Wednesday, November 24, 2010

மிஸஸ் ஆஃப் த மிஸ்டர்


முஸ்கி : நமது கோகுலத்தில் சூரியன் வெங்கட் இந்த லிங்க் கொடுத்து. ரங்கமணிகள் மானத்த காப்பாத்த இதுக்கு எதிர் பதிவு போட்டே ஆகனும் ஒரே அடம்.... ஆன இந்த பதிவு சாமி சத்தியமா என்னது இல்லை. ஒரு பிரபல பதிவர் எழுதி கொடுத்தாரு. அவர் வேறை யாரும் இல்லிங்கோ நம்ம அருண்பிரசாத் தான் 


இனி பதிவுக்கு போகலாம்:

=> ஹுக்கும்... காலைல எழுந்தவுடனே.. அலாரம் சத்ததைவிட உங்க சத்தம்தானே அதிகமா இருக்கு.... இதுல முத்தம் வேற தராங்களாம்... அடுப்படில உருட்டுற சாமான் எங்க தலைல வந்து விழாததுதான் குறை.


=> எட்டரை மணிக்கு டைனிங் டேபிள்ல உட்கார்ந்து “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழ சொல்லி. எழுந்துருக்கலாம்ல”னு கத்தினா காலைல டிபன், மதியம் சாப்பாடு, ராத்திரி டின்னர் எல்லாமே கட் ஆகுதே இது எந்த ஊர் நியாயம்...

=> பச்சை, மஞ்சள், சிவப்பு... இதுல கிளிப்பச்சை வேற... நீங்க சொல்லிட்டு போய்டுவீங்க... அதுக்கு அப்புறம் வெளிய போக அந்த கலர்ல வந்ததால 2 மாடு மிரண்டு இருக்கு, 10 பேர் கண்ணு நொல்லை ஆகி இருக்கு... இவங்க மட்டும் நம்மள விட அழகா காட்டிப்பாங்களாம்....நாங்க ராமராஜன் மாதிரி வரணுமாம்.... எங்க கண்ணுக்கு லென்ஸ் தேவை இல்லை.... மூளை நல்லாவே வேலை செய்யுது....


=>  4 நாள் சோறு போடாம ஓட்டல்ல சாப்பிட வெச்சிட்டு.... திடீருனு வீட்டு சாப்பாடு போட்டு, அது ஓட்டல் சாப்பாட்டை விட மோசமா இருந்ததை நேரா சொல்ல முடியாம ” எந்த ஓட்டல்ல வாங்கினது”னு ஓட்டல் மேல பழிய போடும் எங்க நல்ல மனசை அடுப்பிலயா புகைய வெப்பீங்க.


=> வீட்டுல தான் நச்சு நச்சுனு பேசிட்டே இருக்காங்கனு ஞாபகமா மொபைலை வீட்டுல மறந்து வெச்சிட்டு போனாலும் பிரச்சினையா... சரி... மொபைல் கைல இருந்தா? என்ன நடக்குதுனு பாருங்க...

1. வீட்டு வாசல்ல இருக்கறப்போ போன் செய்து  - கார் சாவி எடுத்தாச்சா? கேக்குறது
2. கார் உள்ள உட்கார்ந்த பிறகு  - பெட்ரோல் இருக்கா?னு கேக்குறது
3 டிரைவிங்ல இருக்கறப்போ - மறந்து போன மளிகை சாமான் லிஸ்ட் சொல்லுறது
4. ஆபிஸ் போனவுடன் - போய் சேர்ந்தாச்சா?னு கேக்குறது
5. ஆபிஸ் சீட்ல உட்கார்ந்தவுடன் - பையன் ஸ்கூல்ல கம்பிளைண்ட்னு சொலுறது....


