Saturday, October 02, 2010

ஒரு சந்தேகம்....

ஆல் அல்ல கை, நல்ல கை, நொல்ல கை, அரசியல் பண்றவங்க, பின்னாடி இருந்து குத்தர துரோகிங்க, புது பதிவர், பிரபல பதிவர், நாட்ட திருத்த வந்த நாட்டாமைங்க எல்லாருக்கும் வணக்கம்!!

எனக்கு ஒரு விஷயம் புரியல அதான் உங்க கிட்ட விளக்கம் கேக்கலாம் வந்தேன். கும்மி அடிக்கலாமா அடிக்கா கூடாதா? மொக்கை போடலாம போட கூடாதா? உங்ககிட்ட சொம்பு இல்லைனாலும் பரவாயில்லை வந்து தீர்ப்பு சொல்லுங்க.. பாதி பேர் கும்மி/மொக்க ஜாலியா இருக்கு சொல்றிங்க பாதி பேர் என் ப்ளாக் புனிதம் கெட்டு போச்சு சொல்றிங்க. நாங்க எல்லாம் நாட்டை திருத்த பதிவு எழுதல சார்.... ஐயோ சார்னு சொல்லிட்டேன் ஆண்னாதிக்கவாதி சொல்லுவிங்க. First ல இருந்து சொல்றேன் நாங்க எல்லாம் நாட்டை திருத்த பதிவு எழுத வரவில்லை.

எங்களுக்கும் தனி மனித வாழ்க்கைல நிறைய பொறுப்பு இருக்கு, ஆபிஸ் போனா Bank Recon, collection, balance sheet, auditing, flow chart, Server Down, Spam mails, Admin work, telephone calls இப்படி ஆயிரம் டென்ஷன் இருக்கு. இராவணன் விக்ரம் சொல்ற மாதிரி (தலைக்குள்ள ஆயிரம் காட்டு கூச்சல்). நாங்க மன இருக்கத்த குறைக்க ஜாலியா எழுதறோம், கும்மி அடிக்கிறோம். ஏற்க்கனவே மூளை சூடாகி ஆவி பறக்குது இதுல இங்கையும் வந்து சீரியஸ் மேட்டர் படிக்கனுமா?? மேதாவிதனத்த காட்டர மாதிரி விவாதிச்சி மண்டை காயனுமா??

சசசசசாமி நீங்க எல்லாம் பதிவ படிச்சி அறிவ வளத்துகோங்க வேண்டாம் சொல்லவில்லை ஆன எங்கள விட்டுங்க. எதாவது புது விஷயம் எழுதி இருந்தாலும் பரவயில்லை. உங்களுக்கு முன்னாடி நூறு பேர் எழுதிய விஷயத்த நீங்க 101வது ஆள எழுதுவிங்க அதை படிக்கலனா கோவபடறிங்க. படிக்கிற மாதிரி எழுதறது உங்க கைல தான் இருக்குங்க...

தேவா அப்படினு ஒரு பிரபல பதிவர்....  ஹிப்ரூ மொழியில் இன்னும் எழுதும் ஒரே பதிவர், தமிழ்ல எழுதுங்க சார், புரியர மாதிரி எழுத தெரியாத அப்படினு அவர பல கமெண்ட் அடிச்சி இருக்கேன். அவர் கோவபடல அதே கையால கவிதை, கதை சூப்பர் மாப்ஸ் கமெண்ட் போட வச்சாரு. அதான் சார் ஒரு எழுத்தாளன் வெற்றி (எவ்வளோ காசுடா வாங்கின கேக்காதிங்க. நான் பாராட்டி அவருக்கு சல்லி காசுக்கு புண்ணியம் இல்லை). 

அப்படி உங்க ப்ளாக்ல கும்மி அடிக்க கூடாத? கமெண்ட் மாட்ரேஷன் போட்டு தொலைங்க சார் / மேடம்... (ஐயோ!!! சார் அப்படினு முதலில் சொலிட்டேன்...). சரிரிரி உங்க ப்ளாக் உங்க இஷ்டம் மாட்ரேஷன் போட வேண்டாம், நீங்க எல்லாம் மெத்த படிச்ச மேதாவிகள் ஒரே ஒரு வார்த்தை நாகரிகமா சொல்லுங்க இங்கு கும்மி அடிக்காதிர்கள் நண்பர்களேனு. எங்களுக்கும் ஆண்டவன் கொஞ்சம் சுயமரியாதை, சுய கௌரவம் எல்லாம் வச்சி தொலைச்சிடான். நீங்க சொல்லி கேக்கலனா வெளிய போட நாயே சொல்லுங்க.

நாகரிக சீமான்களே, சீமாட்டிகளே நான் தற்குரிதான் ஆனா கும்மி அடிக்கிறவன் எல்லாம் தறுதலை, பொறம்போக்கு, மொள்ளமாரி நீங்க நினைக்கறது தப்பு. அந்த குரூப்ல Admin, Auditor, HR, Majestic Mechanical Engineer, Bio Medical Engineer, Marine Engineer, System Admin, Programmer இப்படி பல புத்திசாலிங்க இருக்காங்க அதனால நீங்க நல்லா எழுதினா அவங்களூம் கண்டிப்பா ரசிப்பாங்க. சக்கரை இருக்க இடத்துக்கு எறும்பு தான வரும். சும்மா சக்கரைனு லேபிள் ஒட்டிட்டு ஏன் எறும்பு வரல? இந்த கும்மி அடிக்கிற பயலுக கும்மி அடிக்கிற நேரம் ஊர் எல்லாம் போய் அங்க சக்கரை கொட்டி கிடக்கு சொல்ல கூடாதா? இப்படி எல்லாம் கேக்காதிங்க சாமிகளா. எப்பவாது நாங்க நல்லா கும்மி இருக்கோம் வந்து பாருங்க அப்படினு கூப்பிட்டு இருக்கமா?

உங்களுக்கு பிடிச்சத நீங்க செய்ங்க, படிங்க... எங்களுக்கு பிடிச்சதை நாங்க செய்ரோம், படிக்கிறோம்...

டிஸ்கி : யார் மோலயும் கோவபட்டு இதை எழுதலிங்கக்கா / எழுதலிங்கனா. மனசுல தோனுச்சி கொட்டிட்டேன்... இன்னும் நிறையா விஷயம் இருக்கு... ஆனா இதுக்கே பதிவு பெருசா இருக்கு கலாய்ப்பனுங்க.

.

141 comments:

siva said...

meeeeeeeeeeeeeee

the first..

i go read after first

then i will come...

siva said...

பாண்டியன் அண்ணா
என்ன ஆச்சு..டோன்ட் வொர்ரி
நாங்கலாம் இருக்கோம்..

"நமக்கு பிடிச்ச விசயங்களைத்தான் பண்ண முடியும் "
உங்களுக்கு பிடிச்சதை செய்யுங்கள்.

LK said...

தம்பி எதுக்கு டென்சன் ?? இப்ப கும்மி அடிக்கறதா யாரும் தப்பு சொல்லலை. ஆனால் நல்ல கருத்துள்ள பதிவுகளுக்கு ஆதரவு தரனும்னுதான் சொல்றோம். என்ன எழுதறதுன்னு யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. அது அவரவர் இஷ்டம். ஆனால் அதே சமயத்தில் நல்ல பதிவுகளை எழுதுகிறவர்கள் ஆதரவு இல்லாமல் காணமல் போய் விடக் கூடாது

சௌந்தர் said...

நாங்க எல்லாம் நாட்டை திருத்த பதிவு எழுத வரவில்லை/////

நானும் தான் அட டா இது தான் உண்மை

என்னது நானு யாரா? said...

LK அண்ணாச்சியோட கருத்து தான் எனதும். அதனால அவரோட கருத்தை

ர்ப்பீட்ட்ட்ட்டுன்னு சொல்லிடறேன்.

சௌந்தர் said...

உங்களுக்கு பிடிச்சத நீங்க செய்ங்க, படிங்க... எங்களுக்கு பிடிச்சதை நாங்க செய்ரோம், படிக்கிறோம்.////

எல்லாமே உண்மையை சொல்லி இருக்கீங்க terror என் மனதில் இருப்பதையும் எழுதிடீங்க

சௌந்தர் said...

ஆனா இதுக்கே பதிவு பெருசா இருக்கு கலாய்ப்பனுங்க///

யே யே யாருப்பா அது நம்ம terror கலாய்ப்பது terror யாருன்னு சொல்லுங்க ஒரு கை பார்த்து விடலாம்

Ananthi said...

