Thursday, July 21, 2011

தலைப்பு தெரியாது

சின்ன சின்ன ஆசை : ஆள் நடமாட்டம் இல்லாதா பச்சை பசேல் என்ற காடு. சூரிய ஒளி கூட எட்டி பார்க்காத ஏகாந்தம். பறவைகளின் ஒலியும், வண்டுகளின் ரீங்காரம், மிருகங்களின் கர்ஜனையும் மட்டும் எனக்கு துனையாக.

இரவில் வெட்ட வெளியில் பக்கத்தில் பற்ற வைத்த நெருப்பை மட்டும் துனையாக கொண்டு உறங்க வேண்டும். காலையில் சூரியனின் இளம் கதிர்கள் என்னை துயில் எழுப்ப வேண்டும். அருகில் உள்ள அருவியில் உடல் குளிரும் வரை ஆனந்த குளியல். பின்னர் கரை ஏறி சூரியனின் இளம் சூட்டின் கதகதப்பில் உடல் காய வேண்டும்.

அங்கு இங்கு உலாவும் குட்டி விலங்குகளை வேட்டையாடி நெருப்பில் சுட்டு ஆற்று படுகையில் உள்ள பாறயில் படிந்து இருக்கும் உப்பை தடவி அதை சுவைக்க வேண்டும். சில நேரம் காட்டு விலங்குகள் என்னை துரத்தவும் வேண்டும் தப்பியோடி தஞ்சம் புக மறைவிடமும் வேண்டும்.

கொட்டும் மழையில் நனைய வேண்டும் உடல் குளிரில் கண்ணில் தெரியும் குகையில் ஒதுங்க வேண்டும். உள்ளே இருந்து பசி இல்லாத சிங்கம் தலை நிமிர்த்தி பார்த்து மீண்டும் துயில் தொடர வேண்டும்.
 
இந்த நரகத்தின் நாகரிகம் மறந்து பதிவுலகின் பாலிடிக்ஸ் துறந்து.
 
மீண்டும் ஒரு முறை ஆதிமனிதனாய்... :)
 
டிஸ்கி : இந்த காட்டில் அரியவகை ஜெந்துக்கள் டெரர் கும்மி குரூப்பும் வசிக்க அனுமதி உண்டு.
 
.

Sunday, July 10, 2011

கலி முத்தி போச்சி....

உறங்கி கொண்டு இருந்த கணேஷ் திடுகிட்டு விழித்தான். அருவமாக எதோ ஒன்று அவன் படுக்கைக்கு அடுத்து நிற்பதை போல் உணர்ந்தான். எழுந்து விளக்கை போடலாம் என்று நினைத்த போது விளக்கை போட வேண்டாம் என்று யாரோ கூறுவதை போல் உணர்ந்தான். என்ன நடக்கிறது என்று யோசிக்க முயற்சி செய்த நேரத்தில் அவன் தலையை யாரோ வருடுதுவது போல் உணர்ந்தான்.

உடலில் உள்ள ரோமகால் எல்லாம் சில்லிட்டு அடிவயிற்றில் ஒரு பயத்தினை உணர்ந்த வேளையில் அவன் நினைவு தவறியது. கண்விழித்து பார்த்தபொழுது அவன் ஒரு முற்றிலும் புதிய உலகில் இருந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு உயிரினமும் இல்லை ஆனால் உணர்வுக்கு எட்டிய தூரத்தில் பல அருவங்கள் உலவி கொண்டு இருப்பதை உணர முடிந்தது.

அருகில் உணர்ந்த ஒன்றை கூப்பிட நினைத்தான் அது தானாக அருகில் வந்தது. என்ன வேண்டும் என்ற கேள்வி அது கேட்பது போல கணேஷ் மனதில் தோன்றியது. நீங்கள் யார்? நான் எங்கு இருக்கிறேன் என்று கேட்க்க நினைத்தாதும். நீங்கள் அல்ல நாம் யார் என்று கேள் என்ற பதிலை அது அவன் மனதில் பதிய வைத்தது. அப்போது தான் கணேஷ் கவனித்தான் அவனும் அருவமாக மாறி இருந்தான். இங்கு ஒலிகள் இல்லை எல்லா உரையாடல்களும் நேரடியாக மனதில் இருந்து நடந்து கொண்டு இருக்கிறது.

அது மேலும் தகவல்களை பறிமாரியது என் அடையாளம் XXBBAC நீ XXYYZZ ஒரு முக்கிய சோதனைக்காக உன்னை பூமிக்கு அனுப்பி வைத்தோம். அங்கு உன் பெயர் கணேஷ். சோதனை முடிந்ததால் இங்கு திரும்ப அழைக்கபட்டாய். நாம் இப்படி தகவல்களை பறிமாறிகொள்ள நமக்கு கனிசமான அளவு எரிபொருள் தேவை படுகிறது. அது பூமியில் உள்ள மனிதர்களின் மூளையில் இருந்து உண்டாகும் மின்சார சக்தியால் மட்டுமே உண்டாக்க முடியும்.

அதற்க்காக நாம் ஒரு குறிபிட்ட இடைவெளியில் பூமியில் ஒரு செல் உயிரிகளை விதைத்து வளர்க்கிறோம். அது பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதானாகி பின்னர் நானோ மனிதன் என்ற நிலையை அடையும் பொழுது நாம் மொத்தமாக பூமியில் அழிவை உண்டாக்கி அவர்கள் மூளைகளை அறுவடை செய்வோம். செல்கள் எந்த அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது என்று பார்க்க நமது இனத்தை சேர்ந்த ஒருவரை பூமிக்கு அனுப்பி அவார்கள் மூளையில் உள்ள தகவல்கள் சேகரித்து வந்து பரிசோதிக்கிறோம்.

ஆனால் இந்த முறை விதைத்த செல்கள் எல்லாம் வீணாகிவிட்டது. நாம் எத்தனையோ வழிகளை உபயோகித்தும் கோபம், பொறாம், வஞ்சம் இப்படி பல களைகள் அவர்கள் செல்களில் கலந்து இருப்பது தெரிகிறது. அதனால் வேகமாக இந்த பூமியை அழித்துவிட்டு புதிய பூமியை படைக்க வேண்டும் என்று கூறி கொண்டே recycle என்ற பட்டனை தட்டியது ரீசைக்கிள் என்று அழைக்கபட்ட தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும் அந்த எந்திரம் பூமியை தன்னை நோக்கி இழுக்க தொடங்கியது.....

.