Saturday, November 06, 2010

ஒரு கடிதம்...

மக்கா எல்லாறும் நல்லா இருக்கிங்களா? கண்டிப்பா நல்லாதான் இருப்பிங்க ஏன்னா நான் பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சி. இண்ணைக்கு மட்டும் ஏண்டா எழுதற கேக்கறிங்களா?? தீபாவளி சொல்லி எல்லா பயலும் கடை பூட்டிட்டான் என்ன செய்யரது தெரியவில்லை அதான். நானே சொந்தமா கருத்து சொல்ல போறேன். நான் பேசி முடிக்கறவரை யாரும் குறுக்க பாயகூடாது.

நானும் ரொம்ப நேரம் யோசிச்சி பார்த்தேன் யாரை தாக்கி புனைவு எழுதலாம்னு ஒரு ஆளும் சிக்கல. தைரியமா பதிவை மட்டும் போட்டு எதிர்ப்பு தெரிவிச்சி வர கமெண்ட்ஸ் பப்ளிஷ் பண்ணாம போட்டு அமுக்கி கொல்ர ஒரு பதிவர பத்தி எழுதலாம் நினைத்தேன். அதாங்க நாட்டுக்கு நல்லது பண்றவங்க எல்லாம் வாய்ல மட்டும் பண்ணுங்க செயல்ல காட்டாதிங்க அப்படினு சொன்னாரே வெண்ணிற இரவுகள் அப்படினு ஒரு பதிவர்.. ஐயையோ!!! புனைவுள பேர் சொல்ல கூடாது இல்ல?? சாரி சாரி மறந்துடேன்... Firstல இருந்து.. செயல்ல காட்டாதிங்க சொன்னாறே கருமைக்கும் பகலுக்கும் எதிரான பதிவர் அவர்தான்.  அப்புறம் அவர் ஹிட்ஸ் வாங்க அவர் எழுதறாரு நமக்கு என்னா சொல்லி விட்டேன். அதுவும் இல்லாம வெளியூர்கரன் ஒருத்தன் சண்டைக்கு வரன். கேட்டா பட்டா பட்டி போட்ட ஒரு ஆளும் இந்த பயலும் சேர்ந்து இங்க இரண்டு பேர (அடிக்க) தத்து எடுத்து இருக்காங்களாம். வேற யாரும் அவங்க மேல கை வைக்க கூடாதாம்.

இப்பொ யார கலாய்க்கலாம்... அட!!! யார்பா அது சோத்து கை பக்கம் கும்பலா நிக்கறிங்க.. ஓஓஓ Followers... ஸிஸ்டர்ஸ், பிரதர்ஸ், மாமன், மச்சான் எல்லாறும் இருக்கிங்க போல லைட்டா முன்னாடி வாங்க. ஆமாம் நிறையா ப்ளாக்ல 100, 200, 300 இருக்கிங்க ஆனா ஒட்டு 30, 40 கமெண்ட் 50 இல்லைனா 60 தான் வருது. நீங்க எல்லாம் ஆளுக்கு ஒரு கமெண்ட் போட்டா கூட 200 கமெண்ட் தாண்டுமே? உண்மை சொல்லுங்க நீங்க எல்லாம் ஒரே ஒரு பதிவு மட்டும் படிச்சிட்டு புடிச்சி Follow பண்ணிட்டு அதுக்கு அப்புறம் அந்த ப்ளாக் பக்கம் எட்டி பாக்காதவங்க தான?? இல்லைனா நிஜமா படிக்கறிங்களா?? சும்மா ஒரு டவுட் கேட்டா இப்படி கோச்சிகறிங்க.