///டிஸ்கி : யார் மோலயும் கோவபட்டு இதை எழுதலிங்கக்கா / எழுதலிங்கனா. மனசுல தோனுச்சி கொட்டிட்டேன்... இன்னும் நிறையா விஷயம் இருக்கு... ஆனா இதுக்கே பதிவு பெருசா இருக்கு கலாய்ப்பனுங்க////

முழுதும் படித்தேன்...
உங்கள் மனத்தை கொட்டியதற்கு நன்றி... :-)

பதிவு பெருசுன்னு எல்லாம் கலாய்க்க மாட்டேனுங்க.. :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எங்களுக்கும் தனி மனித வாழ்க்கைல நிறைய பொறுப்பு இருக்கு, ஆபிஸ் போனா Bank Recon, collection, balance sheet, auditing, flow chart, Server Down, Spam mails, Admin work, telephone calls இப்படி ஆயிரம் டென்ஷன் இருக்கு.//

எலேய் பொய் சொல்லாத. என்னிக்காவது ஆபீஸ்ல வேலை பாத்திருக்கியா? காந்தி ஜெயந்தி அன்னிக்கு பொய் சொன்னா அடி விழும். (கொல்றானே..) மச்சி உங்க ஊர்ல டாஸ்மாக்லீவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தேவா அப்படினு ஒரு பிரபல பதிவர்.... ஹிப்ரூ மொழியில் இன்னும் எழுதும் ஒரே பதிவர், தமிழ்ல எழுதுங்க சார், புரியர மாதிரி எழுத தெரியாத அப்படினு அவர பல கமெண்ட் அடிச்சி இருக்கேன்.//

மச்சி முப்பதே நாட்களில் ஹிப்ரூ மொழி கற்றுக்கொள்வது எப்படின்னு ஒரு புக் என்கிட்டே இருக்கு. வேணுமா? $200 தான் மச்சி. என் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பு. நான் பூக் அனுப்பிவைக்கிறேன்

வெங்கட் said...

நாய் நம்மள பாத்து குரைக்குது..
அதுக்காக நாமளும் அதை பாத்து
குரைக்கணுமா..?

அதுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்னு
விட்டு போகணும்...!!

அதைவிட்டுட்டு
"ஏ..!! நாயே ஏன் குரைக்குறேன்னு "
அதுகிட்ட போயி விளக்கம் கேட்டுட்டு
இருப்பீங்களா..?!!

எல்லோருக்கும் நல்லவனா இருக்க
யாராலும் முடியாது..

So.. Cool.. :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1. கும்மி அடிக்கலாமா அடிக்கா கூடாதா?
2. மொக்கை போடலாம போட கூடாதா?
3. இதுல இங்கையும் வந்து சீரியஸ் மேட்டர் படிக்கனுமா??
4. மேதாவிதனத்த காட்டர மாதிரி விவாதிச்சி மண்டை காயனுமா??
5. அப்படி உங்க ப்ளாக்ல கும்மி அடிக்க கூடாத?
6. சும்மா சக்கரைனு லேபிள் ஒட்டிட்டு ஏன் எறும்பு வரல?
7. இந்த கும்மி அடிக்கிற பயலுக கும்மி அடிக்கிற நேரம் ஊர் எல்லாம் போய் அங்க சக்கரை கொட்டி கிடக்கு சொல்ல கூடாதா?
8. எப்பவாது நாங்க நல்லா கும்மி இருக்கோம் வந்து பாருங்க அப்படினு கூப்பிட்டு இருக்கமா?

ங்கொய்யால ஒரு சந்தேகம்ன்னு சொல்லிட்டு எட்டு சந்தேகம் கேக்குறியே. பிச்சுபுடுவேன் ராஸ்கல். யார ஏமாத்த பாக்குற.

dheva said...

தாக்கத்தை கொடுக்கவேண்டும் எழுது. புரட்டிப் போட வேண்டும் மனிதர்களை, அது நகைச்சுவையாயிருந்தாலும் சரி... நல்ல கருத்தை சொல்வதாய் இருந்தாலும் சரி.........

இறுக்கமான மனிதர்கள் எல்லாம் வாழத்தகுதியற்றவர்கள் என்று அறிவித்தால் கூட தகும். சக மனிதன் அறிய முடியாத, சக மனிதனுக்கு பயன் தராத, மனிதர்களின் சந்தோசத்துக்கு எதிரான எல்லாம்...தோற்றுத்தான் போகும்.

டெரரின் கருத்தில் வரிக்கு வரி உடன் பட்டுப் போகிறேன் நான். எப்போதும் இறுக்கமாக.. கனத்த முகத்தோடு இருப்பது மேதாவித்தனம் எனில்....

நான் மிகப் பெரியவன்... பிரபலங்களில் முதன்மையானவன், என் எழுத்து எனக்கு கர்வம், எனக்கு சேர்ந்த நண்பர்கள் கூட்டம் போடும் பிச்சை ஓட்டுக்கள் எனக்கு கர்வம் எனில்

எனக்கு 100 கமெண்ட் வருகிறது..... நான் தலை சிறந்த பதிவர் என்ற எண்ணம் வருமெனில்...

அதிகாரம் என்பதை எழுத்தில் துஷ்பிரோயோகம் செய்து பிரோயோகம் செய்து எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வருமெனில்...

நான் படித்த புத்தகங்களை எப்போதும் என் தலையில் ஒரு மூட்டையாக கட்டித்தூக்கிக்கொண்டு.. போய் எல்லா இடத்திலும் நான் இவ்வளவு படித்திருக்கிறேன் என்று சொல்ல தோன்றுமெனில்

100 பேர் சரியென்று சொல்லும் தவறை கூட்டத்தோடு கூட்டமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில்....


வலைபூக்களிலும் மேல்சாதி எழுத்துக்காரன்.. கீழ் சாதி எழுத்துக்காரன் என்ற வர்ண வியாபாரம் பார்க்கும் மனோபக்குவம் வருமெனில்..............

இறைவா.. எம் அறிவென்று யாம் கருதும் எல்லாவற்றையும் இக்கணமே அழித்துப் போடு.......! சக மனிதரோடு நான் சந்தோசமாய் இருந்து விட்டுச் செத்துப் போகிறேன்.........!


மாப்ஸ் நீ உன்னை எப்போதும் கீழே இறக்கி வைத்துப் பேசுகிறாய் அது உன் தகுதி..மற்றும் பெருந்தன்மை மாப்ஸ். பிரபலங்கள் என்று இன்று சொல்லிக்கொள்பவர்கள் சொல்லி கேட்க ஆசைப்படுவர்கள் எல்லாம் அந்த வார்த்தையில் கட்டுண்டு மயக்கத்தில் இருப்பவர்கள்....

வாழ்க்கை எல்லாவற்றையும் கலைத்துப் போடும் மாப்ஸ்.....அப்போது தெரியும் காற்றில் பறப்பது குப்பையா...இல்லை பறவையா? என்று....

பிரபலம் என்ற வார்த்தை பதம் ஒரு விஷம்....அதை வேண்டுபவர்கள் பருகட்டும்.... நமக்கு........

ஒரு சிங்கிள் டீ...சொல்லு மாப்ஸ்....ஸ்ட்ராஙகா... !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ தேவா அண்ணா
பதிவுதான் ஹிப்ரூ மொழியில் எழுதுறீங்கன்னா கமென்ட்டுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

dheva said...

தம்பி சிரிப்பு போலிஸ்...


தமிழ்ல்ல தான் அடிக்கிறேன்.... எங்க மிஸ் ஆகுது....? ம்ம்ம்ம்ம் இவனுக்கு கண்ணு கிண்னு தெரியலயோ... தம்பி.. எப்ப்பவும் போடுற வெள்ளெழுத்து கண்ணாடி எங்க வச்சிருக்க அத போட்டு படிப்பா!

dheva said...

//பதிவு பெருசுன்னு எல்லாம் கலாய்க்க மாட்டேனுங்க.. :-)//


ஆனந்தி....@ கலாய்க்கிறதா.....அப்டின்னா என்னங்கம்மிணி மீனிங்கு....? வெளங்ற மாதிறி சொல்லப்டாதா....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டீய சீக்கிரம் கொண்டுவாய்ய மாப்ஸ்..>!

dheva said...

//மீ த பர்ஸ்டு......//


சிவா @ உங்க முரட்டுத்தனமான அன்பு தெரியுதுங்கண்ணோவ்...படிசிபோட்டு போட்டிருந்த ரெம்ப நல்லாயிருந்துருக்குமூங்கோ....

dheva said...

எல்.கே @ அவரு தம்பி இல்லிங்கோ..

டெரருக்கு சந்தோசத்தை பாரு கிரகம் புடிச்சவனுக்கு ரெண்டு கழுத வயசாயிப் போச்சுங்கோ...!

dheva said...

டெரரு...@ நாட்டையெல்லாம் யாராலயும் திருந்த முடியாதுங்களா... ? ஏனுங்க இப்டி எல்லோரு சொல்லிப்போட்டு போயிரலாமுங்கோ.. நாம திருந்தணுங்கோ. .. மாப்ஸ் முதல்ல...!

dheva said...

//எல்லாமே உண்மையை சொல்லி இருக்கீங்க டெர்ரொர் என் மனதில் இருப்பதையும் எழுதிடீங்க//


செளந்தர்..@ உச்சி குளுந்து போச்சு தம்பி.. ஹக்கூம்...!

dheva said...

வெங்கட்..@ ஆமங்க... கரெக்டு தானுங்கோ.. நாயிகிட்டே வெளக்கம் கொடுக்க வேணமுங்கோ.. ஆனா சாக்கிரதையா இருக்கணுமுங்கோ..கடிச்சி கிடிச்சி வச்சி தொலைக்கப்போவுது...அப்புறம் டெரர் மாப்ஸ்குக்கு 32 ஊசி போடணும்ங்க...!

dheva said...

//ங்கொய்யால ஒரு சந்தேகம்ன்னு சொல்லிட்டு எட்டு சந்தேகம் கேக்குறியே. பிச்சுபுடுவேன் ராஸ்கல். யார ஏமாத்த பாக்குற.//

டெரரு.. சிரிப்பு போலிஸ் தம்பிய ஏன் சீரியஸாக்குற.. அவங்கிட்ட அவன் பேரு கேட்ட கூட சத்திம்ல பண்ணி சொல்லுவான்... சிக்கலான கேள்வி கேட்டு தம்பிய டென்சன் படுத்தாதலே...!

