Wednesday, July 04, 2012

கொல்கத்தாவில் கொசக்சி...

தன் கனத்த தொப்பையை தூக்கி கொண்டு எப்பொழுதும் போல் அதிகாலை ஓட்டத்தை துவங்கினார் பேனர்ஜி. பத்து நிமிடம் கழிந்த பொழுது ஒரு ஆள் ஆரவாரமற்ற சாலையில் ஓடி கொண்டு இருந்தார். அப்பொழுது இருளின் நிசப்தத்தை கிழித்து கொண்டு கூ.... சிக்புக்.. சிக்புக்... கூ சிக்புக் சிக்புக் என்ற என்ற மனித குரல அவர் காதை கிழித்தது. தூரத்தில் ஒரு பைக் வந்து கொண்டு இருந்தது.

பேனர்ஜியின் பக்கத்தில் வந்து அந்த பைக் நின்றது. அதில் இருந்து ஒரு இளைஞன் இரங்கினான். சிவந்த கண்களும் எண்ணை கானாத தலையும் அவன் தூங்கி, குளித்து பல நாள் ஆனதை சொல்லாமல் சொல்லியது. அடுத்து வந்த அந்த இளைஞன். சார் எங்க போறிங்க இண்டர்வியூவா? வாங்க நான் உங்களை கொண்டு போய் விடரேன் உங்களுக்கு உதவ எப்பொழுதும் காத்து கொண்டு இருக்கிரது இந்தியன் இரயில்வே என்றான்.

அவன் பேச்சும் உருவமும் ஒரு மிரட்சியை கொடுத்த காரணத்தால் பேனர்ஜி தயங்கியபடி. இல்லை நான் இப்படியே போரேன். நீங்க போங்க என்றார். உடனே முகம் மாறிய இளைஞன். உங்க இஷ்டத்துக்கு நீங்க போனா அப்புறம் நாங்க எதுக்கு இவ்வளவு பெரிய இரயில் விட்டு இருக்கோம் என்று தன் பைக்கை காட்டினான். குழம்பி நின்ற பேனர்ஜி.. இல்லை வந்து என்று இழுக்க. தன் முதுகில் மறைத்து வைத்து இருந்த இரும்பு தடியால் பேனர்ஜி தலையில் பலமாக தாக்கினான். மயங்கி விழுந்த பேனர்ஜியை தூக்கி தன் பைக் பெட்ரோல் டேங்க் மேலே போட்டுவிட்டு இந்திய இரயில்வே உங்களை அன்புடன் வரவேற்க்கிரது என்று சொல்லி தலையை குனிந்து வணங்கினான்.

வலியால் முனகியபடி கண்விழித்த பானர்ஜி தான் ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவசரமாக எழுந்து சுற்றி பார்த்தார். அந்த இளைஞன் அவரை நோக்கி வந்து கொண்டு இருந்தான். அருகில் வந்து ”சார் தூங்கிட்டிங்களா. நான் தான் உங்களை இங்க தூக்கி வந்தேன். நீங்க இண்டர்வியூ போக வேண்டிய ஆபீஸ் இதான் என்று மொட்டை மாடி விளிம்பை காட்டினான். பயத்தில் வியர்த்து கொட்டிய பேனர்ஜி. “இல்லை இண்டர்வியூ கேன்சல் ஆகிடுத்து” என்று சொல்லி முடிக்கு முன் “உன்னை தான் கூப்பிடராங்க போய்யா” என்று மாடி மேல் இருந்து தள்ளி விட்டான். ஆஆஆ.. என்ற குரல் காற்றை கிழித்த சில வினாடிகளில் சொத் என்று கேட்ட சப்தம் அவர் தரையில் மோதி உயிர் இழந்தார் என்று ஊர்ஜித படுத்தியது.

கீழே எட்டி பார்த்த இளைஞன் இந்தியன் ரயில்வே உங்களை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும். எங்கள் சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றி!! என்று சொல்லி விட்டு தன் போனை எடுத்து ஹலோ!! என்னது திவ்யா பிரசவ வலியால் துடிக்கிராங்களா? இதோ வருகிறது இந்தியன் ரயில்வே என்று கூறிவிட்டு... திவ்யா திவ்யா அழாதடா... நான் வந்துட்டேண்டா என்று சொல்லி கொண்டே... கூ சிக்புக் கூ சிக்புக் என்று ஓட தொடங்கினான்... (அடுத்து யாரை கொல்ல போரானோ)

டிஸ்கி : இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக பல முறை முயற்சி செய்து பாடர் மார்க் கூட எடுத்து பாஸ் செய்ய முடியாமல் மனநிலை பாதிக்கபட்ட கொசக்சி பசபுகழ் கதை இது... :)

.