Friday, August 17, 2012

வாழ்கை வாழ்வதற்கே


மக்களே!! ஊர்ல எவனாவது உங்களை பார்த்து தண்ணி அடிக்காத, தம் அடிக்காத, பொண்ணுங்க பின்னாடி சுத்தாத இப்படி எல்லாம் அட்வைஸ் பண்ணா காறி மூஞ்சி மேலே துப்பிட்டு போய் உங்க வேலையை பாருங்க உங்க அப்பா சொன்னா மட்டும் காதில் வாங்காம போய்டுங்க. இல்லைனா அடுத்த வேலை சோறு கிடைக்காது.

ஒரு அனுபவபட்ட அறிவாளி சொல்ரேன். இருப்பது ஒரு வாழ்கை. அதை சந்தோஷமா வாழுங்க. எல்லாம் அளவோட இருக்கவரை எதுவும் தப்பில்லை. மாசத்துக்கு ஒரு நாள் மூச்சி முட்ட குடிச்சிட்டு வாந்தி எடு. அப்போ அப்போ ஒரு தம் அடி. எவ்வளவு பொண்ணுங்க கூட சுத்த முடியுமோ சுத்து. ஆனா எதிலும் அடிமையாகிடாதிங்க. 

இதை உன் கேர்ள் பிரண்டுகிட்ட சொன்னா அவன் கிடக்கரான் பொறுக்கி. நீ தான் கிரேட் அப்படினு சொல்லுவாங்க. ஆனா நாளைக்கு என்ன வேணா நடக்கலாம். ”சாரி டா எங்க வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்துக்கலை” அப்படினு சொல்லிட்டு அந்த புள்ளை ஒரு நல்ல லைப்ல செட்டிலான பையனா பார்த்து கட்டிகிட்டு (நல்லா கவனி மகனே அவன் லைப்ல செட்டிலாகி இருக்கனும் அதான் முக்கியம்.) அதுக்கு அடுத்த நாள் “டேக் கேர் டா உன் நல்ல மனசுக்கு நல்ல பொண்ணு கிடைப்பா. ஐயம் அன்லக்கி” அப்படினு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட்டு அதோட உன் அத்தியாயத்த மூடி வச்சிட்டு ஹனி மூன் போய்டுவா. நீ அந்த எஸ்.எம்.எஸ் பார்த்து பார்த்து புல்லரிச்சி போவ. அவ ஒரு புள்ளையை பெத்துட்டு வந்து “சம் வாட் லைப் கோயிங் டா. ஸ்டில் ஐ ரிமம்பர் யூ” அப்படினு அடுத்த எஸ்.எம்.எஸ் போடுவா. நீ அதை வச்சி பார்த்து பார்த்து அடுத்த நாலு வருஷம் நாசமா போவ.

என்னைக்காவது ஒரு நாள் அந்த புள்ளை வீட்டுகாரன் மூக்கு முட்ட குடிக்கிரத பார்த்துட்டு என்ன உன் புருஷன் குடிக்கிராரு. உனக்கு தான் தண்ணி அடிச்சா பிடிக்காதே கேட்டு பாரு. "ச்சீ ச்சீ நீ நினைக்கிர மாதிரி எல்லாம் இல்லைடா அவரு ஒரு Social Drinker" அப்படினு பதில் வரும். அப்போ தான் நீ லைட்டா யோசிப்ப “நாமளும் அப்போ அப்போ லைட்டா குடிச்சி இருக்கலாமோ” அப்படினு. 

இது சும்மா பிகரை வச்சி சொன்ன உதாரணம் (அப்போ தான் உன் மண்டையில் சட்டுனு உரைக்கும்). நண்பர்கள், சொந்தகாரன், மேனேஜர், அண்ணன், தம்பி இப்படி உறவு மாறலாம் ஆனால் கடைசியில் உண்மை ஒன்னு தான் அதை கீழ டிஸ்கியில் சொல்லி இருக்கேன் பாரு.

டிஸ்கி : நல்லவன் பெயர் வாங்கி நாக்கு தான் வழிக்கனும் மச்சி!!!