TERROR-PANDIYAN(VAS) said...

@பொதுமக்கள்

நால்ல தூங்கி இபொதான் எழுந்து இருக்கேன். சார் போய் காலை கடன்கள் முடிச்சிட்டு, ஒரு டீ அடிச்சிட்டு வருவார். வந்து கும்மியில் உங்களுடன் கலந்து கொள்வார்.

(தூக்க கலக்கத்துல எதோ பெரிய பதிவு (சொல்லி) எழுதி இருக்கேன். வந்து என்னா கிறுக்கி இருக்கோம் படிப்போம்...)

TERROR-PANDIYAN(VAS) said...

@siva
//meeeeeeeeeeeeeee

the first..

i go read after first

then i will come...//

ஆமாம்!! நீதான் First... நீ விள்ளாடு செல்லம் இது நம்ம வீடு.

(3.30 மணிக்கு பதிவு எழுதின நான் ஒரு கிறுக்கன்... அதுக்கு 5.30 மணிக்கு வந்து கமெண்ட் போட்ட நீ பெரிய் கிறுக்கன்.... ஹா.. ஹா.. ஹா)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யயோ இவன் வம்ப விலைக்கு வாங்காம போகமாட்டான் போல இருக்கே?

அன்பரசன் said...

//(தூக்க கலக்கத்துல எதோ பெரிய பதிவு (சொல்லி) எழுதி இருக்கேன். வந்து என்னா கிறுக்கி இருக்கோம் படிப்போம்...) //

அப்பா சுயநினைவோட எழுதினது கிடையாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய் ங்கொக்காமக்கா, நான் ஒருத்த கல்லு மாதிரி குத்த வெச்சி உக்கார்ந்திருக்கேன், என்கிட்ட வந்து பிராது கொடுக்காம நீ பாட்டுக்கு என்னென்னமோ பீலா வுட்ருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//தேவா அப்படினு ஒரு பிரபல பதிவர்.... ஹிப்ரூ மொழியில் இன்னும் எழுதும் ஒரே பதிவர்,//

அப்போ அது கொரிய மொழி இல்லியா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

எலேய்!! பார்மாலிட்டி பன்னும்போது சிரிப்பு காட்டாத... உனக்காக தான் மாப்பி தம்கட்டி தண்ணிகூட குடிக்காம எழுதி இருக்கேன்... இரு வந்துடரேன்.... :)))))

TERROR-PANDIYAN(VAS) said...

@siva

//பாண்டியன் அண்ணா
என்ன ஆச்சு..டோன்ட் வொர்ரி
நாங்கலாம் இருக்கோம்.//

உன் பாசத்த பாத்து கண்ணு கலங்குது சிவா... நீ போய் சாலியா விள்ளாடு. நம்ம பன்னிகுட்டி அண்ணன் எல்லாத்தையும் பார்த்துபாரு. இந்த பதிவு எழுத சொன்னதே அவருதான்...

(பன்னிகுட்டி காலி...)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

எலேய்!! பார்மாலிட்டி பன்னும்போது சிரிப்பு காட்டாத... உனக்காக தான் மாப்பி தம்கட்டி தண்ணிகூட குடிக்காம எழுதி இருக்கேன்... இரு வந்துடரேன்.... :)))))///

ங்கொய்யாலே...ங்கொய்யாலே கண்ணு கலங்குதுல, ஏண்டா இப்பிடி பாசத்த கசக்கி புழியிறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@siva

//பாண்டியன் அண்ணா
என்ன ஆச்சு..டோன்ட் வொர்ரி
நாங்கலாம் இருக்கோம்.//

உன் பாசத்த பாத்து கண்ணு கலங்குது சிவா... நீ போய் சாலியா விள்ளாடு. நம்ம பன்னிகுட்டி அண்ணன் எல்லாத்தையும் பார்த்துபாரு. இந்த பதிவு எழுத சொன்னதே அவருதான்...

(பன்னிகுட்டி காலி...)///

சைலன்ஸ்......... ! பேசிக்கிட்ருக்கோம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பாதி பேர் என் ப்ளாக் புனிதம் கெட்டு போச்சு சொல்றிங்க.///

யாருலே அது இப்பிடி ஒரு வார்த்தைய சொன்னது? தக்காளி சொல்லுலே இப்பவே போயி சங்க அறுத்துடுறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆபிஸ் போனா Bank Recon, collection, balance sheet, auditing, flow chart, Server Down, Spam mails, Admin work, telephone calls இப்படி ஆயிரம் டென்ஷன் இருக்கு////

என்றா மாப்பு 1000 டென்சன்னுட்டு 8 தாம் போட்ருக்கே? மீதி எங்கே காக்கா தூக்கிட்டு போயிடிச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உங்களுக்கு முன்னாடி நூறு பேர் எழுதிய விஷயத்த நீங்க 101வது ஆள எழுதுவிங்க அதை படிக்கலனா கோவபடறிங்க.///

இப்பிடியெல்லாம் கூட பிரண்ட்ஸ் வெச்சிருக்கியா பாண்டி? பெரிய ஆளுதாம்லே நீ!

TERROR-PANDIYAN(VAS) said...

@LK

//தம்பி எதுக்கு டென்சன் ?? இப்ப கும்மி அடிக்கறதா யாரும் தப்பு சொல்லலை. ஆனால் நல்ல கருத்துள்ள பதிவுகளுக்கு ஆதரவு தரனும்னுதான் சொல்றோம். என்ன எழுதறதுன்னு யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. அது அவரவர் இஷ்டம். ஆனால் அதே சமயத்தில் நல்ல பதிவுகளை எழுதுகிறவர்கள் ஆதரவு இல்லாமல் காணமல் போய் விடக் கூடாது//

அண்ணா டென்ஷன் எல்லாம் இல்லிங்கனா. பாருங்க பதிவுல ஒரு இடத்துலகூட மரியாதை இல்லாம பேசி இருக்க மாட்டேன். நல்ல பதிவு எழுதரவங்கள நீங்க எல்லாம் ஆதரிங்க சார். எங்களுக்கு பிடிச்சா நாங்களும் கண்டிப்பா ஆதரிப்போம். சட்டை பிடிச்சி இழுத்து நல்ல பதிவ போய் படி சொல்லாதிங்க சார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தேவா அப்படினு ஒரு பிரபல பதிவர்.... ஹிப்ரூ மொழியில் இன்னும் எழுதும் ஒரே பதிவர், தமிழ்ல எழுதுங்க சார், புரியர மாதிரி எழுத தெரியாத அப்படினு அவர பல கமெண்ட் அடிச்சி இருக்கேன். அவர் கோவபடல அதே கையால கவிதை, கதை சூப்பர் மாப்ஸ் கமெண்ட் போட வச்சாரு.///

உண்மை (மொதத் தடவையா உண்மை பேசுரேன்னு நினைக்கிறேன்!)! சீரியசா பீலிங்க்ஸ கொட்டி எழுதியிருந்தாலும் கும்மியடிச்சா கோவப்படாத மனுசன்! நம்மையும் கொஞ்சம் கொஞ்சமா பீலிங்க்ஸ் உள்ளே இழுத்துட்டாரு!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னி

//யாருலே அது இப்பிடி ஒரு வார்த்தைய சொன்னது? தக்காளி சொல்லுலே இப்பவே போயி சங்க அறுத்துடுறேன்!
//

எண்டா சங்கு என்னா உன் வீட்டு தோட்டத்துல இருக்க கத்தரிக்கா நினச்சி இருக்கியா?? கொலை கேசுடா பாவி.... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நீங்க எல்லாம் மெத்த படிச்ச மேதாவிகள் ஒரே ஒரு வார்த்தை நாகரிகமா சொல்லுங்க இங்கு கும்மி அடிக்காதிர்கள் நண்பர்களேனு. எங்களுக்கும் ஆண்டவன் கொஞ்சம் சுயமரியாதை, சுய கௌரவம் எல்லாம் வச்சி தொலைச்சிடான். நீங்க சொல்லி கேக்கலனா வெளிய போட நாயே சொல்லுங்க.///

நீ மங்குனியத்தானே சொல்ற? (ஹைய்யா...சிக்கிட்டான் பாண்டி...!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னி

//யாருலே அது இப்பிடி ஒரு வார்த்தைய சொன்னது? தக்காளி சொல்லுலே இப்பவே போயி சங்க அறுத்துடுறேன்!
//

எண்டா சங்கு என்னா உன் வீட்டு தோட்டத்துல இருக்க கத்தரிக்கா நினச்சி இருக்கியா?? கொலை கேசுடா பாவி.... :)///

எலேய் நான் சொன்ன சங்கு பீச்சுல கிடக்குறதுடா? (மாட்டி விடுறதுலேயே இரு!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அந்த குரூப்ல Auditor, Engineer, Bio Technician, Marine Engineer இப்படி பல புத்திசாலிங்க இருக்காங்க ///

என்ன வுட்டுட்டியே ராசா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னி

//உண்மை (மொதத் தடவையா உண்மை பேசுரேன்னு நினைக்கிறேன்!)! சீரியசா பீலிங்க்ஸ கொட்டி எழுதியிருந்தாலும் கும்மியடிச்சா கோவப்படாத மனுசன்! நம்மையும் கொஞ்சம் கொஞ்சமா பீலிங்க்ஸ் உள்ளே இழுத்துட்டாரு! //

டே பன்னி செல்லம் நீ பதிவு எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டியா?? கேக்கவே சந்தோசமா இருக்குடா... பாருங்க பொது மக்களே நாங்களும் நல்ல பதிவ படிக்கிறோம்... படிக்கிறோம்... படிக்கிறோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சாமிகளா. எப்பவாது நாங்க நல்லா கும்மி இருக்கோம் வந்து பாருங்க அப்படினு கூப்பிட்டு இருக்கமா?///

கூப்பிட்டாலும் வந்துடவா போறாங்ய?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னி

//உண்மை (மொதத் தடவையா உண்மை பேசுரேன்னு நினைக்கிறேன்!)! சீரியசா பீலிங்க்ஸ கொட்டி எழுதியிருந்தாலும் கும்மியடிச்சா கோவப்படாத மனுசன்! நம்மையும் கொஞ்சம் கொஞ்சமா பீலிங்க்ஸ் உள்ளே இழுத்துட்டாரு! //

டே பன்னி செல்லம் நீ பதிவு எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டியா?? கேக்கவே சந்தோசமா இருக்குடா... பாருங்க பொது மக்களே நாங்களும் நல்ல பதிவ படிக்கிறோம்... படிக்கிறோம்... படிக்கிறோம்...//

கமென்ட்ஸ்லாம் பாக்குறதில்லையா?