இரண்டு மூனு பதிவு படிங்க பிடிச்சா அப்புறம் தொடருங்க. அது மாதிரி இரண்டு மூனு பதிவு ரொம்ப மொக்க போடராங்க தோனுச்சினா Unfollow பண்ணிடுங்க.. இல்லைனா நீங்க 300 பேரும் அவர் பதிவ இன்னும் படிக்கறிங்க நம்ம்ம்ம்பி அவர் மொக்க போட்டே போவாரு. அட உங்களுக்கு டாஷ்போர்டு பாக்கா ஈஸியா இருக்குமே சொன்னேன்.  நல்ல பதிவு (உங்களுக்கு பிடிச்ச பதிவு) மட்டும் காமிக்கும் இல்ல...அது மாதிரி இந்த பிரபல பதிவர் எல்லாம் என்னை 300 பேர் Follow பண்றாங்க அவங்க ஆதரிப்பாங்க சொல்லி டிசைன் டிசைனா எழுதறாங்க....நீங்க நல்லவங்க ஆதறிக்க மாட்டிங்க. ஆனா என்னை மாதிரி கமெண்ட் போடரவங்க முதல்ல சொல்ற வார்த்தை... உங்களை பின் தொடர்ர 250 பேரும் முட்டாளா தான் இருக்கனும்... ஏதோ பாத்து செய்ங்க...

இத படிச்சதும் மொதல்ல என்னை Unfollow பண்ணுவிங்களே... ஹா..ஹா..ஹா ரைட்டு நடக்கட்டும். அப்புறம் அது என்னா இப்பொ எல்லாறூம் புதுசா நீயுஸ் லெட்டர் அனுப்ப ஆரம்பிச்சிட்டிங்க முடியலபா விட்டுங்க..... அண்ணெ என்ன சொன்னிங்க சரியா கேக்கல... அதான் அதுலே Unsubscribe இருக்கே அதை கிளிக் பண்ணுடா வெண்ணையா?? தாங்ஸ் அண்ணே... கிளிக் பண்ணிடரேன்.

.

67 comments:

அன்பரசன் said...

//இரண்டு மூனு பதிவு படிங்க பிடிச்சா அப்புறம் தொடருங்க. அது மாதிரி இரண்டு மூனு பதிவு ரொம்ப மொக்க போடராங்க தோனுச்சினா Unfollow பண்ணிடுங்க.. இல்லைனா நீங்க 300 பேரும் அவர் பதிவ இன்னும் படிக்கறிங்க நம்ம்ம்ம்பி அவர் மொக்க போட்டே போவாரு.//

சரிதான்

அன்பரசன் said...

ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் ஹாட்டாதான் இருக்கு.

philosophy prabhakaran said...

ம்ம்ம்... யாரையாவது திட்டி பதிவெழுதுறது பேஷன் ஆகிடுச்சு போல...

philosophy prabhakaran said...

பட் சம்பந்தப்பட்ட வெண்ணிற இரவுகள் பதிவை நானும் படிச்சேன்... நானும் அவரை கண்டிக்கிறேன்...

+++ மாலுமி +++ said...

டேய் எங்கடா போனிக, நம் தல Terror பதிவு publish பண்ணி 6 மணி நேரமாச்சு....
கமெண்ட் போட, கும்மி அடிக்க வாங்கப்பா...........

அருண் பிரசாத் said...

ரைட்டு! வந்தாச்சு,ஓட்டு போட்டாச்சு....

கமெண்ட்?.... அதானே இது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்க்கொய்யா அந்த டுபாக்கூர் பார்ட்டியப் பத்தி எழுதி நீ பிரபலப் பதிவர் ஆகலாம்னு பாக்குறீயா?

மங்குனி அமைச்சர் said...

எல்லாம் என்னை 300 பேர் Follow பண்றாங்க அவங்க ஆதரிப்பாங்க சொல்லி டிசைன் டிசைனா எழுதறாங்க..////

அது ஏன் 300 ??? ஒரு 200 இல்லை 400 போட்டு இருக்கலாமுல்ல ??? எனக்கு ஒரு குழப்பமாவே இருக்கு?? (மனசுக்குள்ள இருக்கிறதா வெளியகூட சொல்லமுடியல )

மங்குனி அமைச்சர் said...