இப்படி இன்னும் நிறைய..... 10 பகுதி போடலாம்... ஏங்க, தெரியாம என்ன தெரிஞ்சே கேக்குறேன்.... ஆபிஸ் போன கூட நிம்மதியா விடமாட்டீங்காளா... ஏற்கன்வே டேமேஜர் குடைச்சல் வேற தாங்கல


=> செல்போன்ல ஒரு பெண்ணு பேர் பார்த்தா போச்சு.... call register, SMS inbox, Sent items, saved messages, drafts, gallery, ஏன் call durationகூட விட்டு வைக்காம அலசி ஆராய்ஞ்சி.... அந்த பெண்ணோட ஜாதகம், நட்சத்திரம் வரைக்கும் விசாரிக்கறதுக்கு... இந்த பிரச்சினை தேவையா?


=> அது எப்படி மீட்டிங், பிசினஸ் டிரிப்னு சொன்னவுடனே சந்தேகம் வந்து அடிக்கடி கால் பண்ணி, எங்களால போன் எடுக்க முடியாதுனு தெரிஞ்சும் ஆபிஸ்  லேண்ட் லைன்ல போன் பண்ணி செக் பண்ணுறீங்க


=> நீங்க ஓவர் குண்டுனு தெரிஞ்சும் ஐஸ்கிரீம், சாக்லெட் பக்கமே கை போகுதே ஏன்?


=> ஷாப்பிங் போன பில்லு கட்ட யார் கிரெடிட் கார்டா இருந்தா என்ன... மாச கடைசில பில்லு கட்டுறது யாரு? அந்த கிரெட்டிட் கார்டு ஒரு add on cardனு கூட இன்னும் தெரியாது.


=> வாரத்துல ஒருநாள் மட்டும் அம்மா வீட்டுக்கு போறேன் சொல்லுற உங்களுக்கு மாதத்துல எத்தனை வாரங்கள்.


=> எங்க வீட்டு விசேஷத்துக்கு கிளம்பும் போது மட்டும் உங்களுக்கு உடம்பு சரியில்லாம போகுதே ஏன்?


=> 5 நிமிசம், 5 நிமிசம்னு சொல்லி 2 மணி நேரம் ரெடியாகி.... எங்கள் டென்ஷன் ஏத்தி.... 10 கி மீ போன பின்னாடிதான் கேஸ் ஆப் பண்ணீங்களானு கேக்க நியாபகம் வருதே ஏன்?


=> கிரிக்கெட் மேட்ச் இருக்குற நாள்லதான் அந்த மெகாதொடர் முடியற மாதிரி சேனலை மாத்த சொல்லி நாடகத்துல அழுது, அதுக்கு நீங்க அழுது, எங்களையும் அழ வைக்கிற உங்களை எந்த காட்டுல , வேணாம் வேணாம் பாக்கிஸ்தான்ல கொண்டு போய் விட்டா என்ன?


=> ரெஸ்டாரெண்ட் போய் நாங்க ஆடர் பண்ணி அதை நீங்க எப்பவும் குறை சொல்லி நாங்க திட்டு வாங்குறதை விட உங்களை ஆர்டர் பண்ண சொல்லி நாங்க வேற வழி இல்லாம சாப்பிடுற நல்ல புள்ளைங்களையும் குறை சொல்லுறது ஏன்?


டிஸ்கி : இது சிரிக்க மட்டும் எழுதியது. யாராவது ஓவர சிந்திச்சி பதிவுலகில் சண்டை மண்டை உடைந்தால் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டே சந்தோஷமா வேடிக்கை பார்ப்பேன்.
.

Saturday, November 20, 2010

எதோ ஒன்னு....