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
///அந்த குரூப்ல Auditor, Engineer, Bio Technician, Marine Engineer இப்படி பல புத்திசாலிங்க இருக்காங்க ///

என்ன வுட்டுட்டியே ராசா?////

ஏம்ப்பா கேடி லிஸ்ட்ல இவர் போரையும் சேர்த்து விடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///
உங்களுக்கு பிடிச்சத நீங்க செய்ங்க, படிங்க... எங்களுக்கு பிடிச்சதை நாங்க செய்ரோம், படிக்கிறோம்...///

ரைட்..... வுடு...!

சௌந்தர் said...

நீங்க எது சொல்றது இருந்தாலும் நேர மங்குனி கிட்டயும் மர்மயோகி கிட்டயும் போய் சொல்லு

dheva said...

பன்னிக்குட்டி..@ பங்காளி....கண்னுல தண்ணி வந்துடுச்சு பங்காளி


" தாலே லாலலி லா லா......தாலே லாலலி லால....."

சௌந்தர் said...

dheva சொன்னது…
பன்னிக்குட்டி..@ பங்காளி....கண்னுல தண்ணி வந்துடுச்சு பங்காளி


" தாலே லாலலி லா லா......தாலே லாலலி லால....."/////


ohhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//நானும் தான் அட டா இது தான் உண்மை//

நீங்க மட்டுமா? இன்னும் பல பேர்..

//எல்லாமே உண்மையை சொல்லி இருக்கீங்க terror என் மனதில் இருப்பதையும் எழுதிடீங்க//

அய்யோ அப்பொ நான் உங்க மனசுல இருந்த ட்ராப்ட் திருடிட்டனா?? :))

//யே யே யாருப்பா அது நம்ம terror கலாய்ப்பது terror யாருன்னு சொல்லுங்க ஒரு கை பார்த்து விடலாம்//

அதுக்குனே சில வீனா போன பசங்க இருக்காங்க சார்.. நீங்க என்னானு கேளுங்க சார்...

(பாவிகளா சொன்னதே உங்களதான்... அவ்வ்வ்வ்வ்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dheva கூறியது...
பன்னிக்குட்டி..@ பங்காளி....கண்னுல தண்ணி வந்துடுச்சு பங்காளி


" தாலே லாலலி லா லா......தாலே லாலலி லால....."///


லாலே லாலல லாலா......!

கண்ணத் தொடச்சிக்க மாப்பு!

சௌந்தர் said...

அய்யோ அப்பொ நான் உங்க மனசுல இருந்த ட்ராப்ட் திருடிட்டனா?? :)////

@@@terror
இந்த பதிவு நான் தான் எழுதி கொடுத்தேன் சொல்லிடாதீங்க terror

சௌந்தர் said...
This comment has been removed by the author.
TERROR-PANDIYAN(VAS) said...

@என்னது நானு யாரா?

//LK அண்ணாச்சியோட கருத்து தான் எனதும். அதனால அவரோட கருத்தை

ர்ப்பீட்ட்ட்ட்டுன்னு சொல்லிடறேன்//

சரி அவருக்கு சொன்னது உங்களுக்கு ரிப்பீட்ட்ட்ட்டு...

TERROR-PANDIYAN(VAS) said...

@என்னது நானு யாரா?

//LK அண்ணாச்சியோட கருத்து தான் எனதும். அதனால அவரோட கருத்தை

ர்ப்பீட்ட்ட்ட்டுன்னு சொல்லிடறேன்//

சரி அவருக்கு சொன்னது உங்களுக்கு ரிப்பீட்ட்ட்ட்டு...

TERROR-PANDIYAN(VAS) said...

@Ananthi

//முழுதும் படித்தேன்...
உங்கள் மனத்தை கொட்டியதற்கு நன்றி... :-)

பதிவு பெருசுன்னு எல்லாம் கலாய்க்க மாட்டேனுங்க.. :-)//

நீங்க கலாய்ங்க மேடம். உங்கள மாதிரி பெண்களுக்கு எல்லாம் விழிப்புனர்ச்சி வரனும். தைரியமா இறங்கி கலாய்ங்க. ஆண்கள் மட்டுதான் குருப்பா போய் கும்மி அடிக்கனுமா? கும்மி குருப் மகளிர் பிரிவு ஆரம்பிங்க...

(டாய் மேடம் ட்ரைன் பண்ணுங்க... மகளிர் அணியை கும்ம அனுப்பி வைக்களாம்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//எலேய் பொய் சொல்லாத. என்னிக்காவது ஆபீஸ்ல வேலை பாத்திருக்கியா? காந்தி ஜெயந்தி அன்னிக்கு பொய் சொன்னா அடி விழும். (கொல்றானே..) மச்சி உங்க ஊர்ல டாஸ்மாக்லீவா?//

நான் சொன்னது எல்லாம் என் பக்கத்து சீட்டுல இருக்கவர் செய்யர வேலை. ஒரே சத்தம் நிம்மதியா தூங்க முடியல, ப்ளாக் படிக்க முடியல

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//மச்சி முப்பதே நாட்களில் ஹிப்ரூ மொழி கற்றுக்கொள்வது எப்படின்னு ஒரு புக் என்கிட்டே இருக்கு. வேணுமா? $200 தான் மச்சி. என் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பு. நான் பூக் அனுப்பிவைக்கிறேன்//

வேண்டாம். நீ போன முறை கொரிய மொழி புக் அனுப்பறேன் சொல்லி கணக்கு புக் அனுப்பி வச்ச... உன்னை நம்ப மாட்டேன்...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆல் அல்ல கை, நல்ல கை, நொல்ல கை, அரசியல் பண்றவங்க, பின்னாடி இருந்து குத்தர துரோகிங்க, புது பதிவர், பிரபல பதிவர், நாட்ட திருத்த வந்த நாட்டாமைங்க //
இத்தனை பேர் இருக்காய்ங்களா...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ங்க பாதி பேர் என் ப்ளாக் புனிதம் கெட்டு போச்சு சொல்றிங்க.//
நீங்க வந்தாதான் பிளாக் களை கட்டுது தலைவரே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இன்னும் நிறையா விஷயம் இருக்கு... ஆனா இதுக்கே பதிவு பெருசா இருக்கு //அதையும் கொட்டிருங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

யார் மோலயும் கோவபட்டு இதை எழுதலிங்கக்கா / எழுதலிங்கனா. மனசுல தோனுச்சி கொட்டிட்டேன்//
மச்சி டெரருக்கு ஒரு குவார்ட்டர் சொல்லு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எல்லோரையும் எல்லோரும் ஆதரிப்போம்...வாழ்க கும்மி வளர்க கும்மி

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

// எல்லோருக்கும் நல்லவனா இருக்க
யாராலும் முடியாது..//

மிக்க நன்றி தல!! :)

(ஹலோ!! அடங்க மாட்டிங்கள நீங்க? உங்களதான் ஊர் வம்பு வளக்கர இடத்துக்கு வராதிங்க சொல்லி இருக்கேன் இல்ல... :) )

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//ங்கொய்யால ஒரு சந்தேகம்ன்னு சொல்லிட்டு எட்டு சந்தேகம் கேக்குறியே. பிச்சுபுடுவேன் ராஸ்கல். யார ஏமாத்த பாக்குற//

எலேய் லூசு போலீஸ்!! ஒரு ஆளுக்கு ஒரு சந்தேகம்... என் ப்ளாக் படிக்கிறதே 8 பேருதான்... புதுசா யாராவது வந்தா புதுசா கேள்வி கேப்பேன்....

எஸ்.கே said...

எதைப் பற்றி எழுதினாலும் இரசிக்கும்படி எழுத வேண்டும். அது கருத்துள்ளதாய் இருந்தால் என்ன, கருத்தில்லா விட்டால் என்ன! கருத்துடன் ரசிக்க வைப்பதை விட கருத்தில்லாமல் இரசிக்க வைப்பது எவ்வளவு கடினம்?
எதைப் படிப்பது என்பது படிப்பவர்களின் இரசனை மற்றும் விருப்பம் சார்ந்தது! அதை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது!