உண்மையான டிஸ்கி : அட தூக்கம் வரலைங்க. இதை எல்லாம் சீரியஸா படிச்சிகிட்டு. இப்போ பாருங்க எவனாவது ஒரு கேனை வந்து எங்கையோ செம்மையா வாங்கி இருக்காண்டானு கமெண்ட் போடுவான். ஆனா இது எல்லாம் நாட்டுல நடக்கர நெசம்ங்க.. :)

.

Wednesday, July 04, 2012

கொல்கத்தாவில் கொசக்சி...

தன் கனத்த தொப்பையை தூக்கி கொண்டு எப்பொழுதும் போல் அதிகாலை ஓட்டத்தை துவங்கினார் பேனர்ஜி. பத்து நிமிடம் கழிந்த பொழுது ஒரு ஆள் ஆரவாரமற்ற சாலையில் ஓடி கொண்டு இருந்தார். அப்பொழுது இருளின் நிசப்தத்தை கிழித்து கொண்டு கூ.... சிக்புக்.. சிக்புக்... கூ சிக்புக் சிக்புக் என்ற என்ற மனித குரல அவர் காதை கிழித்தது. தூரத்தில் ஒரு பைக் வந்து கொண்டு இருந்தது.

பேனர்ஜியின் பக்கத்தில் வந்து அந்த பைக் நின்றது. அதில் இருந்து ஒரு இளைஞன் இரங்கினான். சிவந்த கண்களும் எண்ணை கானாத தலையும் அவன் தூங்கி, குளித்து பல நாள் ஆனதை சொல்லாமல் சொல்லியது. அடுத்து வந்த அந்த இளைஞன். சார் எங்க போறிங்க இண்டர்வியூவா? வாங்க நான் உங்களை கொண்டு போய் விடரேன் உங்களுக்கு உதவ எப்பொழுதும் காத்து கொண்டு இருக்கிரது இந்தியன் இரயில்வே என்றான்.

அவன் பேச்சும் உருவமும் ஒரு மிரட்சியை கொடுத்த காரணத்தால் பேனர்ஜி தயங்கியபடி. இல்லை நான் இப்படியே போரேன். நீங்க போங்க என்றார். உடனே முகம் மாறிய இளைஞன். உங்க இஷ்டத்துக்கு நீங்க போனா அப்புறம் நாங்க எதுக்கு இவ்வளவு பெரிய இரயில் விட்டு இருக்கோம் என்று தன் பைக்கை காட்டினான். குழம்பி நின்ற பேனர்ஜி.. இல்லை வந்து என்று இழுக்க. தன் முதுகில் மறைத்து வைத்து இருந்த இரும்பு தடியால் பேனர்ஜி தலையில் பலமாக தாக்கினான். மயங்கி விழுந்த பேனர்ஜியை தூக்கி தன் பைக் பெட்ரோல் டேங்க் மேலே போட்டுவிட்டு இந்திய இரயில்வே உங்களை அன்புடன் வரவேற்க்கிரது என்று சொல்லி தலையை குனிந்து வணங்கினான்.

வலியால் முனகியபடி கண்விழித்த பானர்ஜி தான் ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவசரமாக எழுந்து சுற்றி பார்த்தார். அந்த இளைஞன் அவரை நோக்கி வந்து கொண்டு இருந்தான். அருகில் வந்து ”சார் தூங்கிட்டிங்களா. நான் தான் உங்களை இங்க தூக்கி வந்தேன். நீங்க இண்டர்வியூ போக வேண்டிய ஆபீஸ் இதான் என்று மொட்டை மாடி விளிம்பை காட்டினான். பயத்தில் வியர்த்து கொட்டிய பேனர்ஜி. “இல்லை இண்டர்வியூ கேன்சல் ஆகிடுத்து” என்று சொல்லி முடிக்கு முன் “உன்னை தான் கூப்பிடராங்க போய்யா” என்று மாடி மேல் இருந்து தள்ளி விட்டான். ஆஆஆ.. என்ற குரல் காற்றை கிழித்த சில வினாடிகளில் சொத் என்று கேட்ட சப்தம் அவர் தரையில் மோதி உயிர் இழந்தார் என்று ஊர்ஜித படுத்தியது.