இந்த லிவ்விங் டுகேதர் / கலாச்சரம் இம்சை தாங்களபா... ஆள் ஆளுக்கு கருத்து சொல்றாங்க. அதான் நானும் எதோ சொல்லி தொலைக்கிறேன். ஆனா ஒன்னு இங்க வந்து கருத்து சொல்றேன் சொல்லி யாராவது ம@#$%, ம@##$%டனு பேசினிங்கனா அப்புறம் நான் #$%^த்த, @#$$#னு கேப்பேன். கெட்ட வார்த்தைல பேசினா எல்லாரும் பயந்து போய்டுவாங்க நினைக்காதிங்க சாமிகளா. ரொம்ப நாளா எழுதர புள்ளைங்க அவங்க பேர் கெட்டு போய்டகூடது சொல்லி டீசெண்டா அடங்கி போய்டராங்க. எல்லாரும் திருப்பி பேச ஆரம்பிச்சா நாம தாங்க மாட்டோம். திட்டுங்க தப்பு பண்றான் தெரிஞ்சா நல்லா திட்டுங்க. நீங்க செஞ்ச் தப்ப மறைக்க திட்டாதிங்க. ஆன எனக்கு அந்த பிரச்சனை இல்லை அதனால நீங்க நாக்க புடுங்கர மாதிரி கேள்வி கேட்டா நான் நீங்க நாக்கு, மூக்கு, வாய், பல்லு எல்லாம் புடுங்கிட்டு சாகர மாதிரி திருப்பி கேள்வி கேப்பேன். அதனால ஜாலியா சண்டை போடலாம். தயவு செஞ்சி நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க.

நன் ஒன்னும் இங்க புதுசா சொல்ல போரது இல்லை. எல்லாரும் சொல்லிட்டு இருக்க விஷயத்த தான் திருப்பி நானும் கத்த போறேன். அவங்க எல்லாம் சொல்றாங்க லிவிங் டுகேதர் சொன்னா நீங்க நினைக்கிற மாதிரி செக்ஸ் இல்லை அவங்க சேர்ந்து வாழராங்க கல்யாணம் மட்டும் தான் பண்ணிக்கில. சரி ரைட்டு அது அங்க இங்க என்ன நடக்குது தெரியுமா?? ஒரு வருஷம் பெங்களுர் போய் வேலை செஞ்சிட்டு வந்து மச்சி செம ஜாலி லைப்டா ஒரு வருஷத்துல 3 பிகர் கூட லிவ்விங் டுகேதர்டா சொல்றான். அது என்னடா கர்மம் கேட்டா கூட வேலை செய்யர பெண்ணு மச்சி அது எல்லாம் உனக்கு புரியாது சொல்றான். உடனே ஆள காட்டு நான் வெட்டி போடரேன். லிவ்விங் டுகேதர் புனிதமே அவனால கெட்டு போச்சுன்னு சொல்ல கூடாது. காந்தி மாதிரி வாழரவன் தைரியமா வெளியா சொல்லுவான் ஓசாம மாதிரி இருக்கவன் ஒளிய தான் பார்ப்பான். நாம வாழர மேலை நாட்டுல இது எல்லாம் சகஜம் தான். அது நம்ம ஊருக்கு வர அப்பொ வரட்டும். கௌசல்யா மேடம் கவலை படரதால அது வராம இருக்க போறது இல்லை (வந்தாச்சி இன்னும் நல்லா வளரல). இல்லை கலகலப்ரியா மேடம் சண்டை போடரதால நாளைக்கே இங்க எல்லாரும் தாலி கட்டாம இருக்க போரதும் இல்லை. 