நான் ஒரு தொழிற்நுட்ப பிளாக்கர். ஆனால் நான் இரசிக்கும் பெரும்பாலான விசயங்கள் நகைச்சுவை சார்ந்தவையே! கருத்துள்ள பதிவுகளுக்கும் செல்வேன்! மொக்கை பதிவுகளுக்கும் செல்வேன்! எனக்கு பிடித்தது இது!

நீங்கள் சொல்வது போல் பிரச்சினை நிறைந்த வாழ்வில் பிளாக்/இணையம் என்பதே பொழுதுபோக்கிற்காகத் தானே! இதில் செலவிடும் நேரம் மற்ற பிரச்சினைகளை மறந்து கலகலப்பாக இருக்கத்தானே! இதில் என்ன தவறு?

கும்மி அடிப்பது என்பது நண்பர்கள் அரட்டையடிப்பது போலத்தானே அதில், கிண்டல் செய்வது, சம்பந்தமில்லாமல் பேசுவது, திட்டுவது, போன்று பல விசயங்கள் இருக்கும். கண்ணுக்கு தெரியா நண்பர்களுடன் இதை செய்வது தவறில்லை.

ஒருவரின் செயல்/கருத்து பிடிக்கவில்லை என்றால் அதை நாகரீகமான முறையில் சொல்வது நல்லது. பல வித பதவிகள்/பண்புகள் கொண்ட மனிதர்கள் உலாவுமிடம் இந்த இணையம். இதில் மற்றவருக்கு மரியாதை கொடுப்பது கூட நாகரிகம்தான். (இது எல்லோருக்கும் பொருந்தும்)

நான் எங்கு கமெண்ட் போட்டாலும் கலாய்ப்பது போல போடவே மாட்டேன். ஏனெனில் என்னில் வயது பெரியவர், சிறியவர், நல்ல பதவிகளில் இருப்போர், அனுபவம் நிறைந்தவர்களிடம் பேசுகிறேன் என தெரியும். அதனால் இயல்பாகவே ஒரு தயக்கம் வந்து விடுகிறது.

தங்கள் பணியை தொடருங்கள்! என்னைப் போன்ற முகமறியா நண்பர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டு!

எஸ்.கே said...

மன்னிக்கனும். ஓவரா ரீஃப்ரஷ் பண்ணி ஒரே கமெண்டை பலமுறை பப்ளி ஆயிடுச்சு! மன்னிக்கனும்! :-)

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//பிரபலம் என்ற வார்த்தை பதம் ஒரு விஷம்....அதை வேண்டுபவர்கள் பருகட்டும்.... நமக்கு........

ஒரு சிங்கிள் டீ...சொல்லு மாப்ஸ்....ஸ்ட்ராஙகா... !//

போ மாப்ஸ் எவ்வளோ பெரிய கமெண்ட்... இப்பொ எனக்கு டீ வேணும்... யார்பா அங்க?? எனக்கும் மாப்ஸ்க்கும் சேர்த்து இரண்டு டீ சொல்லு....

(உங்கள் வெளிபடையான ஆதரவு, கருத்துக்கு மிக்க நன்றி மாப்ஸ்... இருந்தாலும் என்ன விட அதிக பேர நீங்க கும்மிட்டிங்க... ஹா..ஹா..ஹா)

vinu said...

டிஸ்கி : யார் மோலயும் கோவபட்டு இதை எழுதலிங்கக்கா / எழுதலிங்கனா. மனசுல தோனுச்சி கொட்டிட்டேன்... இன்னும் நிறையா விஷயம் இருக்கு... ஆனா இதுக்கே பதிவு பெருசா இருக்கு கலாய்ப்பனுங்க.

ithuthaaan ennoda commenttum unga pathivukkuuuuuuuuuuuu

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டீய சீக்கிரம் கொண்டுவாய்ய மாப்ஸ்..>!//

அட போ மாப்ஸ்!! பழைய பாக்கி கேட்டு டீ வாங்க போன சிரிப்பு போலீஸ் மேல கடைகாரன் சுடுதண்ணி ஊத்திடானாம். வேற கடைக்கு பன்னிகுட்டி அனுப்பி இருக்கேன்... வெய்ட் பண்ணு...

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//சிவா @ உங்க முரட்டுத்தனமான அன்பு தெரியுதுங்கண்ணோவ்...படிசிபோட்டு போட்டிருந்த ரெம்ப நல்லாயிருந்துருக்குமூங்கோ...//

மாப்ஸ் மீ த ஃப்ர்ஸ்ட் ஒரு ஜாலி மாப்ஸ். பதிவ படிக்க போனா வேற யாராவது போட்டுட மாட்டாங்க. நீ வேனும்னா ட்ரை பண்ணி பாரேன் ரொம்ப நல்லா இருக்கும்...

( நல்லா எழுதுபவர்களை நாசம் பண்ணும் சங்கம்... :)))) )

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா
//எல்.கே @ அவரு தம்பி இல்லிங்கோ..

டெரருக்கு சந்தோசத்தை பாரு கிரகம் புடிச்சவனுக்கு ரெண்டு கழுத வயசாயிப் போச்சுங்கோ...//

பொறாமை பொறாமை!!

(பொதுவில் போட்டு கொடுப்போறை பார்த்து கடுப்பில் கத்தும் சங்கம்..)

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//டெரரு...@ நாட்டையெல்லாம் யாராலயும் திருந்த முடியாதுங்களா... ? ஏனுங்க இப்டி எல்லோரு சொல்லிப்போட்டு போயிரலாமுங்கோ.. நாம திருந்தணுங்கோ. .. மாப்ஸ் முதல்ல...!//

எலேய்!! மாப்ஸ் சொலிட்டாரு எல்லா பயலும் ஒழுங்க திருந்திடுங்க. நாளைக்கு வெள்ளை வேஷ்ட்டி, வெள்ளை சட்டை போட்டு எல்லாறும் காந்தி சிலை கிட்ட வாங்க. Firstல இருந்து நாம எல்லாம் இந்திய சுகந்திரத்துக்கு போராடரோம்...

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//கடிச்சி கிடிச்சி வச்சி தொலைக்கப்போவுது...அப்புறம் டெரர் மாப்ஸ்குக்கு 32 ஊசி போடணும்ங்க...//

கடிப்போர் கடிக்கட்டும், அடிப்போர் அடிக்கட்டும்... ஆனால் திருப்பி உங்க ரேஞ்சிக்கு இல்லைனா அதுக்கும் கீழ நாங்க இரங்கிட்டா கோச்சிகாதிங்க பங்காளி...

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிக்குட்டி

//அய்யயோ இவன் வம்ப விலைக்கு வாங்காம போகமாட்டான் போல இருக்கே?//

அட கூறு இரண்டு ரூபாய் சொல்லி கூவி கூவி விக்கறாங்க பன்னிகுட்டி. அதான் உனக்கும் சேர்த்து இரண்டு கூறு வாங்கி போட்டு இருக்கேன். வந்து சட்டுபுட்டுனு எடுத்துட்டு போ...

TERROR-PANDIYAN(VAS) said...

@அன்பரசன்

//அப்பா சுயநினைவோட எழுதினது கிடையாதா?//

ஹி..ஹி..ஹி.. சுனநினைவோடு எழுதினா ப்ளாக் பத்தாது... அது சரி நீங்களும் தூக்க கலக்கத்துல தான் இருக்கிங்க போல? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம போய்ட்டிங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிக்குட்டி

//டேய் ங்கொக்காமக்கா, நான் ஒருத்த கல்லு மாதிரி குத்த வெச்சி உக்கார்ந்திருக்கேன், என்கிட்ட வந்து பிராது கொடுக்காம நீ பாட்டுக்கு என்னென்னமோ பீலா வுட்ருக்கே?//

அட பாவி நீ வெறும் டைவர்ஸ் கேஸ் மட்டும்தாம் பார்ப்ப சொன்னாங்க!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டு

//அப்போ அது கொரிய மொழி இல்லியா?//

இப்பொ எண்டா கொரியாகார இலுமினாட்டி இங்க கூப்பிடர?? அவன் எங்கையாது கொரிய படம் சி.டி திருட போய் இருப்பான்...

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னி

//என்றா மாப்பு 1000 டென்சன்னுட்டு 8 தாம் போட்ருக்கே? மீதி எங்கே காக்கா தூக்கிட்டு போயிடிச்சா?//

இல்லைபா நரி தூக்கி போய்டுத்து!! பாட்டி கிட்ட வடை திருடின மேட்டர்ல எதோ பார்ட்னர்ஷிப் பிரச்சனை போல. அதான் நரி இப்பொ அதுவே டீல் பண்ணுது... பஞ்சாயத்துக்கு உன்கிட்ட போக சொன்னேன்... வரலையா??

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிக்குட்டி

//நீ மங்குனியத்தானே சொல்ற? (ஹைய்யா...சிக்கிட்டான் பாண்டி...!//

மங்கு நம்ம ஆளு அதை போய் சொல்லுவனா?? இது வேற ஆளு.

(எண்டா கோத்து விடற? நானே யார சொன்னோம் தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்...)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு சந்தேகம் பதிவ எங்கலே

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிக்குட்டி

//என்ன வுட்டுட்டியே ராசா? //

க்ளாட் டு மீட் யு டாக்டர்.பன்னிகுட்டி!!

(சந்தோஷமா?? சிரிப்ப பாரு..)

