி

//பாவம் யாரு பெத்த புள்ளயோ :) இப்டி பொலம்புது//

என்ன இப்படி பொலம்ப விட்டதே நீதானடா பாவி...

TERROR-PANDIYAN(VAS) said...

@ப.செல்வக்குமார்
//இதுக்கெல்லாமா பயந்துடுவோம் ... மாப்பு நீ கவிதை எழுதறத நிறுத்திடாத ..//

அப்போ அண்ணன் நல்லா இருக்கது உனக்கு பிடிக்கல..நான் சட்டை பிச்சிட்டு ரோட்ல திரியரவரை விடமாட்டிங்க... ரைட்டு.

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜில்லு
//டெர்ரரு நீங்க இனிமேல் பதிவே எழுத மாட்டேன்னு சொன்னாகூட நான் கழுத சாரி கவித எழுதுறத விடமாட்டேன்//

வேனாம் சில்லு விளைவுகள் பயங்கறமா இருக்கும்... அடுத்து நானும் என் காதலியும் பீச்ல சுண்டால் பொறுக்கி திண்னத எழுத வைக்காத....

TERROR-PANDIYAN(VAS) said...

@harini
//கவிச்சக்கரவர்த்தி terror பதிவுலகின் எட்டுத்திக்கும் பரவட்டும்!!!!!!!!!!!!!//

அமெரிக்க ஜனாதிபதி காதுல விழற மாதிரி நால்லா சத்தமா கூவு மக்கா

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//டெரர் கீழ்பக்கம் ஏரியா ல சுத்திக்கிட்டு இருக்குறதா கேள்விப்பட்டேன்...//

ஆம ரமேசு... உனக்கு எந்த அளவு தெளிஞ்சி இருக்கு பாக்க வந்தேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே
//சார் ரொம்ப ரொம்ப நல்ல சிரிச்சேன்.மத்தவங்களை சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அது உங்களுக்கு நல்லா வருது. Keep it up!//

அப்போ என்ன பாத்தா பயம் வரலையா?? என்ன பாத்தா கமெடி பீஸ் மாதிரி தெரியுதா?? அவ்வ்வ்வ்வ்வ்.
(நன்றி வாத்தியாரே..!!!)

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண் பிரசாத்
//யோவ்... உன்னாள தான் யா இந்த பதிவுலகம் இன்னும் உயிரோட இருக்குது.

திடீருனு எல்லா பயலும் திருந்திடானுங்க... விடாத புடி//

நீ இப்படியே ஏத்திவிடு... நான் வீடு வீட போய் உதை வாங்கரேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@பனங்காட்டு நரி
//ஹி ஹி ஹி ஹி ..,மச்சி பிளாக்கர் படுத்துது ...,நைட் வந்து கும்முரேன்//

ஒ.கே. மச்சி வெய்ட் பண்ரேன்...

(சயாந்திரம் ஆறு மணிக்கே சரக்கு அடிச்சிட்டு தூங்கர நாய் ராத்திரி வறுதாம்... தூ...)

TERROR-PANDIYAN(VAS) said...

@cs கூறியது...
//itha padichcha naan

ayyo seththen//

முதல் வறுகைக்கு நன்றி!! பீல் பண்ணாதிங்க சார். அடுத்த கவிதை இதைவிட நல்லா இருக்கும் பாருங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

வினோ கூறியது...
//yenna arumaiyana kadhal kaaviyam... Jillu inthukkaagave nee innum kavithai ezhuthu..//

வாங்க வினோ!! உங்கள மாதிரி ஒரு ரசிகன் போதும். மத்த எல்லாரையும் போட்டு தள்றோம்.... அப்புறம் நான் தினமும் கவிதை எழுதரேன்.. நீங்க அதை கேட்டு அழனும்... அட ஆனந்த கண்ணிர் பாஸ்....

TERROR-PANDIYAN(VAS) said...

@இந்திரா கூறியது...
//எனக்கும் அதே டவுட்டு தான்...//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... என் காதலுக்கு இவ்வளோ எதிர்ப்பா?

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி
//யப்பா எனக்கு ஒரு கேரி பேக்குல அந்த ஈரல மட்டும் போட்டு வையுங்க , நான் வந்து பிக் அப் பண்ணிகிர்றேன்//

யோ மங்கு!! நீர் வந்து பிக்அப் பண்ண என் ஈரல் என்ன உன் பிகரா?? மனுசன் பீல் பண்ணி கவிதை சொன்னா....