எனக்கு தெரிஞ்சி நாம எல்லம் காட்டுவாசியா திரிஞ்ச அப்பொ நோ கல்யாணம். ஆரம்பத்துல மிருகங்கள் மாதிரி பிடிச்சவங்கக் கூட சேர்ந்து சந்தோஷமா இருந்தோம். அப்புறம் கொஞ்சம் அறிவு வளர்ந்த அப்புறம் மாத்தி மாத்தி லவ் பண்ணி பயபுள்ளைங்க லிவ்விங் டுகேதர்ல வாழ ஆரம்பிச்சிது. அதுக்கு அப்புறம் இவன் பொண்டாட்டியை அவன் கை பிடிச்சான் , அவன் பொண்டாடியை இவன் கை பிடிச்சான், ஏன் கூட இருந்தவன் என்னை விட்டு அவ கூட போய்டான் இப்படி எல்லாம் சண்டை வந்து கடைசில யாரோ ஒரு நாட்டாமை கண்டு பிடிச்ச தீர்ப்பு தான் கண்ணாலம்.... ஜாதி, மதம், மொழி, இனம். நாடு எல்லாம் வேற வேற இருக்கலாம் ஆன எல்லா இடத்துலையும் இந்த கருமம் அதங்க கல்யாணம் இருக்கு. அப்பொ உலகம் பூர இப்படி தான் கல்யாணம் வந்துச்சா? டவுட்டு..

ஆரம்பத்துல துணி இல்லாம திரிஞ்சோம். அப்புறம் கீழ மட்டும் மறைத்தோம், அப்புறம் 2 பீஸ், இப்படியே வளர்ந்து வித விதமா டிரஸ் பண்ணோம். இப்பொ?? மறுபடி 2 பீஸ் போய்டோம். என்ன்ன்ன.. அப்பொ இலை, தழை.. இப்பொ பிரண்டட் துணி. எல்லாமே ஒரு சுழர்ச்சி தான். இதுக்கு போய் ஏன் அடிச்சிகிட்டு சாகறிங்க? லிவ்விங் டுகேதர் புடிச்சவன் அப்படியே வாழட்டும் மேல் நாட்டுல. இங்க முடிஞ்சவரை வராம இருந்தா நல்லது வந்துட்டா ஒன்னும் பண்ண முடியாது... நாங்க பேசறாது ஒழக்கமா வாழர நாலு பேர் பத்தி இல்லை. அந்த பேர சொல்லி தப்பு பண்ற நானுரு பேர பத்தி. திரைக்கு பின்னாடி வச்சி மச்சி இங்க துபாய்ல ஒரு பொண்ணுடா பெட் ஷேரிங் கேக்கரா என்னடா சொல்ற சொன்ன... டே மப்ளே செல் நம்பர் சொல்லுடா தான் கேப்பேன். அதே நான் இந்தியால இருந்தா எவானாவது இப்படி சொன்ன... அட போ மச்சி சும்ம வயித்து எரிச்சல கிளப்பாத.. எங்க அப்பா கிட்ட செருப்படி வாங்கி வைக்கவா கேப்பேன். நீங்க காறி துப்பர கல்ச்சர் தான் கொஞ்சமாவது தனி மனித ஒழுக்கத்த காப்பாத்திகிட்டு இருக்கு. 

யாரோ சொன்னாங்க அமெரிக்காவுல பொட்டு வச்சா டாட்டட் ஹெட் (Doted Head) சொல்லி நக்கல் அடிப்பாங்க சொல்லி. அவனுக்கு அது புதுசு அதான் நக்கல் அடிக்கிறான். இங்க வந்து சொன்னா அவனை செருப்பாலே அடிப்போம். காட்டுவாசி கூட்டத்துக்கு நடுவுல போன நம்மல வித்தியாசம பார்ப்பாங்க. அதுக்காக நாம எல்லாம் இங்க ட்ரெஸ் இல்லாம் சுத்த முடியுமா? எங்க போறிங்களோ அங்க அந்த கலாச்சாரத்த கடைபிடிங்க அதை இங்க திணிக்க வேண்டாமே. ஒரு விஷயம்... நல்ல விஷயமா இருந்த இங்க எடுத்து வாங்க. அணும், பெண்ணும் சேர்ந்து வாழரது தனி மனித சுகந்திரம் அதுல தலை இடாதிங்க சொல்றது 100% சரி. ஆன சேர்ந்து வாழனும். சும்மா வருஷத்துக்கு ஒருத்தவங்க கூட இருந்து இவங்க சரி இல்லை அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா மாப்பு வசந்து சொன்ன மாதிரி சொல்றத தவிர வேற வழி இல்லை... 