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//நீங்க எது சொல்றது இருந்தாலும் நேர மங்குனி கிட்டயும் மர்மயோகி கிட்டயும் போய் சொல்லு//

மங்கு ஒரு பச்சமண்ணு அதை என்பா வம்புக்கு இழுக்கறிங்க... நீ போய் எந்திரன் படம் மறுக்கா பாரு மங்கு....

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//@@@terror
இந்த பதிவு நான் தான் எழுதி கொடுத்தேன் சொல்லிடாதீங்க terror//

சரி. அப்புறம் கும்மறவங்க எல்லாம் உன்னை கும்மிடுவாங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

//இத்தனை பேர் இருக்காய்ங்களா..//

ஆமாம். எல்லாம் நம்ம அங்காளி, பங்காளிதான்.

//நீங்க வந்தாதான் பிளாக் களை கட்டுது தலைவரே//

இது அடி வாங்கி வைக்க பிளான்...

//அதையும் கொட்டிருங்க//

அது எல்லாம் பில்டப் மக்கா. சரக்கு தீர்ந்து போச்சி. பப்ளிக்ல மானத்த வாங்காதிங்க...

//மச்சி டெரருக்கு ஒரு குவார்ட்டர் சொல்லு//

வேனாம்... எனக்கு பிடிக்காது. கஞ்ஜா, அபின் இருந்தா சொல்லுங்க..

//எல்லோரையும் எல்லோரும் ஆதரிப்போம்...வாழ்க கும்மி வளர்க கும்மி//

வாழ்க கும்மி ஆண்டவர். நன்றி!!

(மக்கா ஒரு கமெண்ட அஞ்சா பிறிச்சி போட்டு அஞ்சி கமெண்ட் மொய் எழுதி இருக்கிங்க.. இது போங்காட்டம்...)

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//எதைப் படிப்பது என்பது படிப்பவர்களின் இரசனை மற்றும் விருப்பம் சார்ந்தது! அதை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது!//

நன்றி!!

//கும்மி அடிப்பது என்பது நண்பர்கள் அரட்டையடிப்பது போலத்தானே அதில், கிண்டல் செய்வது, சம்பந்தமில்லாமல் பேசுவது, திட்டுவது, போன்று பல விசயங்கள் இருக்கும்//

இதைதான் நான் சொல்ல தெரியாம சொல்லி இருக்கேன்...

//ஏனெனில் என்னில் வயது பெரியவர், சிறியவர், நல்ல பதவிகளில் இருப்போர், அனுபவம் நிறைந்தவர்களிடம் பேசுகிறேன் என தெரியும். அதனால் இயல்பாகவே ஒரு தயக்கம் வந்து விடுகிறது.//

நீங்க சொல்றர்து ரொம்ப சரி. சிலருக்கு மாரியாதை குறைவா பேசினா பிடிக்காது. ஆன சாட்ல பேசி, பழகி (பாழாகி) நண்பர்கள் ஆன பின்னர் அந்த மரியாதை எல்லாம் காத்துல பறந்து போய்டுது. புதியவர்கள் கிட்ட கருத்து சொல்லும்போது கவனமா இருக்கனும். அதுலையும் மாற்று கருத்து சொல்லும் போது ரொம்ப கவனம் தேவை.

//தங்கள் பணியை தொடருங்கள்! என்னைப் போன்ற முகமறியா நண்பர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டு!//

நன்றி நண்பரே!!

(நல்லவர்களிடம் நல்லவனாக நடிக்கும் சங்கம்...)

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//மன்னிக்கனும். ஓவரா ரீஃப்ரஷ் பண்ணி ஒரே கமெண்டை பலமுறை பப்ளி ஆயிடுச்சு! மன்னிக்கனும்! :-)//

ஆஆஆமாம்... நான் இங்க திருக்குறள் எழுதி இருக்கேன் அதுக்கு நடுவுல நீங்க புறனாணுறு எழுதிட்டிங்க இதுக்கு மண்ணிப்பு வேற... போங்க பாஸ்...

(தாங்கள் கூறியபடி ரிப்பீட் ஆகிய கமெண்ட் அழித்து விட்டேன்...)

TERROR-PANDIYAN(VAS) said...

@vinu

//ithuthaaan ennoda commenttum unga pathivukkuuuuuuuuuuuu//

குத்து மதிப்பா ஒரு நாலு லைன் காப்பி & பேஸ்ட் பண்ணி இருக்கிங்க... ரைட்டு... :)))) நீங்க என்ன வேனும்னா சொல்லுங்க மாப்ஸ் நீங்க ஒரு இங்லிபிஷ் திருவள்ளுவர்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//ஒரு சந்தேகம் பதிவ எங்கலே//

ரிஜிஸ்டர் ஆபிஸ் போ நல்லா பதிவாங்க!!

பனங்காட்டு நரி said...

ரைட் ....,யாரு மச்சி அது :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பனங்காட்டு

//ரைட் ....,யாரு மச்சி அது :)//

அதான் தெரியல மச்சி!!! யாராவாது அவங்கள வந்து வாய கொடுத்தாங்கன காந்திக்கு பலி கொடுத்துடலாம்....

பனங்காட்டு நரி said...

//// Auditor, Engineer, Bio Technician, Marine Engineer ///

மச்சி இங்கிலிபீசு எல்லாம் பேசுற ...அது யாரு மாமா marine engineer ...,

பனங்காட்டு நரி said...

/// வலைபூக்களிலும் மேல்சாதி எழுத்துக்காரன்.. கீழ் சாதி எழுத்துக்காரன் என்ற வர்ண வியாபாரம் பார்க்கும் மனோபக்குவம் வருமெனில்..............////

க்ளாஸ் ஸ்டேட்மென்ட்


வந்துருச்சு தேவா ....

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி

//மச்சி இங்கிலிபீசு எல்லாம் பேசுற ...அது யாரு மாமா marine engineer ...,//

நான்தாண்டா அது.

(ஒரு flow ல எதோ எழுதிட்டேண்டா சொன்னா நம்பவா போற... இல்லை அவன் பேர சொன்னாதான் நம்பபோறியா...)

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி

//க்ளாஸ் ஸ்டேட்மென்ட்


வந்துருச்சு தேவா ....
//

அப்பொ நீ என் ப்ளாக் தீ வைக்காம போக மாட்ட... ரைட்டு நீ நடத்து மச்சி... :))))

பனங்காட்டு நரி said...

/// க்ளாட் டு மீட் யு டாக்டர்.பன்னிகுட்டி!! ///

யோவ் நம்ம ராமசாமி

டாக்டரையா .....,அவ்வவ்வ்வ்வ் ..,

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி

//யோவ் நம்ம ராமசாமி

டாக்டரையா .....,அவ்வவ்வ்வ்வ் .. //

அது நீ நினைக்கிற டாக்டர் இல்லை. விஜய் வாங்கினாரு இல்ல அந்த டாக்டர்... ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@நரி

//யோவ் நம்ம ராமசாமி

டாக்டரையா .....,அவ்வவ்வ்வ்வ் .. //

அது நீ நினைக்கிற டாக்டர் இல்லை. விஜய் வாங்கினாரு இல்ல அந்த டாக்டர்... ஹி ஹி ஹி///


யாருலே அவன் சலம்புறது? அந்தா நாதாரியோட போயி என்ன சேர்க்குறீங்களா, ங்கொக்காமக்கா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னி

//யாருலே அவன் சலம்புறது? அந்தா நாதாரியோட போயி என்ன சேர்க்குறீங்களா, ங்கொக்காமக்கா?//

ஏன் மச்சி கோவபடர?? அப்பொ நீ டாக்டர் இல்லியா?? பாலைவனத்துல புல்லு புடுங்கரவனா?? இல்ல ஒட்டகத்துக்கு பல்லு வெளக்கி விடறியா?

பனங்காட்டு நரி said...

//// யாருலே அவன் சலம்புறது? அந்தா நாதாரியோட போயி என்ன சேர்க்குறீங்களா, ங்கொக்காமக்கா? ///

நரி ...,நரி ...,நரி ....,நரி ....., (விவிதபாரதி பயோரியா பல்படி விளம்பரம் மாதிரி படிக்கவும் )

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....

நன்றி - ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

TERROR-PANDIYAN(VAS) said...

பெ.சொ.வி

//ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....

நன்றி - ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) //

அப்படியா சொல்றிங்க. ராமேஷ் ஆடாம அசையாம நில்லு.. இல்லைன குறி தவறிடும்... :)) . நன்றி தல!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னி

//யாருலே அவன் சலம்புறது? அந்தா நாதாரியோட போயி என்ன சேர்க்குறீங்களா, ங்கொக்காமக்கா?//

ஏன் மச்சி கோவபடர?? அப்பொ நீ டாக்டர் இல்லியா?? பாலைவனத்துல புல்லு புடுங்கரவனா?? இல்ல ஒட்டகத்துக்கு பல்லு வெளக்கி விடறியா?///

ம்ம்ம்ம்.....ஒட்டகம் ஆயி போனா பொறுக்கிப் போடுறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பனங்காட்டு நரி கூறியது...
//// யாருலே அவன் சலம்புறது? அந்தா நாதாரியோட போயி என்ன சேர்க்குறீங்களா, ங்கொக்காமக்கா? ///

நரி ...,நரி ...,நரி ....,நரி ....., (விவிதபாரதி பயோரியா பல்படி விளம்பரம் மாதிரி படிக்கவும் )///

வேறெங்கும் கிளைகள் கிடையாது, போன் 0, 00, 000!