GSV said...

மைக் டெஸ்டிங் மைக் டெஸ்டிங் ...1 ,2 ,3 .....வெங்கட்... வெங்கட் வெங்கட் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.... என்ன என்னமோ கடிதம் எழுத சொல்லிதர்ற நீங்க வந்து காதல் கடிதம் எழுத சொல்லிகொடுங்க முதல்ல....

அப்பறம் மறக்காம "TERROR" கிட்ட கவிதை எப்படி எழுதுறதுன்னு கத்துகிட்டு போங்க...

// கட்டி வச்ச கெட்டி சோறே
கெட்டுபோன மிச்ச சோறே!
ஃப்ரியா கிடைக்கும் ஃபாரின் பீரே
பிரிந்து போகதே என் உயிரே!//

இதுல மிஞ்ச முடியாது ஒய் !!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் டெர்ரரு, சொம்பு ரொம்ப அடி வாங்குன மாதிரி தெரியுதே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது என்னய்யா, கருமாந்திரம், அவார்டு என்னமோ கொடுப்பனுங்களே.....ஆங்....ஆஸ்காரு, அந்தக் கருமத்துல ரெண்ட வாங்கி நம்ம பாண்டி கைல கொடுங்கய்யா, என்னமா கவித எழுதியிருக்கான் பய, எலேய்....இத இம்புட்டு நாளு எங்கடா வெச்சிருந்த? ங்கொய்யாலே....உடம்பெல்லாம் புல்லரிப்பு தாங்கலடா சாமி, கொள்ளிக்கட்டைய வெச்சித்தான் சொறிஞ்சி விடனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பட் உன் நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு பாண்டி! ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை மாதிரி செலக்ட் பண்ணியிருக்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாண்டி, இன்னும் நெறைய கவித எழுதுய்யா, எல்லாத்தையும் பொஸ்தகமா போட்ருலாம், (எதுக்கும் வீக்கா இருக்கவங்கள்லாம் படிக்காதீங்கன்னு ஒரு எச்சரிக்கை போட்ருய்யா, தக்காளி அப்புறம் கொலை கேசுல உள்ள போயிடப் போறே!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பிடி தளதளன்னு கவித எழுதியிருக்கியே, எழுதும்போது என்ன சரக்குய்யா அடிக்கிற? சொன்னா நாங்களும் அதையே ஏத்திக்கிட்டு எழுதுவோம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey கூறியது...
கவிதை கலக்கல்.
காதல் மொழிகள் அருமை.
மொத்தத்தில் ஒது ஒரு காவியக் காதல்...//

நம்ம போலீஸ்கார் தான் மாமுல் வாங்குராருன்னா, நீயும் வாங்க ஆரம்பிச்சிட்டியே ஜெய்? (தக்காளி அப்பவே எனக்கு ஒரு பங்கு கொடுத்திருந்தா மூடிட்டு போயிருப்பேன்ல?)

Jey said...

பன்னி அப்படியே, முத்துவயும் குட்டு வந்து கொஞ்சம் நல்லா ட்ரைனிங் கொடுங்க ...பயபுள்ளா இன்னும்...கலக்கட்டும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி கூறியது...
ஹி ஹி ஹி ஹி ..,மச்சி பிளாக்கர் படுத்துது ...,நைட் வந்து கும்முரேன்//

என்னது ப்ளாக்கர் படுத்துதா? விடிய விடிய ராவா அடிச்சிட்டு ப்ளாக்கர் படுத்துதுன்னா என்னய்யா இது? இதுக்குத்தான் தண்ணியக் கலந்து அடி, தண்ணியக் கலந்து அடின்னு அப்பவே சொன்னேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
என்னது நானு யாரா?
//அதுக்கு நீங்க முகத்தை ஆபரேஷன் செஞ்சி அபிஷேக்பச்சன் கணக்கா மாத்துங்க. அப்புறம் பாருங்க எத்தனை பொண்ணுங்க ஐஸ்வரியா ராயை போல உங்க கிட்ட காதல் செய்றதுக்கு க்யூ கட்டி நிக்கும்ங்கிறதை.//