டிஸ்கி : இங்கு வரும் கமெண்டுகளுக்கு ப்ளாக் ஓனர் பொறுப்பு இல்லை. அவர் அவர் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளவும்... :)) .  இதனால வரும் சட்ட சிக்கல், பேண்ட் சிக்கல் எல்லாம் துபாய் கோர்ட்டில் வைத்து தீர்க்கபடும்... வேறு எந்த கோர்டுக்கும் வர இயலாது விருப்பம் உள்ளவர்கள் மட்டும் சண்டை போடவும்... :))

.

Saturday, November 13, 2010

அப்பாக்கள் பாவம்... :-(

இது பிள்ளைகள் மேல் பாசமாக இருக்கும் அப்பாக்களின் கண்ணீர் கதை. இங்கு குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் யாவும் உண்மை.

சம்பவம் 1 : நான்கம் வகுப்பு படிக்கும் தருன் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருக்கிறான், அப்பா சமையல் செய்கிறார். அம்மா டி.வி.யில் சீரியல் பார்க்கிறார். மகன் தனியாக சிரமபடுகிறான் என்றூ மகன் மேல் உள்ள பாசத்தில் சமையலுக்கு இடையில் மகனுக்கு உதவி செய்கிறார். சமையலில் குறை இருந்தால் மனைவி திட்டுவார் என்ற பயத்தில் பாடத்தில் ஒரு சில விஷயங்களை தவறாக சொல்லி கொடுத்துவிட்டார். மகன் 100க்கு 13 மார்க்கு வங்கி விட்டான். இது ஒரு தவறா? அதுக்கு போய் நீங்க சொல்லி கொடுக்கலனா அவன் 83 மார்க் வாங்கி இருப்பான்னு ஒரே திட்டு. நீ சொல்லி கொடுத்து இருந்தா அவன் 3 மார்க்குகூட வாங்கி இருக்க மாட்டான் சொல்லி முடிக்கல பூரி கட்டை மண்டைல லேண்ட் ஆகிடுத்து. அந்த கணவன் கண்ணை கசக்கிட்டு சமயல் கட்டுகுள்ள போன காட்சி இன்னும் என் மனசுல இரணமா இருக்கு.

சம்பவம் 2 : அம்மா அரைகிலோ ஐஸ்கிரிம் தனியா உக்காந்து சாப்பிடராங்க. அப்பா எப்பவும் போல சமைக்கிறார். சமையல்கட்டுல இருந்து  ஹால் வந்து ப்ரிஜ் திறந்து ஒரு மிராண்டா எடுக்கறார் (அவங்ககிட்ட அனுமதி வாங்கிதான்). அவர் பொண்ணு பச்ச புள்ளை பாவம் ”டாடி எனக்கு” அப்படினு கேக்குது. ஊருக்கே தெரியும் நாம எல்லாம் வெளிய டெரரா இருந்தாலும் மனசு பூ மாதிரி, அதுலையும் சின்ன புள்ள கேட்டா மனசு மெழுகு மாதிரி உருகி போகும். நம்ம ஆளும் கொஞ்சமா... நிஜமா கொஞ்சோண்டுதான் கொடுத்தான். அதுக்குள்ள முதுகுல அணல் அடிக்குது பணியன் கருகர வாசனை (ஆத்துகார அம்மா மொரைக்கராங்க இல்ல..). அவளுக்கு மட்டும் உடம்புக்கு எதாவது வரட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு அப்படினு மிரட்டல். நம்ம ஆளும் இராத்திரி புல்லா சாமி கும்பிட்டான். என்ன புண்ணியம்.. காலைல புள்ளைக்கு ஜுரம் (அவ்வ்வ்வ்). வீட்டுக்கு போக பயந்துட்டு ஆபிஸ் விஷயமா வெளியூர் போறேன் சொல்லிட்டு நம்ம ஆளு மூனு நாள பஸ் ஸ்டாண்ட்ல தூங்கி பப்ளிக் பாத்ரூம்ல குளிச்சி ஆபிஸ் போறான். என்ன கொடுமை சார் இது??

