Friday, March 08, 2013

நீ தானே என் பொன் வசந்தம்..


மானம் கெட்ட மச்சான் வைகை சரியாதாம்லே சொல்லி இருக்கான். நீ தானே என் பொன் வசந்தம் நைஸ் மூவி. இனையத்தில் விமர்சனம் எழுதர காமன் மேன்ஸ் தான் தப்பா சொல்லிட்டாங்க. இவங்க பேச்சை நம்பி டவுன்லோட் செய்து இரண்டு வாரமா (அருவை படம்னு) பாக்காம இருந்தேன். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை அப்படி புகழ்ந்தாங்க.. தியேட்டர் போய் தலைவலி வந்தது தான் மிச்சம். இவங்க பேச்சை நம்பி இனி எதுவும் செய்ய முடியாது போல. சமந்தாவுக்கு பதில் வேர யாரையாவது ஹீரோயினா போட்டு இருக்கலாம். சமந்தா மிஸ் பண்ணத அவங்களுக்கு டப்பிங் பேசின பொண்ணு சரி செய்து இருக்கு. வாய்ஸ்ல என்ன ஒரு எக்ஸ்பிரஷன்!!! ஜீவா கேரக்டர்ல சுத்தமா அழுத்தமில்லை. காதலை விட குடும்பம் முக்கியம் அப்படினு அவரு முடிவு செய்து படிப்பில் கவனம் செலுத்தரதா வர இடம் உவ்வ்வ்வே.... (சரியாக சொல்லபடவில்லை). அதே மாதிரி ஓரு ஓரு முறையும் வேண்டாம் போய்டு, விட்டுடு சொன்னதும் அதோட ஹீரோ ஒரு வார்த்தை பேசாம விட்டுடராரு.. அது டோட்டல் மொக்கை. க்ளைமாக்ஸ்ல கல்யாணத்தை விட்டு வர சீன்ல மட்டும் தான் ஈரோவுக்கும் ஓவர் லவ் மாதிரி காட்ராங்க. மற்றபடி கடமைக்கு லவ் பண்ற ஒரு பையனை சின்ஸியர லவ் பண்ர ஒரு பொண்ணோட கதை தான் “நீ தானே என் பொன் வசந்தம்”. 

தம்பி கௌதம் நல்லா தான் படம் எடுத்து இருக்க வாழ்த்துகள். ஆனா அந்த சமோசா வாங்கர சீன்ல “நான் தான் அதிகமா ஆர்டர் பண்ணேன். நான் பில் கொடுக்கரேன்” ஹீரோயின் சொன்னதும் ”நோ நோ நான் தான் பில் கொடுப்பேன். இன்னைக்கு மட்டுமில்லை இனி என்னைக்குமே அப்படிதான்” அப்படினு ஹீரோ சொன்னதும் ஹீரோயின் உருகி போர மாதிரியும் உடனே ஒரு சாங் வர மாதிரியும் இருக்க சீனை சந்தானம் & அந்த குண்டு பொண்ணுக்கு கொடுத்து இருக்கலாம் நல்ல காமடியா வந்து இருக்கும். ஓருவேளை Hereafter I will take care about you அப்படினு ஹீரோ சொல்ரதா ஏதாவது இலக்கியமா மீனிங் வச்சி இருப்பியோ என்னவோபா அது என் மண்டைக்கு உரைக்கவில்லை.. :) (ஏலேய் மக்கா! அந்த சீனை பார்த்தா பில் கொடுக்கரவன் பின்னாடி தான் பொண்ணுங்க பல்ல இளிச்சிட்டு போகும் எல்லாரும் சொல்ரத நிஜமாக்கர மாதிரியே இருக்கு. கேரக்டர் ஸ்பாயில் ஆகாம இருக்க உனக்காக நான் சப்ஸ்டிடியூட் போட்டு ரோசிச்சி இருக்கேன்)

அதுக்கு பதில் அந்த மொட்டை மாடியில் ஹீரோயின் பேசர சீனும், அந்த சுனாமி கிராமத்தில் பேசர சீனும் நல்லா பண்ணி இருக்கபா வாழ்த்துகள்.. :). இது குஷி மாதிரி இருந்தாலும் வேறு தளத்தில் பயணிக்கிரது (நானும் இலக்கியவாதி ஆகிட்டேன்). அதில் ஹீரோயினோட ஈகோ தான் மெயின் ஆனா இதில் ஹீரோயின் சின்ஸியரா லவ் பண்றாங்கபா அதனால அவங்களுக்கு கோபப்பட உரிமை இருக்கு. மொத்ததில் படம் எனக்கு பிடிச்சி இருக்கு. டாட்

கடைசியில் என்னையும் சினிமா விமர்சனம் எழுத வச்சிட்டிங்களே....

.

17 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

//கடைசியில் என்னையும் சினிமா விமர்சனம் எழுத வச்சிட்டிங்களே....
//

சார் நீங்க நல்லவரா? கெட்டவரா ?....

மாலுமி said...

/// கடைசியில் என்னையும் சினிமா விமர்சனம் எழுத வச்சிட்டிங்களே.... ///
இதுக்கு முன்னாடி பிட்டு படம் விமர்சனம் எழுதிட்டு இருந்தியா ??? ......... ராஸ்கல் :)))

அருண் பிரசாத் said...