செஞ்சிடலாம் பங்காளி... அதுக்கு இயற்க்கை வைத்தியம் இருக்கா?//

யோவ் டெய்லி நைட்டு ராஜ் டீவில ஒரு சேலத்து டாக்டர் வந்து கெட்ட வார்த்தைல திட்டுராரே அவர்கிட்ட கேட்டுப்பாக்கலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@Jey
//இந்த பயபுள்ளய போரபோக்குல அப்படியே ஏத்திவிட்டு போயிட்டே இருக்கனும்....அப்பதான்... யார்கிட்டயாவது அடிவாங்கிட்டு வந்து சொல் பேச்சு கேக்கும்....:)//

தல போனாபோகட்டும் சொல்லி நீங்க கீரிபிள்ளை வச்சி வித்தை காட்டும்போது தட்டு துக்கி பிச்சை எடுத்து உதவி பண்ணலாம் பாத்தேன்... இப்போ மாட்டேன்...////

யோவ் டெர்ரரு இந்த டகால்டியெல்லாம் வேணாம், உங்களையெல்லாம் நம்பி முக்கியமான பொறுப்பை கொடுக்க முடியாதுன்னு ஜெய்யி இன்னொரு கீரிப்பிள்ளைக்கு ட்ரெய்னிங் கொடுத்துக்கிட்டு இருக்காப்ல! (வேணும்னா நீயும் ட்ரெய்னிங்குக்கு போயிப்பாரு! ஒருவேள சான்ஸ் கெடச்சாலும் கெடைக்கும்!)

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@Jey
//இந்த பயபுள்ளய போரபோக்குல அப்படியே ஏத்திவிட்டு போயிட்டே இருக்கனும்....அப்பதான்... யார்கிட்டயாவது அடிவாங்கிட்டு வந்து சொல் பேச்சு கேக்கும்....:)//

தல போனாபோகட்டும் சொல்லி நீங்க கீரிபிள்ளை வச்சி வித்தை காட்டும்போது தட்டு துக்கி பிச்சை எடுத்து உதவி பண்ணலாம் பாத்தேன்... இப்போ மாட்டேன்...//

தட்டு தூக்குர வேலைக்கு டெபாசிட் கட்டனும் ராசா...ஏன்னா அப்படியே கல்லாவ தூக்கிட்டு ஓடிட்டா...நாங்க என்ன பன்றது...ஏற்கனவே இதுல நெறய பேரு பங்கு கேக்குராய்ங்க...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

//// வேனாம் சில்லு விளைவுகள் பயங்கறமா இருக்கும்... அடுத்து நானும் என் காதலியும் பீச்ல சுண்டால் பொறுக்கி திண்னத எழுத வைக்காத... ////

எழுதுயா எழுது :)

எவ்ளோவோ பாத்துட்டோம் இத பாக்கமாட்டோமா :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி, ஜய், ஜில்லு

என் காதல் காவியத்துல கும்மி அடிச்ச உங்கள...
#++%^(&*^&#$#^&*^ %&^%$&%& %^%^(()$#( )(*(*(&^%^&*%^ !#!@$#

Gayathri said...

கடவுளே..உங்க காதல் காவியத்த படிச்சுட்டு..கண்ல ரத்தம் வருது,,எப்படி இப்படி ஒரு ஒரு வரியையும் செதுக்கிருகீங்க???? புல்லரிக்குது..
எல்லாத்துக்கும் மேல உங்க காதலி சமயா வர்நிச்சுருகீங்க...அவ்வ்வ்வ்வ்வ்

TERROR-PANDIYAN(VAS) said...

@Gayathri
//கடவுளே..உங்க காதல் காவியத்த படிச்சுட்டு..கண்ல ரத்தம் வருது,,எப்படி இப்படி ஒரு ஒரு வரியையும் செதுக்கிருகீங்க???? புல்லரிக்குது..
எல்லாத்துக்கும் மேல உங்க காதலி சமயா வர்நிச்சுருகீங்க...அவ்வ்வ்வ்வ்வ்//

எழுதின நானே அதை படிக்க மாட்டேன் நீங்க என் அந்த ரிஸ்க் எடுத்திங்க?? என் ஆள நான் வர்ணிச்சது வெறும் சாம்பிள்..

(நம்ம இரண்டுபேறுக்கு தமிழ்ல கவிதை போட்டி வச்சா யாரு சகோ ஜெய்ப்பா?? ஹா..ஹா..ஹா..)

TERROR-PANDIYAN(VAS) said...