என்னங்கடா இது , நான் பஸ்ட்டு போட்ட இந்த கமண்ட்ட காணோம் ????
/////வெண்ணிற இரவுகள் அப்படினு ஒரு பதிவர்.///
அவன் எப்படியாவது பப்ளிசிட்டி ஆகணுமின்னு பிளான் பண்ணினான் , நீங்க எல்லாம் சேந்து உண்மையிலேயே அவனுக்கு பப்ளிசிட்டி குடுத்துட்டிங்க . எப்படியோ அவன் ஜெயிச்சுட்டான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நடு ராத்திரி 12 மணிக்கு இப்பிடி பதிவு போடுறீயே ஏன்? சொம்பு ரொம்ப அடிவாங்குன மாதிரி தெரியுதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// தைரியமா பதிவை மட்டும் போட்டு எதிர்ப்பு தெரிவிச்சி வர கமெண்ட்ஸ் பப்ளிஷ் பண்ணாம போட்டு அமுக்கி கொல்ர ஒரு பதிவர பத்தி எழுதலாம் நினைத்தேன்.///

அது ஒரு வெத்து வேட்டுப்பா! சும்மா ஜாலியா எத வேணூம்னாலும் எழுதி பெரிய ஆளாயிடலாம்னு பாத்திருக்கு, கமென்ட்சப் பாத்துட்டு மெரண்டு போயி மாடரேசன் போட்டுட்டு பம்மிடுச்சி! இனி அந்தப்பார்ட்டி வேற பேருல கெளம்பி வரும் பாரேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெளியூர்கரன் ஒருத்தன் சண்டைக்கு வரன். கேட்டா பட்டா பட்டி போட்ட ஒரு ஆளும் இந்த பயலும் சேர்ந்து இங்க இரண்டு பேர (அடிக்க) தத்து எடுத்து இருக்காங்களாம்.///

இதுல இது வேறயா? இதுலாம் ஓவர்யா அந்தப்பயலுக்கு! இன்னேரம் அது ஏதாவது ஓசி ஐஸ்கிரீம சப்பி சப்பி சாப்புட்டுக்கிட்டு இருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆமாம் நிறையா ப்ளாக்ல 100, 200, 300 இருக்கிங்க ஆனா ஒட்டு 30, 40 கமெண்ட் 50 இல்லைனா 60 தான் வருது. நீங்க எல்லாம் ஆளுக்கு ஒரு கமெண்ட் போட்டா கூட 200 கமெண்ட் தாண்டுமே? ///

ஏய் இப்போ நீ என்ன சொல்ல வர்ரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இரண்டு மூனு பதிவு படிங்க பிடிச்சா அப்புறம் தொடருங்க. அது மாதிரி இரண்டு மூனு பதிவு ரொம்ப மொக்க போடராங்க தோனுச்சினா Unfollow பண்ணிடுங்க.. இல்லைனா நீங்க 300 பேரும் அவர் பதிவ இன்னும் படிக்கறிங்க நம்ம்ம்ம்பி அவர் மொக்க போட்டே போவாரு.////

சொல்லிட்டாருயா கெவர்னரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓட்டுதானே? போட்டாச்சு... போட்டாச்சு....!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

யப்பா டெரரு, இன்னி வரைக்கும் உன்னைய follow பண்ணாம இருக்குறேன், அதை குத்திக் காட்டிட மாதிரி இருக்கு. அதுனால, நீ இந்த பதிவுல சொல்லியிருக்கறத unfollow பண்ணி, உன் ப்ளாக follow பண்ணப் போறேன்.
(எதுனாவது புரியுது? புரியுதா, அப்ப அது என்னன்னு எனக்கும் சொல்லேன்)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அப்புறம்..................வோட்டு போட்டுட்டேன்பா!

கே.ஆர்.பி.செந்தில் said...

என்னமோ போங்க ...

சௌந்தர் said...

ஹி ஹி ஹி நேத்து கொஞ்சம் ஓவர் போல இந்த பயபுள்ள பார்க்க தான் terror ஆனா குழந்தை பையன் ஒரு சண்டைக்கு கூட வராது என்ன இந்த கமெண்ட்க்கும் இந்த பதிவுக்கும் சம்பதம் இல்லையா அது தான் வேண்டும்....

dheva said...

மாப்ஸ்...@ நீ ஏன் கடிதம் கிடிதம் எல்லாம் எழுதுற..ஆளுங்கட்ட்சி அரசியல்வாதி மாதிரி...