ஏன் மச்சி ராத்திரி ரொம்ப நேரம் தூக்கம் வரலையா? உடம்பு சரியில்லையா? பாரு.... சித்த பிரம்மை பிடிச்சி இருக்கு..... மந்திரிச்ச தாயத்து கட்டினா எல்லாம் சரியாகிடும் விடு ... கவலை படாத

அருண் பிரசாத் said...

தூ.... இதுக்கு ஒரு follow up வேற போட வேண்டி இருக்குது

மாணவன் said...

//சமந்தா மிஸ் பண்ணத அவங்களுக்கு டப்பிங் பேசின பொண்ணு சரி செய்து இருக்கு. வாய்ஸ்ல என்ன ஒரு எக்ஸ்பிரஷன்!!!///

FYI:
டப்பிங் பேசுனதே சமந்தாதான் தல.....இந்த படத்துல சமந்தா சொந்த வாய்ஸ்ல பேசி நடிச்சிருக்காப்டி.... :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா இவரு பெரிய கெவர்னரு...... விமரசனம்லாம் எழுத மாட்டேன்னு வைராக்கியமா இருந்தவர எழுத இப்போ வெச்சிருக்காங்க...... படுவா அஞ்சரைக்குள்ள வண்டி படத்த பாத்துட்டு அஞ்சு நாள் கக்கூசுக்குள்ள இருந்து வெளில வராத பயதானே நீ.... பேசுறாம்பாரு பேச்சு........ ராஸ்கல்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மாணவன் said...
//சமந்தா மிஸ் பண்ணத அவங்களுக்கு டப்பிங் பேசின பொண்ணு சரி செய்து இருக்கு. வாய்ஸ்ல என்ன ஒரு எக்ஸ்பிரஷன்!!!///

FYI:
டப்பிங் பேசுனதே சமந்தாதான் தல.....இந்த படத்துல சமந்தா சொந்த வாய்ஸ்ல பேசி நடிச்சிருக்காப்டி.... :-)/////

ஆமா இவரு எழுதுன விமர்சனத்துக்கு ஒருத்தரு கரெக்சன் வேற சொல்ல வந்துட்டாரு....... போங்கடா டேய்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அருண் பிரசாத் said...
தூ.... இதுக்கு ஒரு follow up வேற போட வேண்டி இருக்குது/////

இவன எப்படிலாம் துப்புறானுங்கன்னு பார்க்க இப்படிலாம் லோல் பட வேண்டி இருக்குது.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// இம்சைஅரசன் பாபு.. said...
//கடைசியில் என்னையும் சினிமா விமர்சனம் எழுத வச்சிட்டிங்களே....
//

சார் நீங்க நல்லவரா? கெட்டவரா ?..../////

ஏன் நல்லவர்னா அஞ்சு ஏக்கர் நஞ்சைய எழுதி வெக்க போறீங்களா சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////காதலை விட குடும்பம் முக்கியம் அப்படினு அவரு முடிவு செய்து படிப்பில் கவனம் செலுத்தரதா வர இடம் உவ்வ்வ்வே.... (சரியாக சொல்லபடவில்லை). /////

அப்போ காதலிக்கிறானுங்களோ இல்லியோ, எவனும் ஒழுங்கா படிக்கவே கூடாதுன்னு சொல்ல வர்ர.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை அப்படி புகழ்ந்தாங்க.. தியேட்டர் போய் தலைவலி வந்தது தான் மிச்சம். ////

ஏன் தியேட்டர்ல உன்னைய உள்ளே விடலையா?

Madhavan Srinivasagopalan said...

பயனுள்ள பதிவு..
இதுபோலவே (இதையே அல்ல ) அடிக்கடி பதிவு செய்யவும்.

வைகை said...

சமந்தாவுக்கு பதில் வேர யாரையாவது ஹீரோயினா போட்டு இருக்கலாம். சமந்தா மிஸ் பண்ணத அவங்களுக்கு டப்பிங் பேசின பொண்ணு சரி செய்து இருக்கு. வாய்ஸ்ல என்ன ஒரு எக்ஸ்பிரஷன்!!!///

பரதேசி..சமந்தா தமிழ் பொண்ணுடா.... ( ஆனாலும் மாளவிகா வாய்ஸ் அளவுக்கு இல்லைல?) :-))

வைகை said...

ஜீவா கேரக்டர்ல சுத்தமா அழுத்தமில்லை. காதலை விட குடும்பம் முக்கியம் அப்படினு அவரு முடிவு செய்து படிப்பில் கவனம் செலுத்தரதா வர இடம் உவ்வ்வ்வே.... (சரியாக சொல்லபடவில்லை).//

இப்ப நாம எல்லாம் எதுக்குடா வந்து வெளிநாட்ல கிடக்குறோம்? நீ கூடத்தான் லவ் பண்ணுன... அதுக்காக அங்கேயே இருக்க வேண்டியதுதானே? :-)

நாய் நக்ஸ் said...

சார்...நேத்திக்கு ஒட்டகத்துக்கு லீவா சார்....??????

தினேஷ்குமார் said...

வருங்காலம் வாரும் விமர்சகர் மாம்ஸ் நீங்க .....

அந்த படத்தப் பார்த்துட்டு நான் பட்டபாடு எனக்குத்தானே தெ(எ)ரியும்

NaSo said...

மச்சி உனக்கும் இஸ்கு இஸ்குன்னு தான் கேட்குதா?