கீழே எட்டி பார்த்த இளைஞன் இந்தியன் ரயில்வே உங்களை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும். எங்கள் சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றி!! என்று சொல்லி விட்டு தன் போனை எடுத்து ஹலோ!! என்னது திவ்யா பிரசவ வலியால் துடிக்கிராங்களா? இதோ வருகிறது இந்தியன் ரயில்வே என்று கூறிவிட்டு... திவ்யா திவ்யா அழாதடா... நான் வந்துட்டேண்டா என்று சொல்லி கொண்டே... கூ சிக்புக் கூ சிக்புக் என்று ஓட தொடங்கினான்... (அடுத்து யாரை கொல்ல போரானோ)

டிஸ்கி : இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக பல முறை முயற்சி செய்து பாடர் மார்க் கூட எடுத்து பாஸ் செய்ய முடியாமல் மனநிலை பாதிக்கபட்ட கொசக்சி பசபுகழ் கதை இது... :)

.

Saturday, June 16, 2012

இனி என் தமிழ் விரைந்து சாகும்..

முன்னுரை : இது யாருடனும் விவாதம் செய்ய எழுதபட்ட பதிவல்ல. வீதியின் புழுதிகளில் வீழ்ந்து பொலிவிழந்து, கண்டவர் கால்பட்டு கசங்கி கிடக்கும் தாய் தமிழை கை கொடுத்து தூக்க இயலாமல் வேதனையுடன் வேடிக்கை பார்க்கும் ஒரு தமிழ் காதலனின் உணர்வுகள் என்று மட்டும் பார்த்து சிரித்துவிட்டு செல்லவும்.

என் தாயைவிட அடுத்த பெண் அழகு என்று அடுத்தவர் சொல்லும் பொழுது எத்தனை முறை திரும்பி பார்த்தாலும் ஏனோ என் தாய் மட்டுமே அழகாய் தெரிகிறாள். நம்மாள் தமிழில் நல்ல கவிதைகள், கட்டுரைகள், கதைகள் படைக்கவும் முடியவில்லை முன்னோர் படைத்ததை அடுத்தவர் உமிழும் பொழுது காக்கவும் முடியவில்லை. விவாதித்த காலம் எல்லாம் வீண் வாதம் செய்த காலமாய் தோன்றுவதால் இன்று விவாதிக்க வேண்டிய நேரத்திலும் அமைதியாக இருக்கவே தோன்றுகிறது.

இன்னும் சில நூற்றாண்டுகளில் நான் ரசித்து படித்த தமிழ் புத்தகங்கள் மண்ணுக்கடியில் மட்டும் கிடைக்கும். தமிழனின் வீரமும், ஈரமும், ஈகையும், காதலும் அதற்கு அடுத்த சில நூற்றாண்டுகளில் கரைந்து காணாமல் போக போகும் கோவில் சுவர்களில் மட்டும் யாருக்கும் புரியாத எழுத்துகளாய் கல் வெட்டில் என்றாவது ஒரு நாள் ஒரு அயல் நாட்டு ஆராய்ச்சி மாணவன் வந்து படித்து சொல்வான் என்று காத்து கிடக்கும்.

விருந்துக்கு வந்த வெள்ளையனை வேட்டைக்கு அழைத்து சென்று வெறும் கையால் புலியை வீழ்த்தி அதன் பல் பிடுங்கி பரிசாக கொடுத்த மருதுவின் வீரம் பரங்கி பிரபுவின் நாட்குறிப்பேட்டில் மட்டும் காணப்படும். தினவெடுத்த தோள்கள்களுடன் வெள்ளையருடன் வாளெடுத்து வீசிய வரலாறு அந்நிய மொழியில் படித்து அந்த வம்சத்தில் வந்தவர்களா நாங்கள் என்று அதிசயக்கும் நாள் வந்து கொண்டு இருக்கிறது.

வாழ்நாள் எல்லாம் அர்ப்பணித்து ஞானாலயம் எழுப்பிய தியாகமெல்லாம் வசதியாக வாழ தெரியாமல் வாரி இறைத்து வீணாக்கிய வரிசையில் சேர்க்கபடும். அந்நியர் கையால் தமிழன் அழிந்ததை வேடிக்கை பார்க்க முடிந்த நம் கண்ணேதிரில் நம் தமிழ் அழிவதை மட்டும் வேடிக்கை பார்க்க முடியாதா என்ன? வீழ்வது தமிழாக இருந்தாலும் வாழ்வது நாமாக இருக்கட்டும்.

