Friday, August 17, 2012

வாழ்கை வாழ்வதற்கே


மக்களே!! ஊர்ல எவனாவது உங்களை பார்த்து தண்ணி அடிக்காத, தம் அடிக்காத, பொண்ணுங்க பின்னாடி சுத்தாத இப்படி எல்லாம் அட்வைஸ் பண்ணா காறி மூஞ்சி மேலே துப்பிட்டு போய் உங்க வேலையை பாருங்க உங்க அப்பா சொன்னா மட்டும் காதில் வாங்காம போய்டுங்க. இல்லைனா அடுத்த வேலை சோறு கிடைக்காது.

ஒரு அனுபவபட்ட அறிவாளி சொல்ரேன். இருப்பது ஒரு வாழ்கை. அதை சந்தோஷமா வாழுங்க. எல்லாம் அளவோட இருக்கவரை எதுவும் தப்பில்லை. மாசத்துக்கு ஒரு நாள் மூச்சி முட்ட குடிச்சிட்டு வாந்தி எடு. அப்போ அப்போ ஒரு தம் அடி. எவ்வளவு பொண்ணுங்க கூட சுத்த முடியுமோ சுத்து. ஆனா எதிலும் அடிமையாகிடாதிங்க. 

இதை உன் கேர்ள் பிரண்டுகிட்ட சொன்னா அவன் கிடக்கரான் பொறுக்கி. நீ தான் கிரேட் அப்படினு சொல்லுவாங்க. ஆனா நாளைக்கு என்ன வேணா நடக்கலாம். ”சாரி டா எங்க வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்துக்கலை” அப்படினு சொல்லிட்டு அந்த புள்ளை ஒரு நல்ல லைப்ல செட்டிலான பையனா பார்த்து கட்டிகிட்டு (நல்லா கவனி மகனே அவன் லைப்ல செட்டிலாகி இருக்கனும் அதான் முக்கியம்.) அதுக்கு அடுத்த நாள் “டேக் கேர் டா உன் நல்ல மனசுக்கு நல்ல பொண்ணு கிடைப்பா. ஐயம் அன்லக்கி” அப்படினு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட்டு அதோட உன் அத்தியாயத்த மூடி வச்சிட்டு ஹனி மூன் போய்டுவா. நீ அந்த எஸ்.எம்.எஸ் பார்த்து பார்த்து புல்லரிச்சி போவ. அவ ஒரு புள்ளையை பெத்துட்டு வந்து “சம் வாட் லைப் கோயிங் டா. ஸ்டில் ஐ ரிமம்பர் யூ” அப்படினு அடுத்த எஸ்.எம்.எஸ் போடுவா. நீ அதை வச்சி பார்த்து பார்த்து அடுத்த நாலு வருஷம் நாசமா போவ.

என்னைக்காவது ஒரு நாள் அந்த புள்ளை வீட்டுகாரன் மூக்கு முட்ட குடிக்கிரத பார்த்துட்டு என்ன உன் புருஷன் குடிக்கிராரு. உனக்கு தான் தண்ணி அடிச்சா பிடிக்காதே கேட்டு பாரு. "ச்சீ ச்சீ நீ நினைக்கிர மாதிரி எல்லாம் இல்லைடா அவரு ஒரு Social Drinker" அப்படினு பதில் வரும். அப்போ தான் நீ லைட்டா யோசிப்ப “நாமளும் அப்போ அப்போ லைட்டா குடிச்சி இருக்கலாமோ” அப்படினு. 

இது சும்மா பிகரை வச்சி சொன்ன உதாரணம் (அப்போ தான் உன் மண்டையில் சட்டுனு உரைக்கும்). நண்பர்கள், சொந்தகாரன், மேனேஜர், அண்ணன், தம்பி இப்படி உறவு மாறலாம் ஆனால் கடைசியில் உண்மை ஒன்னு தான் அதை கீழ டிஸ்கியில் சொல்லி இருக்கேன் பாரு.

