Thursday, January 13, 2011

உண்மை சம்பவம்... :(

ராத்திரி 12.30 நான் சிவனேனு அருண் ப்ளாக்ல கமெண்ட் போட்டு விள்ளாடிட்டு இருந்தேன். அப்போ இந்த பன்னிகுட்டி சொல்லுச்சி சரி சரி போயி, தூங்கு, காலைல சிக்கிரம் எந்திரிச்சு ஆபிசு போக வேணாமா? நாளைக்காவது டைமுக்கு வரலேன்னா செருப்பால அடிப்பேன்னு பாசு இன்னிக்கு திட்டுனத மறந்துட்டியா? அப்படினு. அட நாமதான் தினம் அரை மணி நேரம் முன்னாடி ஆபீஸ் போய்டுவமே அதுவும் இல்லாம நல்ல வாய்ல சொன்னாலே பலிக்காது. இந்த பன்னிகுட்டி பல்லு விளக்கி 6 மாசமாச்சி இவன் சொல்லி எங்க பலிக்க போகுது  நினைச்சி தூங்கிட்டேன். ஆன பாருங்க இந்த பன்னிகுட்டி ஒரு கற்புகரசன் போல (நாய் சூனியம் வச்சிடான்).

காலயில கடமை தவறாம 5.20 அலாரம் அடிச்சிது. நான் தான் அது தலையில் தட்டிட்டு சும்மா கண்ண மூடினேன். திரும்ப கண்ண திறந்து பார்த்தா 5.50...அவ்வ்வ்வ் ஆபீஸ் வேன் சரியா 6.01 போய்டும் (அந்த டிரைவர் டிஜிட்டல் க்ளாக்கு பொறந்து இருப்பான் போல). பஸ் ஸ்டாப்  என் வீட்டுல இருந்து நடந்து போனா 15 நிமிஷம் ஓடுனா 10 நிமிஷம். பெட்ல இருந்து எழுந்து ட்ரெஸ் மாத்தி, ஷூ போட்டு, லிப்ட் வெய்ட் பண்ணி கிரவுன்ட் ப்ளோர் வர 5 நிமிஷம் (என்னாது குளிக்களையாவா.... யோ!! பல்லு விளக்கவே டைம் இல்லை). எப்படி பார்த்தாலும் 15 நிமிஷம் வேணும்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா வேலை ஆகாது. சரி பஸ்ல போலாம் முடிவு பண்ணேன். பஸ் எத்தனை மனிக்கு... 6.40. சரினு போய் ஹீட்டர் ஆன் பண்ணிட்டு வந்து மறுபடி படுத்தேன் (அட தண்ணி சூடாக 30 மினிட்ஸாகும்).... 6.20 அலாரம் வச்சிட்டுதான் படுத்தேன்.

என்ணடா ரொம்ப நேரமாகியும் அலாரம் அடிக்கில டவுட்ல டைம் பார்த்தா 6.30. அலாரம் எடுத்து பார்த்தா 6.20 வைக்கிறேன் சொல்லி 5.20 வச்சி இருக்கேன்... மறுபடியும் ரன்னிங் 2 மினிட்ஸ்ல குளிச்சி, 1 மினிட்ல பல்லு விளக்கிட்டு நேத்து போட்டு இருந்த ட்ரெஸ் எடுத்து மாட்டிட்டு ஷூ கூட போடாம ஓடி வந்து லிப்ட்க்கு வெயிட் பண்ணா அந்த லிப்ட் அப்போதான் எதோ கல்யாணமான புது பொண்ணு மாதிரி ஆடி அசஞ்சி வருது. ஒரு வழியா கீழ வந்து பார்த்தா நம்ம நல்ல நேரம் ஒரு டாக்ஸி வந்தது. உயிர் போனாலும் பரவாயில்லை சொல்லி டாக்ஸி குறுக்குல பாஞ்சி அவனை நிறுத்தி பஸ் ஸ்டேண்ட் சொன்னேன்.

அவன் ரொம்ப நல்லவன் போல நம்ம அவசரத்தை புரிஞ்சிட்டு வேகமா போக முயற்சி பண்ணினான். ஆனா நம்ம கெரகம் ட்ராபிக் ஜாம்.... மறுபடியும் சத்திய சோதனை. வேற ரூட் எடுக்க சொல்லி போன அங்க சிக்னல் போட்டான் (என்னால முடியலை). சிக்னல் க்ராஸ் பண்ணி பஸ் ஸ்டேன் வந்தா சரியா 6.40. டிக்கட் கவுண்டர் போகாம நேர பஸ் நிக்கற இடத்துக்கு போய் பஸ்ல ஏறி ஒரு 2 மின்ட்ஸ் ப்ளீஸ் சொல்லிட்டு வேகமா டிக்கட் கவுண்டர் வந்த இன்னைக்கு பார்த்து பெரிய வருசை. ஒரு வழியா டிக்கட் எடுத்து வந்து பார்த்தா பஸ் போய்டுத்து (இவனும் டிஜிட்டல் க்ளாக்கு பொறந்து இருப்பான் போல.. ராஸ்கல்).