வார வாரம் கடா வெட்டு நான் நடத்துறேன்....கறுப்பு ஆடுகளுக்கு...

நீ தைரியமா வந்து இருந்து சாப்பிட்டுட்டு போ....!

எஸ்.கே said...

நீங்க சொன்ன மாதிரி ஒரு பதிவு படிச்சு ஃபாலோயர் ஆகுரது நடக்குதுதான்!

எஸ்.கே said...

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு நன்றாகவே உள்ளது.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// அவன் எப்படியாவது பப்ளிசிட்டி ஆகணுமின்னு பிளான் பண்ணினான் , நீங்க எல்லாம் சேந்து உண்மையிலேயே அவனுக்கு பப்ளிசிட்டி குடுத்துட்டிங்க . எப்படியோ அவன் ஜெயிச்சுட்டான்.////

மங்குனி ,
இதுக்கு பதில் பெருமாள் கோயில உண்ட கட்டி வாங்கி தின்னுட்டு போய்டுலாம்....,விளக்கெண்ணை அதுக்கு வேற ஒரு பதிவு ..,கமெண்ட் மாடேரஷன் வேற ..,இந்த மாதிரி இன்னொரு பதிவு போடட்டும் அன்னிக்கி இருக்குது பாரு ...,

இம்சைஅரசன் பாபு.. said...

ஒரு கடிதம் அப்படி தலைப்ப பார்த்தவுடன் எதோ காதல் கடிதம் இருக்கும்னு நினச்சு வந்த.........புனைவு எழுதி தொலைச்சிருக்க .......உனக்கு ஏன் இந்த வேலை .......அந்த நாதாரி பசங்க தான் ஹிட்ஸ் கொடுக்குறதுக்கு இந்த மாதிரி எழுதுரங்கன்ன.நீயுமா ? .......நம்மேல எப்பாவது ஒரு பதிவு போடுறோம் அதையும் எவனையாது திட்டி தான் போடனுமா?.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nee innumaa uyiroda irukka?

TERROR-PANDIYAN(VAS) said...

அன்பரசன்

//சரிதான்//

ரைட்டு!!

//ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் ஹாட்டாதான் இருக்கு.//

இங்க கொங்சம் வெய்யில் அதிகம் அதான்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ philosophy prabhakaran

//ம்ம்ம்... யாரையாவது திட்டி பதிவெழுதுறது பேஷன் ஆகிடுச்சு போல...//

இது அபாண்டம்!! நான் யாரையும் திட்டல..

//பட் சம்பந்தப்பட்ட வெண்ணிற இரவுகள் பதிவை நானும் படிச்சேன்... நானும் அவரை கண்டிக்கிறேன்..//

விடாதிங்க பிரபாகர். நல்லா கண்டிங்க. வெய்யில்ல முட்டி போட சொல்ல்லுங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@+++ மாலுமி +++

//டேய் எங்கடா போனிக, நம் தல Terror பதிவு publish பண்ணி 6 மணி நேரமாச்சு....
கமெண்ட் போட, கும்மி அடிக்க வாங்கப்பா..........//

அது எல்லாம் யாரும் வர மாட்டாங்க. நீங்க போய் கப்பல் ஓட்டுங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண் பிரசாத்

//ரைட்டு! வந்தாச்சு,ஓட்டு போட்டாச்சு....

கமெண்ட்?.... அதானே இது!//

ஆமாம். எவன் இல்லை சொன்னது?? கமெண்ட் கவிதையா இருக்கு மச்சி. கலக்கல், சூப்பர்... நீயே சொந்தமா எழுதினதா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

//ங்க்கொய்யா அந்த டுபாக்கூர் பார்ட்டியப் பத்தி எழுதி நீ பிரபலப் பதிவர் ஆகலாம்னு பாக்குறீயா?//

எழுதலாம் நினைச்சேன் மச்சி!! ஆன எழுதல... ஆமாம் அப்பொ நான் பிரபல பதிவர் இல்லையா?? சட்டை கிழியாம இருக்க அப்பவே நான் சந்தேகபட்டேன். ரைட்டு விடு மச்சி.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி அமைச்சர்