@GSV
//மைக் டெஸ்டிங் மைக் டெஸ்டிங் ...1 ,2 ,3 .....வெங்கட்... வெங்கட் வெங்கட் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.... என்ன என்னமோ கடிதம் எழுத சொல்லிதர்ற நீங்க வந்து காதல் கடிதம் எழுத சொல்லிகொடுங்க முதல்ல.... //

அட GSV!! எப்போ வந்திங்க? இந்த பன்னி குட்டி என் காதல் காவியத்துல பிராண்டிட்டு இருந்ததுல நீங்க வந்ததை கவனிக்கல. வெங்கட் நல்ல எழுத்தர் அவர விட்டுவிடுங்கள் நான் எழுதறேன் காதல் கடிதம்.

கலாநேசன் said...

MADE FOR EACH OTHER...

கலாநேசன் said...

டேர்ரருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பனங்காட்டு நரி said...

மாப்பி ...., பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி ...ஒரு quarter சொல்லேன் ....ஹி ஹி ஹி

GSV said...

Wishing you a Happy Birthday and many more to come and have good health and happiness in life.

G.S.V

TERROR-PANDIYAN(VAS) said...

@கலாநேசன்
//MADE FOR EACH OTHER...//

டாங்க்ஸ்!!! ஹி ஹி ஹி

//டேர்ரருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

வீட்டுக்கு வந்து வாழ்த்தி இருக்கிங்க... ரொம்ப நன்றி சார்!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//மாப்பி ...., பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி ...ஒரு quarter சொல்லேன் ....ஹி ஹி ஹி//


எண்டா பரதேசி!! இப்படி ஒரு வரில வாழ்த்து சொல்ற... அசிங்கமா இல்லை?? அருண் மாதிரி அண்ணன வாழ்த்தி ஒரு பதிவு போடு மச்சி!!! என்ன அசிங்கமா கொவட்டர்.... ஒரு புல் அடிச்சிட்டு ரேட்ல அட்டகாசம் பண்ணிட்டு போலீஸ்ல அடிவாங்கு மச்சி!!

எஸ்.கே said...

தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்கவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

TERROR-PANDIYAN(VAS) said...

@GSV
//Wishing you a Happy Birthday and many more to come and have good health and happiness in life.

G.S.V//


A...B...C...D...E... Small a, small b......நங்கலும் இங்கிலிபிஸ் பேசுவோம்...

(Thanks a lot GSV.... friends like you are good happiness in life :))) )

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே...
//தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்கவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//

அட என்ன எஸ்.கே மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு... எதோ முன்னாடி வந்தா மட்டும் பிரியானி கொடுக்கறமாதிரி... வாழ்த்துக்கு ரொம்ப நன்றி!! :)))

vinu said...

ஒரு பல்லி பைத்தியாம் ஆனது..)இதுக்கும் உங்க பிறந்தநாளுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா

vinu said...

vaazthukkal

விஜய் said...

ஹ ஹ ஆஹா ஹ..நீங்க தம்பி செல்வாவோட நண்பரா?...ஹ ஹ ஆஹா

TERROR-PANDIYAN(VAS) said...

@vinu ...
//இதுக்கும் உங்க பிறந்தநாளுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா//

சீச்சீ... நான் பிறந்ததும் பூமில இருந்த சாத்தான், பேய், பிசாசு எல்லாம் ஒடி போச்சி... ஹும்.. இப்போ அதுங்க டியுட்டி சேர்த்து நான் பாக்கறேன்....

TERROR-PANDIYAN(VAS) said...

@vinu கூறியது...

//vaazthukkal//

Me too...


(ஹி..ஹி.ஹி.. தாங்ஸ்)

TERROR-PANDIYAN(VAS) said...

@விஜய் கூறியது...
//ஹ ஹ ஆஹா ஹ..நீங்க தம்பி செல்வாவோட நண்பரா?...ஹ ஹ ஆஹா//

வாங்க விஜய்!! என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டுடிங்க? செல்வா பேர சொல்லி என்ன அசிங்க படுத்தறிங்களா இல்ல என் பேர சொல்லி செல்வா அசிங்க படுத்தறிங்களா? இல்ல இரண்டு பேர் பேரயும் சொல்லி இரண்டு பேரயும் அசிங்க படுத்த்றிங்களா? ஒன்னும் புரியல...

(விஜய் நான் உங்க விசிறி...)