முடிவுரை : சுற்றி நிகழ்ந்த சில நிகழ்வுகளால் சுடபட்டு வந்து விழுந்த வார்த்தைகளின் வடிகல் இது. உங்கள் மாற்று கருத்துகளை கேட்க என் செவிகள் திறந்து இருக்கவில்லை. அதனால் விவாதங்களை தவிர்க்கவும். நன்றி!!

.

Friday, May 04, 2012

திறமை வரமா? சாபமா?

குழந்தைகளே சில நேரத்தில் திறமை கூட சாபமா மாறிவிடுகிறது அதை பற்றி தான் நாம இன்னைக்கு பார்க்க போகிரோம்.

ஊருக்குள்ள எத்திக்கல் ஹாக்கர் (Ethical Hacker) அப்படினு ஒரு சில பயபுள்ளைங்க இருக்கு. இவங்க வேலை ஹாக்கிங் தான் ஆனா ஹாக் பண்ணி உள்ளே போய் ஒன்னும் செய்ய மாட்டாங்க. இங்க இங்க எல்லாம் பாதுகாப்பு குறைவா இருக்கு இதை சரி பண்ணுங்கனு சொல்லி உங்களை எச்சரிப்பாங்க. இவங்களை பத்தி சுறுக்கமா சொன்னா நல்ல திருடனுங்க. ஒரு வீட்டில் நுழைந்து திருட முடியுமா பார்ப்பங்க. வெற்றிகரமா உள்ளே போய்ட்டா வீட்டு உரிமையாளரை கூப்பிட்டு பாருங்க இந்த ஜென்னல் உறுதியா இல்லை அது வழியா சுலபமா உள்ளே வந்துட்டேன் இதை மாத்துங்க அப்படினு எச்சரிப்பாங்க.

அமெரிக்க போன்ற நாடுகளிலும் வளரும் கார்பரேட் கம்பனிகளிலும் இவங்களுக்கு நல்ல வரவேற்ப்பு. அந்த நிறுவனங்களின் நெட்வெர்கில் ஏதாவது குறை இருக்கிரதா, டேட்டா பேஸ் செக்கியூரிட்டி, பயர் வால், ஸ்பாம் பாக்ஸ் இப்பாடி எல்லாத்திலும் எங்க ஓட்டை இருக்கு கண்டுபிடிக்க வேலைக்கு வச்சி இருக்காங்க. ஹாக்கர்களில் இரண்டு வகை உண்டு. அமெச்சூர் ஹாக்கர் (குறும்புகார பசங்க), புரபஷ்னல் ஹாக்கர்ஸ் (ஆபத்தான பயபுள்ளைங்க) இதில் எவன் ஹாக் பண்ணாலும் எல்லாரும் இவரு மூஞ்சியை தான் பார்ப்பாங்க இவரு தான் உக்காந்து நோண்டி சரி பண்ணுவாரு. சரி பண்ணதும் எல்லாரும் பாராட்டுவாங்க.

அப்படியே கேமராவை ஆப் பண்ணி ஆன் பண்ணா இவரை பார்த்து பாதி பேருக்கு பயம். இவரு கிட்ட இருந்து மெயில் வந்தா அதை ஓப்பன் பண்ண பயம் ஒரு வேலை ஏதாவது கோடிங் வச்சி நம்ம பாஸ்வேர்டை எடுத்துடுவானோ. ஏதாவது சி.டி, பென் டிரைவ் கொடுத்தா அதை சிஸ்டம்ல போட பயம். இதில் ஏதாவது ஆட்டோ இன்ஸ்டால் புரோகிராம் இருந்து நாம என்ன என்ன சாட் பண்ரோம் எல்லாம் அவருக்கு போகுமோ நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடுமோ. நம்ம பாஸ் இவன் கிட்ட சொல்லி நம்ம சிஸ்டம்ல வேலை செய்யாம என்ன செய்யரோம் பார்க்க சொல்லி இருப்பாரோ. அவ்வளவு ஏன் ஓரே ரூம்ல உக்காந்து அவன் சீரியஸா ஏதாவது பண்ணிட்டு இருப்பான் அந்த மூளையில் உக்காந்து கடலை போடர புண்ணாக்குக்கு டவுட்டு வரும் ஒரு வேளை ஒயர்லெஸ்சை ஹாக் பண்ணி நாம டைப் செய்வதை இவன் பாக்கரானா அப்படினு ஒரு டவுட்டு வரும்.