//அது ஏன் 300 ??? ஒரு 200 இல்லை 400 போட்டு இருக்கலாமுல்ல ??? எனக்கு ஒரு குழப்பமாவே இருக்கு?? (மனசுக்குள்ள இருக்கிறதா வெளியகூட சொல்லமுடியல )//

சத்தியமா உன்னை சொல்லவில்லை மங்கு. இது பொதுவா Followers பத்தி எழுதினது.. நம்புயா. நாம எல்லாம் ஒரே வங்கில திருடர திருடன்கள்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி அமைச்சர்

//என்னங்கடா இது , நான் பஸ்ட்டு போட்ட இந்த கமண்ட்ட காணோம் ????//

காக்க தூக்கி போச்சு!!

//அவன் எப்படியாவது பப்ளிசிட்டி ஆகணுமின்னு பிளான் பண்ணினான் , நீங்க எல்லாம் சேந்து உண்மையிலேயே அவனுக்கு பப்ளிசிட்டி குடுத்துட்டிங்க . எப்படியோ அவன் ஜெயிச்சுட்டான்.//

அது எல்லாம் இங்க நடக்காது. என் ப்ளாக் யாரும் வர மாட்டாங்க அதனால அவர் நான் எழுதி எல்லாம் பாப்புலர் ஆக முடியாது.

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

//நடு ராத்திரி 12 மணிக்கு இப்பிடி பதிவு போடுறீயே ஏன்? சொம்பு ரொம்ப அடிவாங்குன மாதிரி தெரியுதே?//

அப்பொ தான் ப்ளாக் விளங்கு சொல்லி சூதாடி சித்தர் சொல்லி இருக்காரு.

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அது ஒரு வெத்து வேட்டுப்பா! சும்மா ஜாலியா எத வேணூம்னாலும் எழுதி பெரிய ஆளாயிடலாம்னு பாத்திருக்கு, கமென்ட்சப் பாத்துட்டு மெரண்டு போயி மாடரேசன் போட்டுட்டு பம்மிடுச்சி! இனி அந்தப்பார்ட்டி வேற பேருல கெளம்பி வரும் பாரேன்!//

வேற பேர்ல வந்தா மட்டும் நீ சும்மா விடுவியா? அறுத்து காயவச்சிட மாட்ட.. நீ வீரன் மச்சி... (ஏத்தி விட்டாச்சி.. இனி அடிச்சிட்டு சாகட்டும்..)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//இதுல இது வேறயா? இதுலாம் ஓவர்யா அந்தப்பயலுக்கு! இன்னேரம் அது ஏதாவது ஓசி ஐஸ்கிரீம சப்பி சப்பி சாப்புட்டுக்கிட்டு இருக்கும்!//

அவனை பத்தி நீ ஒரு புனைவு எழுது மச்சி.. தலைப்பு உள்ளுர்காரன்..

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஏய் இப்போ நீ என்ன சொல்ல வர்ரே?//

அதான் வரேன் இல்ல.. வெய்ட் பண்ணு..

//சொல்லிட்டாருயா கெவர்னரு!//

சரிங்க பிரதமர்..

//ஓட்டுதானே? போட்டாச்சு... போட்டாச்சு....!//

நான் எப்பொடா ஓட்டு கேட்டேன்?? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை

யப்பா டெரரு, இன்னி வரைக்கும் உன்னைய follow பண்ணாம இருக்குறேன், அதை குத்திக் காட்டிட மாதிரி இருக்கு. அதுனால, நீ இந்த பதிவுல சொல்லியிருக்கறத unfollow பண்ணி, உன் ப்ளாக follow பண்ணப் போறேன்.
(எதுனாவது புரியுது? புரியுதா, அப்ப அது என்னன்னு எனக்கும் சொல்லேன்)//

Follow பண்ணலனா பரவாயில்லை. நீங்க வந்தா மட்டும் போதும்.. வந்தா மட்டும் போதும்..!!

(புரியுது! புரியுது!... ஆனா சொல்ல மாட்டனே..)

TERROR-PANDIYAN(VAS) said...

பெயர் சொல்ல விருப்பமில்லை

//அப்புறம்..................வோட்டு போட்டுட்டேன்பா//

நன்றி!!