டிஸ்கி : நல்லவன் பெயர் வாங்கி நாக்கு தான் வழிக்கனும் மச்சி!!!

உண்மையான டிஸ்கி : அட தூக்கம் வரலைங்க. இதை எல்லாம் சீரியஸா படிச்சிகிட்டு. இப்போ பாருங்க எவனாவது ஒரு கேனை வந்து எங்கையோ செம்மையா வாங்கி இருக்காண்டானு கமெண்ட் போடுவான். ஆனா இது எல்லாம் நாட்டுல நடக்கர நெசம்ங்க.. :)

.

25 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Please sethukking this one to Tanjavoor kalvettu

வைகை said...

வாழ்க்கை வாழ்வதற்கே/////

இந்த மாதிரி பதிவு எல்லாம் படிச்சா நாங்க எங்க வாழ்றது? :-)

பட்டிகாட்டான் Jey said...

வழக்கம்போல் மொக்கைபோட்டு இருப்ப்பாய் என்று உறுதியாக நம்புவததால், பதிவை படிக்கவில்லயென்ற தகவலை இந்த பின்னூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பல பதிவுகள் போட வாழ்த்துக்கள்.

நன்றி.வணக்கம்.

இம்சைஅரசன் பாபு.. said...

அருமை ..உங்கள் எழுத்து நடையில் மாற்றம் தெரிகிறது ..தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

பட்டிகாட்டான் Jey said...

//உங்கள் எழுத்து நடையில் மாற்றம் தெரிகிறது//

இதுக்கு முன்னாடி நேரா எழுதுனவன் இப்ப கோனையா எழுதிட்டானா???.

ங்கொய்யா உண்மைனு நம்பி அடுத்த பதிவ போட்டாலும் போட்ருவாண்டா...

NAAI-NAKKS said...

இம்சைஅரசன் பாபு.. said...
அருமை ..உங்கள் எழுத்து நடையில் மாற்றம் தெரிகிறது ..தொடர்ந்து எழுத வாழ்த்துகள்/////

பட்டிகாட்டான் Jey said...
//உங்கள் எழுத்து நடையில் மாற்றம் தெரிகிறது//

இதுக்கு முன்னாடி நேரா எழுதுனவன் இப்ப கோனையா எழுதிட்டானா???.

ங்கொய்யா உண்மைனு நம்பி அடுத்த பதிவ போட்டாலும் போட்ருவாண்டா.../////

அட நம்ம பாண்டி....இதிகாசம் எழுதுறார்...
உங்களுக்கு எல்லாம் பொறாமை....

நீங்க தொடருங்க பாண்டி....

மாலுமி said...

இப்போ நான் என்ன பண்ணனும் ?

மாலுமி said...

/// "வாழ்கை வாழ்வதற்கே" ///

அப்போ வாழ்வதுகு என்ன பண்ணனும் ?

மாலுமி said...

/// "வாழ்கை வாழ்வதற்கே" ///

அப்போ வாழ்வதுகு என்ன பண்ணனும் ?

அருண் பிரசாத் said...

ஏதோ உள்குத்து இருக்கற மாதிரியே தெரியுதே... நம்மளைனா நேராவே திட்டுவானே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சார் இங்க நான் போட்ட கமெண்ட்டு எங்கே சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அப்போ அப்போ ஒரு தம் அடி. எவ்வளவு பொண்ணுங்க கூட சுத்த முடியுமோ சுத்து. /////

தம்மெல்லாம் ஓகே, இந்த பொண்ணுங்க மேட்டர்தான் செட்டாக மாட்டேங்கிது, கொஞ்சம் ரெடி பண்ணி கொடுங்க சார்......