வெறும்பய said...

சரியா சொன்னீங்க... நீங்க சொன்னது போல வேலையில வர கோவம் ஆத்திரம் எல்லாமே இந்த பதிவுலகம் வந்தா காணாம போகுது...

அனா இங்கயும் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்.. ஜாதி.. மதம் அப்படீன்னு போட்டு மொங்க தனமா பேசுறாங்க... இவனுன்கேளுக்கு நாம எவ்வளவோ மேலை மச்சி... நம்மால முடிஞ்ச வரை பத்து பேர சந்தொசப்படுத்துறோம்... விருபமில்லாதவன் எங்க பக்கமே வராத...

நாமெல்லாம் நாட்டைப்பற்றி எழுதுறதுனால நாடு உடனே திருந்தப் போறதில்ல... இங்கே நமக்கு முழு சுதந்திரம் இருக்கு., உனக்கு என்ன தோணுதோ நீ எழுது..எனக்கு என்ன தோணுதோ நான் எழுதுறேன்.. படிக்கிறதும் படிக்காததும் படிக்காத்ததும் அவனவன் விருப்பம்...

Ananthi said...

///ஆனந்தி....@ கலாய்க்கிறதா.....அப்டின்னா என்னங்கம்மிணி மீனிங்கு....? வெளங்ற மாதிறி சொல்லப்டாதா....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டீய சீக்கிரம் கொண்டுவாய்ய மாப்ஸ்..>!///

கடைசி வரைக்கும் ஒரு டீ கூட வாங்கித் தரல போல, உங்க மாப்ஸ்.. :-))))

(கலாய்க்கிரதுன்னா இன்னான்னு, warrior ஐ கேளுங்கோ :-)) )

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னி & நரி

//நரி ...,நரி ...,நரி ....,நரி ....., (விவிதபாரதி பயோரியா பல்படி விளம்பரம் மாதிரி படிக்கவும் )

வேறெங்கும் கிளைகள் கிடையாது, போன் 0, 00, 000!//

ஆமாம். நரி நாலு வார்த்தையில் கவிதை எழுதி இருக்காரு (பெரிய பாரதியார் பாட்டு எப்படி படிக்கனும் ராகம், தாளம் எல்லாம் சொல்லி இருக்காரு). இவரு அதுக்கு போன் நம்பர் சொல்ராரு. அடுத்து இரண்டு போரு சேர்ந்து டூயட் பாடுங்க. பதிவ பத்தி பேசுங்கட ப்ளடி பக்கர்ஸ்.

சரி மச்சி... இந்த விவிதபாரதி துபாய்ல வேலை செய்யாதா? யோ பன்னிகுட்டி நீ கொடுத்த நம்பர் சரி இல்லை வருது. கரைக்டா சொல்லு... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னி & நரி

//நரி ...,நரி ...,நரி ....,நரி ....., (விவிதபாரதி பயோரியா பல்படி விளம்பரம் மாதிரி படிக்கவும் )

வேறெங்கும் கிளைகள் கிடையாது, போன் 0, 00, 000!//

ஆமாம். நரி நாலு வார்த்தையில் கவிதை எழுதி இருக்காரு (பெரிய பாரதியார் பாட்டு எப்படி படிக்கனும் ராகம், தாளம் எல்லாம் சொல்லி இருக்காரு). இவரு அதுக்கு போன் நம்பர் சொல்ராரு. அடுத்து இரண்டு போரு சேர்ந்து டூயட் பாடுங்க. பதிவ பத்தி பேசுங்கட ப்ளடி பக்கர்ஸ்.

சரி மச்சி... இந்த விவிதபாரதி துபாய்ல வேலை செய்யாதா? யோ பன்னிகுட்டி நீ கொடுத்த நம்பர் சரி இல்லை வருது. கரைக்டா சொல்லு... :))////


வேறெங்கும் கிளைகள் கிடைதுன்னா அதை கவனிக்காமா அத விட்டுட்டு நம்பர் சரியா வரலை அது இதுன்னு என்னென்னமோ பேசிக்கிட்டெ போறே ராஸ்கல்....!

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய
//சரியா சொன்னீங்க... நீங்க சொன்னது போல வேலையில வர கோவம் ஆத்திரம் எல்லாமே இந்த பதிவுலகம் வந்தா காணாம போகுது... //

ஆமாம் மச்சி. என்னை டேமேஜர் திட்டினா நான் கடுப்பாகி கமெண்ட் போட வந்துடுவேன். அதை பார்த்து கடுப்பாகி டேமேஜர் இண்டிலில நகைச்சுவை படிக்க போனாரு. என் கிரகம் அவர் படிச்சது செல்வா பதிவு. அந்த கடுப்புல என்ன பார்த்து உன் டிப்பார்ட்மெண்ட் எதுன் டக்குனு சொல்லு கேட்டாரு மச்சி!! நானும் பத்து நிமிஷம் யோசிச்சி பார்த்தேன் ஒன்னும் சிக்கல... பிகர் (அடுத்த வருஷம் ரிட்டையர் ஆகுது) முன்னாடி ஒரே அசிங்கமா போச்சி. அந்த கோவத்துல தான் இந்த பதிவு.

TERROR-PANDIYAN(VAS) said...

@Ananthi
//கடைசி வரைக்கும் ஒரு டீ கூட வாங்கித் தரல போல, உங்க மாப்ஸ்.. :-))))

(கலாய்க்கிரதுன்னா இன்னான்னு, warrior ஐ கேளுங்கோ :-)) )//

நானே டீ கடைல டீ போட்ட பாத்திரம் கழுவி கீழ ஊத்தர தண்ணி வாங்கி லைட் டீ சொல்லி குடிச்சிட்டு இருக்கேன். இதுலா ஸ்ட்ராங்க டீ கேட்டா நான் எங்க போரது? இருந்தாலும் மாப்ஸ் கேட்டு இல்லை சொல்ல முடியுமா அதான் பஸ் ஸ்டண்டுல பிச்சை எடுக்க போறேன்... ஆமாம் உங்களுக்கு லைட் டீ வேனுமா?

அருண் பிரசாத் said...

சரியா சொன்ன மச்சி!

உன் பதிவையே கமெண்ட்ல ரிப்பீட்டரேன்....

அவன் அவன் படிச்சமா சந்தோஷ்மா சிரிச்சமானு இல்லாம....

சமுதாயத்துக்குமேல கோபம், நாட்டுமேல கோவம், எந்திரன்மேல கோவம், ம#$^^# மேல கோவம்னுட்டு, கோவம் வந்தா போய் பிரதமர் பாரு, கலைஞரை கேளு இல்லை தீக்குளிச்சி சாவு அதவிட்டுட்டு இங்க வந்து வீரவசனம் பேசுறானுங்க....

சரி நீங்க இப்படி எழுதி என கிழிச்சீங்க... அட்லீஸ்ட் எந்திரன் படத்தையாவது flop பண்ண வெக்க முடிஞ்சதா.... நாங்க கும்மறதால எத்தனை பேர் வாய்விட்டு சிரிச்சி கவலைய தற்காலிகமாவது மற்ந்து இருப்பாங்க....

மச்சி, எந்திரன்னை பாக்காது சொன்ன ஒரு நாதாரி, அவன் பேருகூட ஏதோ #%@சிஷ்யனாம் முதல் ஷோ பாத்துட்டு வந்து, படம் வெஸ்ட்னு சலம்புது... cheap publicity க்கு அலையதுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி நீ என்ன ஜாதிலே? மோகன் சீக்கிரம் வாயா போரடிக்குது!!!

Ananthi said...

////நானே டீ கடைல டீ போட்ட பாத்திரம் கழுவி கீழ ஊத்தர தண்ணி வாங்கி லைட் டீ சொல்லி குடிச்சிட்டு இருக்கேன். இதுலா ஸ்ட்ராங்க டீ கேட்டா நான் எங்க போரது? இருந்தாலும் மாப்ஸ் கேட்டு இல்லை சொல்ல முடியுமா அதான் பஸ் ஸ்டண்டுல பிச்சை எடுக்க போறேன்... ஆமாம் உங்களுக்கு லைட் டீ வேனுமா? ///


ஹா ஹா ஹா... அது சரி..
இவ்ளோ விளக்கமா சொன்ன பிறகு... எதுக்கு ரிஸ்கு...
நானும், உங்க மாப்ஸ் மாதிரி ஸ்ட்ராங் டீயே குடிக்கிறேன்.. :-)))

இம்சைஅரசன் பாபு.. said...

m

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா.நேத்து டாஸ்மாக் லீவ் ன்னு முந்த நாள் வாங்கின சரக்கை அடிச்சுட்டு படுத்தவன் தான்...இன்னைக்கு தான் கண்ணு முழிச்சேன் ..........(நம்ம லம் என்னைக்கு மக்கா கருத்து சொல்லிருகோம் )
me the last ல first

GSV said...

பங்காளி எல்லா ப்லோக்க்கும் கமெண்ட் போடுறனோ இல்லையோ இங்க வந்த மட்டும் கட்டயமா கமெண்ட் போடுவேன் பங்காளி !!! ஐ ஐ மீ தி லாஸ்ட்

TERROR-PANDIYAN(VAS) said...

@GSV

//GSV சொன்னது…
பங்காளி எல்லா ப்லோக்க்கும் கமெண்ட் போடுறனோ இல்லையோ இங்க வந்த மட்டும் கட்டயமா கமெண்ட் போடுவேன் பங்காளி !!! ஐ ஐ மீ தி லாஸ்ட்//

எலேய்!! நான் ஒருத்தன் இருக்கேன் இங்க...