வர வர நாட்டுல பாசத்த காட்ட கூட பயப்பட வேண்டி இருக்குபா. நம்ம பூ மாதிரி மனசு யாருக்கு புரியுது. இந்த புள்ளைங்களும் கரைக்டா அம்மா கொடுக்க மாட்டாங்க அப்பா தான் இளிச்சவாயன் தெரிஞ்சி நம்மல தான் அட்டாக் பண்ணுதுங்க.  பொது மக்களே ஆண்கள் செய்வது சரியென்றால் எனக்கு தமிழ் மணத்தில் பாசிட்வ் ஓட்டு போடுங்கள். தவறு என்றால் நெகடிவ் ஓட்டு போடுங்கள். அதற்க்கு முன்னால் தமிழ் மணம் ஓட்டு பட்டை தேடி கண்டு பிடியுங்கள். 

டிஸ்கி : யோ மங்கு நீயும் ராம்ஸும் (அதான்யா நம்மா முன்னால் பன்னிகுட்டி) என் மனச ரொம்ப பாதிக்க வச்சிட்டிங்க. நீ ஒரே சீரியஸ் பதிவா போடற. அவர் ஒரே சீரியஸ் கமெண்ட்டா போடறாரு. போங்க போய் சமுகத்த திருத்தி நாசமா போங்க. நானும் வந்து கொஞ்ச நாள்ள சமுகத்த திருத்தரேன். பிரபலபதிவர் ஆனதுல இருந்து நீங்க சரி இல்லை. அப்படினு திட்டனும் போல ஆசையா இருக்கு. ப்ச்ச்.. என் நண்பர்கள போய்டிங்க அதனால இரண்டு காமடி பதிவர்களை இழந்த வருத்ததுடன் உங்கள் புதிய பரிமாணத்தை வாழ்த்தி வரவேற்று பின்தொடர்கிறேன்.

.

Saturday, November 06, 2010

ஒரு கடிதம்...

மக்கா எல்லாறும் நல்லா இருக்கிங்களா? கண்டிப்பா நல்லாதான் இருப்பிங்க ஏன்னா நான் பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சி. இண்ணைக்கு மட்டும் ஏண்டா எழுதற கேக்கறிங்களா?? தீபாவளி சொல்லி எல்லா பயலும் கடை பூட்டிட்டான் என்ன செய்யரது தெரியவில்லை அதான். நானே சொந்தமா கருத்து சொல்ல போறேன். நான் பேசி முடிக்கறவரை யாரும் குறுக்க பாயகூடாது.

நானும் ரொம்ப நேரம் யோசிச்சி பார்த்தேன் யாரை தாக்கி புனைவு எழுதலாம்னு ஒரு ஆளும் சிக்கல. தைரியமா பதிவை மட்டும் போட்டு எதிர்ப்பு தெரிவிச்சி வர கமெண்ட்ஸ் பப்ளிஷ் பண்ணாம போட்டு அமுக்கி கொல்ர ஒரு பதிவர பத்தி எழுதலாம் நினைத்தேன். அதாங்க நாட்டுக்கு நல்லது பண்றவங்க எல்லாம் வாய்ல மட்டும் பண்ணுங்க செயல்ல காட்டாதிங்க அப்படினு சொன்னாரே வெண்ணிற இரவுகள் அப்படினு ஒரு பதிவர்.. ஐயையோ!!! புனைவுள பேர் சொல்ல கூடாது இல்ல?? சாரி சாரி மறந்துடேன்... Firstல இருந்து.. செயல்ல காட்டாதிங்க சொன்னாறே கருமைக்கும் பகலுக்கும் எதிரான பதிவர் அவர்தான்.  அப்புறம் அவர் ஹிட்ஸ் வாங்க அவர் எழுதறாரு நமக்கு என்னா சொல்லி விட்டேன். அதுவும் இல்லாம வெளியூர்கரன் ஒருத்தன் சண்டைக்கு வரன். கேட்டா பட்டா பட்டி போட்ட ஒரு ஆளும் இந்த பயலும் சேர்ந்து இங்க இரண்டு பேர (அடிக்க) தத்து எடுத்து இருக்காங்களாம். வேற யாரும் அவங்க மேல கை வைக்க கூடாதாம்.