இப்படிக்கு
கொசக்சி பசப்புகல்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அதுக்கு அடுத்த நாள் “டேக் கேர் டா உன் நல்ல மனசுக்கு நல்ல பொண்ணு கிடைப்பா. ஐயம் அன்லக்கி” அப்படினு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட்டு அதோட உன் அத்தியாயத்த மூடி வச்சிட்டு ஹனி மூன் போய்டுவா. //////

இந்தப்பன்னாடையே அத எப்படி கழட்டிவிடுறதுன்னு யோசிச்சிட்டு இருந்திருக்கும்...... எஸ்.எச்.எஸ்ஸ படிச்சிட்டு ஜாலியா அடுத்த பிகரை தேடி கெளம்பிடும்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///“சம் வாட் லைப் கோயிங் டா. ஸ்டில் ஐ ரிமம்பர் யூ” அப்படினு அடுத்த எஸ்.எம்.எஸ் போடுவா. நீ அதை வச்சி பார்த்து பார்த்து அடுத்த நாலு வருஷம் நாசமா போவ. /////

போடாங்.... அந்த எஸ்.எம்.எஸ்ச பாத்துட்டு மறுபடி ஏதாச்சும் கெடைக்குமான்னு கொக்கி போட்டுட்டு இருப்பான்...... இந்தப் பன்னாடை.... ஓ அது நீதானே... சரி விடு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"ச்சீ ச்சீ நீ நினைக்கிர மாதிரி எல்லாம் இல்லைடா அவரு ஒரு Social Drinker" அப்படினு பதில் வரும். அப்போ தான் நீ லைட்டா யோசிப்ப “நாமளும் அப்போ அப்போ லைட்டா குடிச்சி இருக்கலாமோ” அப்படினு. //////

லைட்டா குடிக்கிறதுன்னா? லைட்ட போட்டுட்டு குடிக்கிறதா? தக்காளி, அடிக்கிறது கண்ணுமண்ணு தெரியாம..... இதுல லைட்டு வேற.. ஹெவி வேற...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இது சும்மா பிகரை வச்சி சொன்ன உதாரணம் (அப்போ தான் உன் மண்டையில் சட்டுனு உரைக்கும்). நண்பர்கள், சொந்தகாரன், மேனேஜர், அண்ணன், தம்பி இப்படி உறவு மாறலாம் //////

மேனேஜர்ர்ர்ர்ர்...... இப்ப புரியுதா இந்தப் பன்னாட நடுராத்திரி உக்காந்து இப்படி பதிவு ஏன் போட்டிருக்குன்னு? போய் வேலய பாருங்கய்யா.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////உண்மையான டிஸ்கி : ////

அது என்ன உண்மையான டிஸ்கி? நீ போடுறது எல்லாமே டுபாக்கூர் டிஸ்கிதான்.....!

வெங்கட் said...

கடினமான வாழ்க்கை தத்துவத்தை
ஒரு சின்ன பதிவுன் மூலம் விளக்கியதற்கு ஒரு ஹாட்ஸ் ஆப்..

:)

மச்சி ஓபன் தி பாட்டில்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எங்கையோ செம்மையா வாங்கி இருக்காண்டா!!!!!!


:-))))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்லவன் பெயர் வாங்கி நாக்கு தான் வழிக்கனும் மச்சி!!!

//

யார் நாக்கை சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
நல்லவன் பெயர் வாங்கி நாக்கு தான் வழிக்கனும் மச்சி!!!

//

யார் நாக்கை சார்?//////

கெட்டவனுங்க நாக்கையா இருக்கும்....!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...


@பன்னிக்குட்டி ராம்சாமி said...
யார் நாக்கை சார்?//////

கெட்டவனுங்க நாக்கையா இருக்கும்....!
//

ஓய்... டெரர் எதுக்குய்யா.. கெட்டவன் நாக்கை வழிக்கனும்..?

வேண்டுதலா?


Babu (பாபு நடராஜன்} said...

நல்லாயிருக்கே...

vinu said...

me the 25thuuuuuuuuuuu