GSV said...

பங்காளி பிடிச்சது பிடிக்காதது எது வேன்னும்னாலும் நீங்க எழுதலாம் பங்காளி...நாங்கலாம் இருக்கோம்

GSV said...

ஐ ஐ என் பங்காளி online la

TERROR-PANDIYAN(VAS) said...

@GSV

//பங்காளி பிடிச்சது பிடிக்காதது எது வேன்னும்னாலும் நீங்க எழுதலாம் பங்காளி...நாங்கலாம் இருக்கோம் //

ரைட்டு விடுங்க... நீங்க சொல்லிட்டிங்க இல்ல எல்லாரையும் போட்டு தள்ளிடலாம்.... :)))

TERROR-PANDIYAN(VAS) said...

@GSV

//ஐ ஐ என் பங்காளி online la//

இதை பாத்தா சந்தேஷம் மாதிரி தெரியலயே??? ஆடு சிக்கி இருக்கு வாங்க சொல்லி யாருக்கோ சிக்னல் கொடுக்கர மாதிரி இருக்கு....

GSV said...

//சமுதாயத்துக்குமேல கோபம், நாட்டுமேல கோவம், எந்திரன்மேல கோவம், ம#$^^# மேல கோவம்னுட்டு, கோவம் வந்தா போய் பிரதமர் பாரு, கலைஞரை கேளு இல்லை தீக்குளிச்சி சாவு அதவிட்டுட்டு இங்க வந்து வீரவசனம் பேசுறானுங்க....
// Ithukku mattum Repeatuuuuu

GSV said...

@எங்க பங்களிய கொவபடவைதவர்களுக்கு ஏலாய் நல்லவங்களா உங்களுக்கு வேனும்முனா 1000 HITS வரலாம் ஒரு இடுக்கைக்கு ...எங்க பங்களிக்கு மட்டும் தான்1000 கமெண்ட்ஸ் வரும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//மச்சி, எந்திரன்னை பாக்காது சொன்ன ஒரு நாதாரி, அவன் பேருகூட ஏதோ #%@சிஷ்யனாம் முதல் ஷோ பாத்துட்டு வந்து, படம் வெஸ்ட்னு சலம்புது... cheap publicity க்கு அலையதுங்க//

சைக்கிள் கேப்ல எவனையோ இழுத்து போட்டு அடிச்சிட்ட.... ஹா..ஹா... ரைட்டு விடு மச்சி.. நீ இருக்க அப்பொ எனக்கு என்ன கவலை...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//மச்சி நீ என்ன ஜாதிலே? மோகன் சீக்கிரம் வாயா போரடிக்குது!!!//

உனக்கு எத்தனை வாட்டி சொல்றது?? நீ கருப்பாடு, நான் வெள்ளை ஆடு...

TERROR-PANDIYAN(VAS) said...

@Ananthi

//ஹா ஹா ஹா... அது சரி..
இவ்ளோ விளக்கமா சொன்ன பிறகு... எதுக்கு ரிஸ்கு...
நானும், உங்க மாப்ஸ் மாதிரி ஸ்ட்ராங் டீயே குடிக்கிறேன்.. :-)))//

அப்பொ கொஞ்சம் இருங்க நான் லைட் டீயை ஜிம்முக்கு அனுப்பறேன்.. அது ஸ்ட்ராங் ஆனதும் குடிக்கலாம்....

TERROR-PANDIYAN(VAS) said...

இம்சைஅரசன்

// m //

N

//மக்கா.நேத்து டாஸ்மாக் லீவ் ன்னு முந்த நாள் வாங்கின சரக்கை அடிச்சுட்டு படுத்தவன் தான்...இன்னைக்கு தான் கண்ணு முழிச்சேன் ..........(நம்ம லம் என்னைக்கு மக்கா கருத்து சொல்லிருகோம் )
me the last ல first//

என்னாது சரக்கு அடிச்சிங்களா?? அப்பொ நீங்க கருத்து கண்டிப்பா சொல்லனும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@GSV

//@எங்க பங்களிய கொவபடவைதவர்களுக்கு ஏலாய் நல்லவங்களா உங்களுக்கு வேனும்முனா 1000 HITS வரலாம் ஒரு இடுக்கைக்கு ...எங்க பங்களிக்கு மட்டும் தான்1000 கமெண்ட்ஸ் வரும்//

அட பாவிகள!!! ஆள் ஆளுக்கு சவுண்டு சாஸ்தியா கொடுத்துட்டு போய்ட்டிங்க. நான் மட்டும் ப்ளாக்ல தனியா இருக்கேன்.. பயமா இருக்குயா....

(வருரது 10 போரு தலைக்கு 10 கமெண்ட் போட்டு சவுண்ட பாரு.... :))) )

TERROR-PANDIYAN(VAS) said...

GSV

//சமுதாயத்துக்குமேல கோபம், நாட்டுமேல கோவம், எந்திரன்மேல கோவம், ம#$^^# மேல கோவம்னுட்டு, கோவம் வந்தா போய் பிரதமர் பாரு, கலைஞரை கேளு இல்லை தீக்குளிச்சி சாவு அதவிட்டுட்டு இங்க வந்து வீரவசனம் பேசுறானுங்க....//

Ithukku mattum Repeatuuuuu //

எல்லா பயலும் கோவகாரங்கள இருக்கங்க!!!

GSV said...

AC ரூம்ல உட்கார்ந்துகிட்டு புரட்சி பண்ண நினைக்கும் பஞ்சயது பண்ணிகளே இதற்கு பதில் சொல்லுங்கள்....

1. என்னோடு நான்கு ஆண்டுகள் பொறியியல் படித்தாயா(என்ன படிசேன் கடவுல்லுகுதன் வெளிசம் )....
2. என்ன தான் பிகருக்கு லைன் போட்டாலும் பிகர் மாட்டாமல் தனியாக பீச் க்கு போனாய
3. ice cream மும் வலைக்காயி பச்சி தனியாக சப்பிடாய...
4. two wheeler la பிகரே இல்லாம தனியா சென்னையே சுற்றினாய
5. sathyam தியேட்டர்ல பிகரே இல்லாம பசங்க கூட பொய் படம் பார்த்தாயா
follow up

GSV said...

6. அரியர் வைத்து எழுதி யும் நன்கே ஆண்டுகளில் பொறியியல் பட்டம் வாங்கினாய
7. எப்படியோ படிப்பு முடித்து இந்தியா முழுவது வேலைகாக சுத்தி இருக்கியா
8. எப்படியோ MULTINATIONAL கம்பெனில வேலை பார்த்தும் பிகர் செட் ஆகாமல் தனியாக ONSITE பொய் இருக்காயா

GSV said...

9. இப்படி என்னை போல் தமிழே இல்லாத காட்டில் வேலை பார்த்தாயா !!!

மானம் உள்ளவனே நீ சொல்வதை நான் என் கேட்க வேண்டும் .....நான் Eப்படி தான் கும்மி அடிப்பேன் இங்க மட்டும்

GSV said...

மோதிவா, முட்டிவா,உருண்டு வா, ஓடிவா என் பங்காளி இருக்கிறன் ....பங்களிக்கு பங்காளி யும் இருக்கிறன் ...அந்த பயபுள்ள மட்டும் எப்பயாவது எஸ்கேப் ஆயிடும் அத அப்பறம் வசிக்கிறேன் .....
அது சரி பங்காளி இவ்வளவு பேசுன மே..எதோ "ஒரு சந்தேகம் " ன்னு சொன்னிங்களே அது என்ன ?

:):)

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

மங்குனி அமைசர் said...

சைலன்ஸ் ....... என்னப்பா நடக்குது இங்க? , ஒரே சத்தமா இருக்கு , நாளைக்கு எக்ஸ்சாமுக்கு படிக்க முடியல

ப.செல்வக்குமார் said...

//நாகரிக சீமான்களே, சீமாட்டிகளே நான் தற்குரிதான்//

நானும் தான் ..!!

ப.செல்வக்குமார் said...

விடுமுறை தினத்தன்று பதிவு பொட்டு என்னை கும்மியில் கலந்து கொ(ல்ல) முடியாமல் செஞ்சுட்டு கும்மி அடிக்கிறது நல்லதா கெட்டதாவாமா ..?

Gayathri said...

http://funaroundus.blogspot.com/2010/10/blog-post.ஹ்த்ம்ல்

தயவு செய்து வந்து படிங்க

TERROR-PANDIYAN(VAS) said...

@Gayathri

//http://funaroundus.blogspot.com/2010/10/blog-post.ஹ்த்ம்ல்

தயவு செய்து வந்து படிங்க//

கண்டிப்பா வரேன் சகோ

(லிங்க் தப்பா கொடுத்துட்டிங்க...

http://funaroundus.blogspot.com/2010/10/blog-post.html

)

Senthil Prabu said...

Dei Error pandi,

கொவபடதே சொல்ல ஒரு கோவமா ...
நீ நெஜமாவ நல்ல காமெடி பீஸ் தான் ..

karthikkumar said...

Admin, Auditor, HR, Majestic Mechanical Engineer, Bio Medical Engineer, Marine Engineer, System Admin, ப்ரோக்ராம்மர்//// என்ன தல இங்கிலீஷ் எல்லாம் பிச்சு உதறீங்க