ஒரு கிரிக்கெட் ப்ளேயர் வெளிய போய் தான் ஒரு பெரிய ப்ளேயர்னு பெருமையா சொல்லிக்கலாம், ஒரு கலைக்டர், டாக்டர், எஞ்ஜினியர், ஆடிட்டர், க்ளார்க், கேஷியர், மாடு மேய்க்கரவன், ஒட்டகம் மேய்க்கரவன் எல்லாரு அவன் செய்யர வேலையை சொல்லிக்கலாம் ஆனா பாவபட்ட எத்திக்கல் ஹாக்கர் மட்டும் நான் ஒரு புரோகிராமர் இல்லைனா நெட்வெர்க்கிங் அப்படினு சொல்லி அதோட முடிச்சிக்குவான். சில அரைகுறை ஹாக்கர்ஸ் இருக்கு இதுங்க லைட்டா விஷயம் தெரிஞ்சதும் அடுத்தவன் அக்கவுண்டை ஹாக் பண்ணி தன் பெருமையை காட்டிக்கும் உடனே ஊரே அவரை பார்த்து பயப்படும் அதில் ஒரு பெருமை. அதுங்க பன்ற அலப்பரையில் சும்மா இருக்கவனையும் சேர்த்து மக்கள் சந்தேகபடும்.


போலீஸ்காரங்களுக்கும் இதே நிலமைதான். அவங்க சும்மா லிப்ட் கேக்க கை காட்டினா கூட போச்சிடா என்னமோ பிரச்சனைன்னு பயப்பட வேண்டியது. இதனால் நான் என்ன சொல்ல வரேன்ன எனக்கு நைட் தூக்கம் வராத காரணத்தால் இந்த மொக்கை பதிவு. மற்றும் டெரர் கும்மியை சேர்ந்த பொறுக்கிகள் எல்லாம் மரியாதையாக பதிவு எழுத தொடங்கவும் இல்லை என்றால் நான் தினம் ஒரு பதிவு எழுதுவேன் என்று கூறி கொள்கிறேன்.

டிஸ்கி : இப்போ தத்துவம் கத்தி வைத்து இருப்பவன் எல்லாம் காவு வாங்கிட மாட்டான் அவன் காவல்காரனா கூட இருக்கலாம்.

.

Saturday, February 18, 2012

கள்ள காதல் / காதல் செய்பவர்களுக்கு சில டிப்ஸ் (18+ போடனுமா?)

யு டியூப்ல ஒரு வீடியோ பார்த்தேன் அதை பத்தி பேசலைனா மண்டை வெடிச்சிடும் போல. உங்களுக்கே தெரியும் நான் சத்தியமா நல்லவன் இல்லைனு. அப்போ வேற என்ன வீடியோ பார்த்து இருக்க போரேன்.. பிட்டு படம் தான். சீ பொறுக்கின்னு காறி துப்பரவங்க எல்லாம் இதோட கிளம்பளாம். நாங்க எல்லாம் அந்த பக்கமே போனது இல்லை அப்படினு சொல்ர ஆம்பளை சிங்கங்ளும் கிளம்பளாம்.

அந்த வீடியோவில் பாருங்க ஒரு தமிழ் பேசர பொண்ணு நான் என் வீட்டுகார்கிட்ட கூட இப்படி எல்லாம் நிக்க மாட்டேன் நீ ரொம்ப கொடுமை பன்றடா அப்படினு சொல்லிகிட்டே பார்ட் பார்ட்டா காட்டுது. நம்ம ஹீரோ சார் செல்போன் கேமரா ஆன் பண்ணி வச்சி பிடிச்சி இருப்பாரு போல அது தெரியாம அந்த புள்ளை எல்லாத்தையும் காட்டுது. வீடியோ லிங்க் கேக்காதிங்க அதை ரிப்போர்ட் பண்ணி தூக்கிட்டோம் (பிட்டு பக்கரதுலையும் ஒரு நேர்மை வேணும்).

