Sunday, May 29, 2011

கஷ்ட்டமர் கேர்


உலகத்திலே மிக சிறந்த பேங்க், தொலைபேசி நிறுவனம் எல்லாம் இங்கதான் இருக்குப்பா.. அதுலையும் அவங்க பன்ற வாடிக்கையாளர் சேவை… சான்ஸே இல்லை ஒண்ணு நீங்க சாகணும் இல்லை அவங்க பேங்க்க விட்டு போகணும். அதுவரைவிட மாட்டாங்க.

பேங்க்குக்குள்ள போனதும் கஸ்டமர்கேர் அப்படினு சொல்லிகிட்டு ஒரு அம்மணி உக்காந்து இருக்கும் . இவங்க வேலை, தப்பி தவறி எவனாவதுஉள்ள வந்தா அவனை சிரிச்சிகிட்டே செருப்பால அடிக்கிறது. அடிச்சி தொரத்திட்டு மறுபடியும் வெட்டியா உக்காந்து கம்ப்யூட்டர்ல நோண்டரது.

மேடம்! இந்த சந்தேகத்தைகொஞ்சம் விளக்க முடியுமா? சாரி சார் இதை நீங்க கால் செண்டர்ல தான் கேக்கனும். அவங்க லைன் பிஸியாவே இருக்கு. இல்லையே இப்போ பாருங்க அப்படினு சொல்லிட்டு அந்த அம்மனி முயற்சிபண்ணுச்சி 15 நிமிஷ‌ம் ஆச்சி அப்பவும் லைன் கிடைக்கவில்லை. பாத்தீங்களா இப்போ நான் என்ன செய்யரது கேட்டா சாரி சார் அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது அப்படினு ஒரு பதில்.

இதை சொல்லவா உன்னை அங்க சம்பளம் கொடுத்து உக்காரவச்சி இருக்கான்? இதை சொல்லவா காலைல மேக்கப் பண்ணிட்டு கிளம்பி வந்து உக்காந்து இருக்க? வாடிக்கையாளர் பிரச்சனை தீர்க்க முயற்சி பண்ணுங்க.. வாடிக்கையாளர தீர்த்து கட்ட முயற்சி பண்ணாதிங்க.

சரி இதுங்க கிட்ட பேசினா வேலைக்கு ஆகாது சொல்லி உன் மேனேஜர் மடையனை கூப்பிடு சொன்னா அவரு வருவாரு எதோ மொத்த துபாய் விலைக்கு வாங்கி போட்டவரு மாதிரி. என்ன சார் பிரச்சனை கேப்பாரு. இதாண்டா நாயே அப்படினு விளக்கினா சார் இதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது அப்படினு பதில் சொல்லுவாரு. சரி நான் புகார் பண்ணனும் இ-மெயில் ஐ.டி கொடு அப்படினு கேட்டா அதை கால் செண்டர்ல கேளுங்க சார் அப்படினு பதில் சொல்லுது அந்த மேனேஜர் மடையன். இப்போ இப்படி பேசுவானுங்க. நாம இதுங்க தொல்லையே வேண்டாம் அப்படினு அக்கவுண்ட் க்ளோஸ் பண்ணிட்டு போனா அப்போ வந்து ஆள்மாத்தி ஆள் பிச்சை எடுப்பானுங்க. 

இவனுங்க நோகாம ஏ.சி.ல உங்காந்து நோம்பு கும்பிட எவனோ வந்து நம்ம கிட்ட கெஞ்சிகிட்டு நிப்பான். இதுங்க இப்படியே ஒரு ஒரு கஸ்டமரா  துரத்திவிட்டுஅப்புறம் வருமானம் இல்லைனு ஓனர் கடைய மூடினதும் அடுத்த கடைய பார்த்து போய் மானம், ரோஷம்,வெக்கம் எதுவுமே இல்லாம எனக்கு கஸ்டமர் கேர்ல 10 வருஷம் அனுபவம் அப்படினு சொல்லி சம்பளத்துக்குபேரம் பேசுங்க. இதுங்க எல்லாம் எப்போ தான் திருந்துமோ…. :(

.

27 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//நல்லவன நடிக்கிறது ரொம்ப கஷ்டம்பா.. :)//

அடிங்...

கெட்டவனா நடிக்கிறதும் ரொம்ப கஷ்டம் சாமி...!

Anonymous said...

பின்பற்றுபவர்கள் (104)

தக்காளி நூத்திலா ..,விட்ரா விட்ரா சூனா பானா

Anonymous said...

என்ன கன்றாவிடா டா இது

Anonymous said...

என்னமோ பண்ணி தொலை ..,

Mohamed Faaique said...

விடுங்க பாஸ்.... வெளி நாட்டு வாழ்க்கை’னா கைல மாட்டுரவனெல்லாம் கும்மு கும்ம்மு’னு கும்மத்தான் செய்வான்

சேலம் தேவா said...

ரொம்ப "கஷ்ட"ப்பட்ருப்பீங்க போலருக்கு..!! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உனக்கு பேங்க்ல எல்லாம் அக்கவுன்ட் இருக்கா. சொல்லவே இல்லை?

நாகராஜசோழன் MA said...