இப்பொ யார கலாய்க்கலாம்... அட!!! யார்பா அது சோத்து கை பக்கம் கும்பலா நிக்கறிங்க.. ஓஓஓ Followers... ஸிஸ்டர்ஸ், பிரதர்ஸ், மாமன், மச்சான் எல்லாறும் இருக்கிங்க போல லைட்டா முன்னாடி வாங்க. ஆமாம் நிறையா ப்ளாக்ல 100, 200, 300 இருக்கிங்க ஆனா ஒட்டு 30, 40 கமெண்ட் 50 இல்லைனா 60 தான் வருது. நீங்க எல்லாம் ஆளுக்கு ஒரு கமெண்ட் போட்டா கூட 200 கமெண்ட் தாண்டுமே? உண்மை சொல்லுங்க நீங்க எல்லாம் ஒரே ஒரு பதிவு மட்டும் படிச்சிட்டு புடிச்சி Follow பண்ணிட்டு அதுக்கு அப்புறம் அந்த ப்ளாக் பக்கம் எட்டி பாக்காதவங்க தான?? இல்லைனா நிஜமா படிக்கறிங்களா?? சும்மா ஒரு டவுட் கேட்டா இப்படி கோச்சிகறிங்க.

இரண்டு மூனு பதிவு படிங்க பிடிச்சா அப்புறம் தொடருங்க. அது மாதிரி இரண்டு மூனு பதிவு ரொம்ப மொக்க போடராங்க தோனுச்சினா Unfollow பண்ணிடுங்க.. இல்லைனா நீங்க 300 பேரும் அவர் பதிவ இன்னும் படிக்கறிங்க நம்ம்ம்ம்பி அவர் மொக்க போட்டே போவாரு. அட உங்களுக்கு டாஷ்போர்டு பாக்கா ஈஸியா இருக்குமே சொன்னேன்.  நல்ல பதிவு (உங்களுக்கு பிடிச்ச பதிவு) மட்டும் காமிக்கும் இல்ல...அது மாதிரி இந்த பிரபல பதிவர் எல்லாம் என்னை 300 பேர் Follow பண்றாங்க அவங்க ஆதரிப்பாங்க சொல்லி டிசைன் டிசைனா எழுதறாங்க....நீங்க நல்லவங்க ஆதறிக்க மாட்டிங்க. ஆனா என்னை மாதிரி கமெண்ட் போடரவங்க முதல்ல சொல்ற வார்த்தை... உங்களை பின் தொடர்ர 250 பேரும் முட்டாளா தான் இருக்கனும்... ஏதோ பாத்து செய்ங்க...

இத படிச்சதும் மொதல்ல என்னை Unfollow பண்ணுவிங்களே... ஹா..ஹா..ஹா ரைட்டு நடக்கட்டும். அப்புறம் அது என்னா இப்பொ எல்லாறூம் புதுசா நீயுஸ் லெட்டர் அனுப்ப ஆரம்பிச்சிட்டிங்க முடியலபா விட்டுங்க..... அண்ணெ என்ன சொன்னிங்க சரியா கேக்கல... அதான் அதுலே Unsubscribe இருக்கே அதை கிளிக் பண்ணுடா வெண்ணையா?? தாங்ஸ் அண்ணே... கிளிக் பண்ணிடரேன்.

.