TERROR-PANDIYAN(VAS) said...

கே.ஆர்.பி.செந்தில்

//என்னமோ போங்க ..//

என்னா தலை வந்ததும் போக சொல்றிங்க?? ஒரு இரண்டு நாள்ல நானே ஓடி போய்டுவேன். அதுவரை கொஞ்சம் பொருங்க.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

சௌந்தர்

//என்ன இந்த கமெண்ட்க்கும் இந்த பதிவுக்கும் சம்பதம் இல்லையா அது தான் வேண்டும்....//

வேணும்னா எடுத்துகோங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//மாப்ஸ்...@ நீ ஏன் கடிதம் கிடிதம் எல்லாம் எழுதுற..ஆளுங்கட்ட்சி அரசியல்வாதி மாதிரி...//

நரி அப்படினு ஒரு நாய் “கடிதம்” அப்படினு ஒரு பதிவு எழுதி தோ வரேன் சொல்லிட்டு போச்சி அதை நினைவூட்ட தான் இந்த பேர் மாப்ஸ்!!


//வார வாரம் கடா வெட்டு நான் நடத்துறேன்....கறுப்பு ஆடுகளுக்கு...//

இங்க இருக்கவனுக்கே வெட்ட ஆடு கிடைக்கல. இதுல நீ வேற ஏன் மாப்ஸ் புதுசா?

//நீ தைரியமா வந்து இருந்து சாப்பிட்டுட்டு போ....!//

சாப்பாட்டு விஷயத்துல நான் வீரன் மாப்ஸ்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//நீங்க சொன்ன மாதிரி ஒரு பதிவு படிச்சு ஃபாலோயர் ஆகுரது நடக்குதுதான்!//

உங்களுக்கு தெரியுது எஸ்.கே... ஆனா ஊர்ல இதை சொன்னா அடிக்க வராங்க.. எண்டா Followers கெடுக்க பாக்கர சொல்லி... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு நன்றாகவே உள்ளது.//

நீங்க யாரையும் திட்ட மாட்டறிங்க சரியில்லை. நன்றி!! :))

TERROR-PANDIYAN(VAS) said...

ரோடு பொறுக்கும் பரதேசி நாய் பனங்காட்டு நரி

//மங்குனி ,
இதுக்கு பதில் பெருமாள் கோயில உண்ட கட்டி வாங்கி தின்னுட்டு போய்டுலாம்....,விளக்கெண்ணை அதுக்கு வேற ஒரு பதிவு ..,கமெண்ட் மாடேரஷன் வேற ..,இந்த மாதிரி இன்னொரு பதிவு போடட்டும் அன்னிக்கி இருக்குது பாரு ...,//

சவுண்டு சாஸ்த்தியா இருக்கு?? சரக்கு அதிகமாடா?? :)))

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சைஅரசன் பாபு

//ஒரு கடிதம் அப்படி தலைப்ப பார்த்தவுடன் எதோ காதல் கடிதம் இருக்கும்னு நினச்சு வந்த.........புனைவு எழுதி தொலைச்சிருக்க//

புனைவா? எங்க? எங்க? புனைவுனா பேர் சொல்லாம தாக்கி எழுதனும்...

// .......உனக்கு ஏன் இந்த வேலை //

வேற வேலை இல்லை அதான்..

//அந்த நாதாரி பசங்க தான் ஹிட்ஸ் கொடுக்குறதுக்கு இந்த மாதிரி எழுதுரங்கன்ன.நீயுமா ? //

என்னாது நாதாரியா?? நிங்க தான் இப்பொ திட்டறிங்க.. :))


//நம்மேல எப்பாவது ஒரு பதிவு போடுறோம் அதையும் எவனையாது திட்டி தான் போடனுமா?..//

இங்க யாரை திட்டி இருக்கேன்??

TERROR-PANDIYAN(VAS) said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//nee innumaa uyiroda irukka?//

காலத்தின் கட்டாயம்...!! :))

ப.செல்வக்குமார் said...

அடடா என்னோட followers இத படிக்காம இருந்தா போதும் ..!!