நண்பரே உங்கள் பதிவு மிகவும் அருமையாய் இருக்கிறது.

மாலுமி said...

டெரர்....ஏன் உனக்கு கஸ்டமர் கேர் பொண்ணு மேல கோவம்????
நீ கரெக்ட் பன்னி வெச்ச பொண்ணு உனக்கு அல்வா கொடுத்துட்டு போய்டுச்ச????

இம்சைஅரசன் பாபு.. said...
This comment has been removed by the author.
இம்சைஅரசன் பாபு.. said...

பேங்க் வாசல போய் பிச்சை எடுக்குற பயலுக்கு பேச்ச பாரு ..பேச்ச ..டேய் வெயில்ன்னு உள்ள போய் A/c ல உட்ட்கார போனா ..பேசாம இருக்கணும் ..சரியா

இம்சைஅரசன் பாபு.. said...

// தப்பி தவறி எவனாவதுஉள்ள வந்தா அவனை சிரிச்சிகிட்டே செருப்பால அடிக்கிறது. //

நீ கைய புடிச்சு இழுத்து அடி வாங்கி இருப்ப ...வலது கன்னமா ..இடது கன்னமா

வைகை said...

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
உனக்கு பேங்க்ல எல்லாம் அக்கவுன்ட் இருக்கா. சொல்லவே இல்லை?//

சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்ப?

வைகை said...

அடிச்சி தொரத்திட்டு மறுபடியும் வெட்டியா உக்காந்து கம்ப்யூட்டர்ல நோண்டரது//

அடிச்சி தொறதுனதுக்கு பிறகும் அந்த புள்ள என்ன செய்யுதுன்னு உக்காந்து பார்த்தியா மச்சி?

வைகை said...

அவங்க லைன் பிஸியாவே இருக்கு. //

நம்ம மாணவன்தான் பேசிகிட்டு இருந்திருப்பான் மச்சி :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவமே..... ஒரு கஷ்டமே கஷ்டத்த பத்தி பொலம்புதே? என்ன ஒலகமடா......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அதுலையும் அவங்க பன்ற வாடிக்கையாளர் சேவை… சான்ஸே இல்லை ஒண்ணு நீங்க சாகணும் இல்லை அவங்க பேங்க்க விட்டு போகணும். //////

அவனுங்க பேங்கவிட்டு போனாமட்டும்? அடுத்தவன் வந்து அதே சேவைய பண்ணமாட்டானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பேங்க்குக்குள்ள போனதும் கஸ்டமர்கேர் அப்படினு சொல்லிகிட்டு ஒரு அம்மணி உக்காந்து இருக்கும் . //////

அம்மிணிக இருக்கறதுனாலதான் இதுவரைக்குமாவது போறானுக, நரி மாதிரி ஆளுகள அங்க உக்கார வெச்சிருந்தா எப்படி இருக்கும், கொஞ்சம் யோசிச்சு பாரு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சம்பளம் கொடுத்து உக்காரவச்சி இருக்கான்? இதை சொல்லவா காலைல மேக்கப் பண்ணிட்டு கிளம்பி வந்து உக்காந்து இருக்க? ///////

என்ன கேள்வி இது, அவங்க மேக்கப் போட்டுட்டு வர்ரதுக்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கும் அதெல்லாம் உனக்கு தேவையா?

அருண் பிரசாத் said...

மச்சி என்னதான் மச்சி உன் பிரச்சனை?

Veliyoorkaran said...

ஏண்டா இப்புடி கொப்புளுச்சு கொந்தளிக்கிற...! நல்லா இருக்கே உன் நியாயம்..உன்னைய மாதிரி டெரரிஸ்ட்ட எல்லாம் கஸ்டமர் கேர்ல இருக்கற பிகரு மடில தூக்கி வெச்சு சூ சூ சூன்னு கொஞ்சுமா அப்பறம்..! இருடி..நீ மருக்கா அங்க போனா, உன்ன போலீஸ்ல புடிச்சு குடுக்க சொல்றேன்..! :)

வெங்கட் said...

@ அருண்.,

// மச்சி என்னதான் மச்சி உன் பிரச்சனை? //

ஆமா மச்சி.. இவருகிட்ட சொல்லு..
இவரு பெரிய உலக வங்கி கவர்னரு..
அஞ்சே நிமிஷத்துல பிரச்சினைய
தீர்த்துடுவாரு..!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// உனக்கு பேங்க்ல எல்லாம் அக்கவுன்ட்
இருக்கா. சொல்லவே இல்லை? //

ஆபீஸ்க்கு பக்கத்துல இருக்குற
கையேந்தி பவன்ல கூட தான்
உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கு..
அதையெல்லாம் நீங்க சொன்னீங்களா
ரமேஷூ..!

Jey said...

எங்க போனாலும் உன்னை மட்டும் ஏன் ராசா.. இப்படி &^%$#*@%^ அடிக்கிறாங்க...., ச்சோ பாவம்..

பாரதசாரி said...

ரகளை பாஸ்:-) ஆன வலுவா எங்கயோ அனுபவச்சீங்களோ? :-(

ராஜி said...

செமயா எங்கியோ வாங்கியிருக்கீங்க போல.