அடுத்த பஸ் எப்போ கேட்டா 8 மணிக்கு சொல்றானுங்க. ஒன்னே கால் மணி நேரம் இருக்கு சரி லைட்டா சாப்பிடலாம் சொல்லி ஹோட்டல் போனேன். ஒரு ஸண்ட்விச் & டீ சொன்னேன். அவரு எதோ  திருப்பி திருப்பி கேக்கராரு டென்ஷன்ல ஒரு மண்ணும் புரியலை நானும் எனக்கு தெரிஞ்ச எல்லா ஹிந்தி வார்த்தை யோசிச்சி பார்த்துடேன். அவரு நாலாவது வாட்டி கேட்ட அப்புறம் தான் புரியுது என்ன சண்ட்விச் வேனும் சொல்லி மலையாலத்துல கேட்டு இருக்காரு… இன்ஸல்ட்… ஒரு சிக்கன் சண்ட்விச் சொல்லி வாங்கிட்டு (டீய மறக்கல). வெளிய  வந்து ஸண்ட்விச் வாயில வச்சா ரமேஷ் பதிவ படிச்ச மாதிரி வாந்தி வருது. பிலிப்பினோ சண்ட்விச்சா மாத்தி கொடுத்து இருக்கான். வேகாத சிக்கன் எவன் திங்கறது…. தூக்கி குப்பைல போடு. டீய கையில எடுத்தேன், ஒரே முச்சில குடிச்சி முடிச்சேன் (அடிக்கிற குளிர்ல அது ஆரிபோய் ஐந்து நிழிஷமாச்சி)

எடுத்தேன் லேப்டாப்ப பஸ் ஸ்டண்ட்ல உக்காந்து என் சோக கதைய பதிவ எழுத ஆரம்பிச்சேன். சோகத்தை எல்லாம் சொல்லிட்டே டைம் பார்த்தா 7.45.. பஸ் நிக்கிற இடத்துக்கு போக 5 நிமிஷம் வேனும் இந்த பஸ்ஸும் போனா சங்கு தான். அதனால அப்படியே அடிச்சவரை ஸேவ் பண்ணிட்டு… மீ ஏஸ்கேப்.

பஸ்ஸுல ஏறி உக்காந்தா அந்த டிரைவர் அடிக்கிற குளிர்ல ஏசிய போட்டு விட்டான் (பனி கரடிக்கு பொறந்து இருப்பான் போல).  ஒன்றை மணி நேரம் குளிர்ல பயணம் பண்னி ஒரு வழியா 8 மணி ஆபீஸ்க்கு 9.30 வந்து சேர்ந்தாச்சி.

டிஸ்கி : யோ பட்டா!! என் சோக கதை இது. மவனே இங்க வந்து நீ பாத்ரூம் போன கதை எல்லாம் எதுக்குடா சொல்ற அப்படினு கேவலமா திட்டின. அப்புறம் நாளக்கு ஹோட்டல் சீக்கிரம் சாத்தி அதனால நான் சாப்பாட்டுக்கு பட்ட கஷ்டத்த பதிவா போடுவேன்... முடியலை மச்சி... :)

.

Monday, January 10, 2011

2010 - சில நினைவுகள்

வணக்கம்!! அன்பு நண்பர் கணேஷ் அன்போடு கேட்டு கொண்டதாலும், இவன் எழுதி கிழிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான் என்று இம்சை பாபு அவர்கள் மிக பாசத்தோடு சொன்னதாலும். அன்பு மச்சான் அருண் நான் காலில் விழுந்து கேட்டு கொண்டதால் என் பெயரை பதிவில் சேர்த்து தொடர்பதிவு எழுத அழைத்ததாலும் நான் (லைட்டா) 2010 ஐ திரும்பி பார்க்கிறேன் (என்ன ஒரு மண்ணும் தெரியலை).

சொந்த வாழ்க்கையை பொருத்தவரை கடந்த வருடம் அதிகம் பாதிப்பை கொடுத்த ஒரு வருடம் என்று எதிர்மறையாக எடுக்காமல். அதிகம் கற்று கொடுத்த வருடம் என்று மகிழ்ச்சி கொள்கிறேன். எதிரியின் கையில் மின்னும் வாளில் முகம் பார்த்து ரசிக்க கற்றால் போர்களமும் புன்னகை தேசம்தான். அதை பத்தி சொன்னா உங்களுக்கு ஒரு மண்ணும் புரியாது. அதனால நாம் நேர ப்ளாக் பக்கம் போலாம்.