ப.செல்வக்குமார் said...

ஆனா என்னோட followers நான் மொக்க போடுறேன் அப்படின்னு தெரிஞ்சுதான் பின்தொடருறாங்க .. அதனால தப்பிச்சேன் .. ஹி ஹி ஹி..

ப.செல்வக்குமார் said...

/ அன்பரசன் கூறியது...
ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் ஹாட்டாதான் இருக்கு.

//

இப்டி வேற சொல்லி ஏத்தி விடாதீங்க .,

ப.செல்வக்குமார் said...

50

ப.செல்வக்குமார் said...

//டேய் எங்கடா போனிக, நம் தல Terror பதிவு publish பண்ணி 6 மணி நேரமாச்சு....
கமெண்ட் போட, கும்மி அடிக்க வாங்கப்பா...........

//

ஒருத்தரையும் காணோமே ..?!

ப.செல்வக்குமார் said...

//வார வாரம் கடா வெட்டு நான் நடத்துறேன்....கறுப்பு ஆடுகளுக்கு...//

அடடா நமக்குத் தெரியாம போய்டுச்சே .,

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏய்யா 200 ஃபாலோயர் தொட முக்கிகிட்டிருக்கேன்..இதுல இப்படி கிலிய உண்டாக்குற...உன்னை ஃபாலோயர்ஸ் தூக்கிட்டு போக..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஃபாலோயர்ஸ் நாம தான்..நாமே எத்தனை பேரை ஃபாலோ பண்றோம் நினைச்சி பாருங்க..என்னிக்காவது அவன் நல்ல பதிவு போடுவானான்னு கண்காணிக்க தான் நம்ம சோர்ஸ் ஒண்ணை வவன் பிளாக்ல விட்டுட்டு வர்ரோம்...இது ஆதரவா ந்னு தெரியல..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அடிக்கடி பதிவு போடுங்க..

karthikkumar said...

யோவ் டெர்ரர் என்னையா இந்த மாதிரி எல்லாம் பதிவு போட ஆரம்பிச்சுட்ட? என்னால நம்பவே முடியல (குறிப்பு நானும் newsletter அனுப்பறேன்)

TERROR-PANDIYAN(VAS) said...

@ப.செல்வக்குமார்

//அடடா என்னோட followers இத படிக்காம இருந்தா போதும் ..!!//

உன் Followers மெயில் ஐ.டி ப்ளீஸ்

//ஆனா என்னோட followers நான் மொக்க போடுறேன் அப்படின்னு தெரிஞ்சுதான் பின்தொடருறாங்க .. அதனால தப்பிச்சேன் .. ஹி ஹி ஹி..//

அப்பொ நீ சரியா மொக்க போடலனா உன்னைவிட்டு போக சொல்றேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

//ஏய்யா 200 ஃபாலோயர் தொட முக்கிகிட்டிருக்கேன்..இதுல இப்படி கிலிய உண்டாக்குற...உன்னை ஃபாலோயர்ஸ் தூக்கிட்டு போக..//

சைட்ல ஒரு அமொண்ட் வெட்டுங்க.. நீங்க நல்ல பதிவர் எல்லாறும் உங்களை மட்டும் Follow பண்ணனும் பதிவு போடறேன்.... :))

Anonymous said...

//உண்மை சொல்லுங்க நீங்க எல்லாம் ஒரே ஒரு பதிவு மட்டும் படிச்சிட்டு புடிச்சி Follow பண்ணிட்டு அதுக்கு அப்புறம் அந்த ப்ளாக் பக்கம் எட்டி பாக்காதவங்க தான??//

ஹி..ஹி..ஹி..
எப்டி கரெக்டா சொல்றீங்க??