நீங்க எந்த காதலாவது பண்ணுங்க. ஆனா கண்ணை மூடிகிட்டு நம்பாதிங்க. கொஞ்சமாவது மனசாட்சி உள்ளவனா, நல்லவனா பாருங்க. அது தெரியாம வெப் கேம்ல காட்டரது,போட்டோ எடுத்து அனுப்பரது எல்லாம் வேண்டாம். தூக்கி நெட்ல போட்டு போய்கிட்டே இருக்கனுங்க. ஆம்பளை புள்ளை எல்லாம் நமக்கு பிரச்சனையில்லினு சுத்தாதிங்க சார் நீங்க விடர ஜொள்ளு சாட் எல்லாம் சத்தமில்லாம யாருக்காவது பார்வேர்ட் ஆகிட்டுதான் இருக்கும்.

டேட்டிங், ஹனிமூன் போர புண்ணியவான்களே! உங்க பொண்டாட்டி / லவ்வர வித விதமான போஸ்ல போட்டோ எடுக்கரத நிறுத்துங்க. அப்படி இல்லைனா தனி மெம்மரி கார்ட் யுஸ் பண்னுங்க. ஊர் சுத்தர போட்டோ எல்லாம் எடுக்கரது அதோ மெம்மரி கார்டில் அந்தரங்க போட்டோவும் எடுக்கரது. அதுக்கு அப்புறம் அந்தரங்க போட்டோ எல்லாம் கம்பியூட்டருக்கு மாத்திட்டு டெலிட் பண்ணிட்டு பிரிண்டிங் கொடுக்கரது. ஆனா இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு அழிக்கபட்ட போட்டோஸ் தேடி எடுக்கரதே சிலருக்கு வேலை.  சுலபமா உங்க பர்சனல் லைப் நெட்க்கு போய்டும்.

சில அதிமேதாவிங்க செல்போன்ல மெம்மரி கார்டுக்கு லாக் போட்டு இருக்க தைரியத்தில் எவன் கிட்ட வேன செல்ல கொடுத்துட்டு போரது. அப்புறம் எப்படி வெளிய போச்சினு அழரது.  அதே மாதிரி லாப்டாப்ல இருக்க ப்ரவுசர்ல பாஸ்வேர்ட் எல்லாம் சேவ் பண்ணி வைக்கிரது. அதுக்கு அப்புறம் அந்த லாப்டாப் நண்பர்கள் கிட்ட கொடுக்கரது. அவங்க ப்ரவுஸர் ஓப்பன் பண்ணதும் அது தானா உங்க மெயில் உள்ள போய்டும். உங்க ராணுவ ரகசியமும் போகும். அதனால லாப்டால எப்பவும் இரண்டு அக்கவுன்ட் வச்சி இருங்க. இல்லைனா guest அக்கவுண்ட் ஆன் பண்ணி வைங்க.

டெக்னிக்கல் சிங்கங்கள்கிட்ட Remote Access (அவங்க உங்க கம்பியூட்டர் ஸ்கீரின் பாக்கரது, உங்க கம்பியூட்டரை ஆப்ரேட் பண்ரது) கொடுத்தா வேலை முடிஞ்சதும் அந்த சாப்ட்வேரை (Teamviewer, logmein) தூக்குங்க. அவசர உதவி ஏதாவது தேவைபட்டு உங்க இ-மெயில் பாஸ்வேர்ட் கொடுத்து இருந்தா அதையும் மாற்றுங்கள். யாரையும் நம்பாதிங்கன்னு சொல்ல வரவில்லை. உங்க நம்பிக்கை வேற எதிலாவது காட்டுங்க.

டிஸ்கி : இதுக்கு எவ்வளவு காறிதுப்பு வாங்கனுமோ. பொது வாழ்கையில் இது எல்லாம் சகஜம்.. :)