போன வருஷம் நான் செஞ்ச ஒரே உருப்படியான உருப்படாத விஷயம். இந்த ப்ளாகர் ஐ.டி கிரியேட் பண்ணது. நாட்ட விட்டு ஓடி போடா நாயே சொல்லி துரத்தி அடிச்சதும் முழு நேர நண்பனா இருந்தது லாப்டாப் தான். ஆனா இப்போ சொல்லி முடிக்கிறதுக்குள்ள செஞ்சி முடிக்க தம்பிகள் செல்வா, எஸ்.கே, பிரசாத், சௌந்தர். என்ன பிரச்சனை வந்தாலும் கூட நின்னு தோள் கொடுக்க மச்சன் அருண், மாப்ஸ் தேவா (ரொம்ப நல்லவரு கார் எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்து கூட்டி போய் அவரு செலவுல சாப்படு வாங்கி தருவாரு). என்கிட்ட திட்டு வாங்கவே பொறந்து இருக்க மானம் கெட்ட ஜென்மங்கள் (க்ளோஸ் ப்ரட்ஸ்பா...) பன்னிகுட்டி, ரமேஷ், நரி, வெறும்பய. அட்வைஸ் பண்ணி வழி காட்ட அன்பு அண்ணன் ஜெய்குமார், தல வெங்கட், மங்கு & இம்சையரன் பாபு.

நம்ம பாபு பத்தி சொல்லியே ஆகனும். பாவம் அவரு ரொம்ப நல்லவரு, அன்பானவர். பிக்க முடியாதது எல்லாம் பீசா அப்படினு நம்பி சாப்பிடரவரு. நான் பபுள்கம் வாங்கினா கூட அதுக்குள்ள பாம் இருக்குமா பார்த்து சாப்பிடறவன். என்கூட நட்ப மெயிண்டேன் பண்ண அவருபடற பாடு இருக்கே..... :) . அப்புறம் உடன் பிறவா சகோதரிகள் திருமதி தேவா, திருமதி அருண், திருமதி வெங்கட். நானும் நானும் சொல்லி சொல்ற பேச்ச கேக்காம திறியற தங்கச்சி சுபத்ரா. ஆடு அருக்கர அப்போ ஏன் மச்சி என்னை கூப்பிடல சொல்லி என்னை அருக்க வர பட்டாபட்டி. அடேங்கப்பா பெரிய குடும்பம்பா...

இது இல்லாம நம்ம வேண்டபட்ட விரோதிங்க அனு, ரசிகன், பெ.சொ.வி,  கார்த்தி. நண்பர்கள் மாதவன், சமீர், நாகராஜசோழன், மாலுமி , ஷாலினி, அக்‌ஷயா (தேவா மகள்), ஹரினி (பாபு மகள்) இவங்க எல்லாருக்கும் நன்றி! முக்கியமா எனக்கு நல்ல பொழுது போக காரணமா இருந்த நானும் ரவுடி நானும் ரவுடி சொல்லி எதாவது வம்பு பண்ற பிரபலங்களுக்கும் நன்றி!!

இப்போ ஏன் இதை எல்லாம் சொல்லி எங்க உயிர எடுக்கர கேக்காதிங்க. நான் போன வருஷம் சாதிச்ச ஒரே நல்லா காரியம் இவ்வளவு நண்பர்கள் கிடைச்சது தான். இன்னும் பல பேரு இருக்காங்க ஆனா அவங்க பேரை எல்லம் இங்க சொன்னா இங்க இடம் பத்தாது (அட பாலிடிக்ஸ் வரும்ங்க.. சொன்னா புரிஞ்சிக்க மாட்டிங்களே)

சந்தோஷமான விஷயம் சொன்னா போரம் ஆரம்பிச்சி எங்களுக்குள்ளே அடிச்சிகிறது. சோகமான விஷயம் சொன்னா அடிச்சிகிட்டு இன்னும் எல்லா பயலும் உயிரோட இருக்கது. இந்த தொடர்பதிவின் வழியாக நான் போன வருடம் புண்ணியமா ஒரு ஆணியும் புடுங்கவில்லை என்று எனக்கு உணர்த்திய நண்ப துரோகிகளுக்கு நன்றி சொல்லி. இதை தொடர்ந்து எழுத

மானம், ரோஷம், சூடு சொரனை எதுவும் இல்லாத தில்லு முல்லு மற்றும் ப்ளாக் பிஸ்தா பட்டாபட்டி (கொய்யால எதாவது திட்டி பதிவு போட்ட அந்த ஆடு அருக்கர அப்போ உன்னை கூட்டி போக மாட்டேன்) அழைக்கிறேன்.

.