ஆனா பரவாயில்ல டெரர்....
நீங்க கூட நல்ல பதிவா எழுத ஆரம்பிச்சுட்டீங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

@சதீஷ்

//ஃபாலோயர்ஸ் நாம தான்..நாமே எத்தனை பேரை ஃபாலோ பண்றோம் நினைச்சி பாருங்க..என்னிக்காவது அவன் நல்ல பதிவு போடுவானான்னு கண்காணிக்க தான் நம்ம சோர்ஸ் ஒண்ணை வவன் பிளாக்ல விட்டுட்டு வர்ரோம்...இது ஆதரவா ந்னு தெரியல..//

சார் நானும் நம்மல தான் கேக்கரேன்... நீங்க 100 பேர Follow பண்றிங்க வச்சிகலாம் அந்த 100 பேரும் நல்லா எழுதராங்களா?? நல்லா எழுதாட்டியும் ஏன் Follow பண்றிங்க... :)))

//அடிக்கடி பதிவு போடுங்க//

எப்படி கலைல ஒன்னு , மதியம் ஒன்னு, ராத்திரி ஒன்னு போடவா?? சரி சரி விடுங்க இதுக்கு எல்லாம் டென்ஷன் ஆகிட்டு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//யோவ் டெர்ரர் என்னையா இந்த மாதிரி எல்லாம் பதிவு போட ஆரம்பிச்சுட்ட? என்னால நம்பவே முடியல (குறிப்பு நானும் newsletter அனுப்பறேன்)//

அப்பொ ஒரு ஆள வாடகைக்கு வச்சி நம்பு மச்சி!! (குறிப்பு : அப்பொ உன்னை ஒரு நாளைக்கு கொல்ல போறேன்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@இந்திரா

//ஹி..ஹி..ஹி..
எப்டி கரெக்டா சொல்றீங்க??//

பாம்பின் கால் பாம்பறியும்

//ஆனா பரவாயில்ல டெரர்....
நீங்க கூட நல்ல பதிவா எழுத ஆரம்பிச்சுட்டீங்க..//

எல்லாறும் மொக்க சொல்றத நீங்க நல்ல பதிவு சொல்றிங்க. அப்பொ உங்களுக்கும் உங்க Followersக்கு எதோ வாய்க்க தகறாரு...

yeskha said...

ப்ரசன்ட் சார்...

நல்ல பதிவு..

சூப்பர் பதிவு...

அஹா... ஒஹோ... எஹே....

TERROR-PANDIYAN(VAS) said...

@yeskha

//அஹா... ஒஹோ... எஹே.... //

கொய்யால... நடு ராத்திரில வந்து நக்கல் அடிச்சிட்டு எஸ்க்கேப் ஆக பாக்கறிங்க.. விடியரவரை ப்ளாக்ல முட்டி போடுங்க... :))

yeskha said...

என்னாது... முட்டி போடணுமா? மொழங்கால் செத்தவன் தான் முட்டியெல்லாம் போடுவான்.

நாங்கள்லாம் கருஞ்சிறுத்தை பரம்பரை... அரைபாடி லாரிலயே வந்தாலும் சும்மா கன் மாதிரி நிப்போம்...

(எப்டி நிப்போம்? )

சும்மா கன் மாதிரி நிப்போம்....

TERROR-PANDIYAN(VAS) said...

@Yeshka

//என்னாது... முட்டி போடணுமா? மொழங்கால் செத்தவன் தான் முட்டியெல்லாம் போடுவான். //

சரி சரி முட்டுல இருக்க மண்ணை தொடைங்க மொதல்ல..

//நாங்கள்லாம் கருஞ்சிறுத்தை பரம்பரை... அரைபாடி லாரிலயே வந்தாலும் சும்மா கன் மாதிரி நிப்போம்... //

ஆமாம் எந்த கருஞ்சிறுத்தை லாரி முன்னாடி நின்னுது?? அடிச்சி தூக்கிட போறான் மாமே பாத்து...

//(எப்டி நிப்போம்? )//

ஏன் மறந்து போச்சா?

//சும்மா கன் மாதிரி நிப்போம்.... //

மாப்பு கன் நிக்க வச்சி பாத்து இருக்கியா?? லைட்டா தட்டினாலும் கீழ விழுந்துடும்... :)) பேஸ்மெண்ட் ரொம்ப வீக் மாப்பு அதுக்கு... சரி சரி புது பதிவு போட்டாச்சி அங்க வாங்க... :))

THOPPITHOPPI said...

கொஞ்சம் டெரர்ரா யோசிச்சி இருக்கீங்க போல