Saturday, June 16, 2012

இனி என் தமிழ் விரைந்து சாகும்..

முன்னுரை : இது யாருடனும் விவாதம் செய்ய எழுதபட்ட பதிவல்ல. வீதியின் புழுதிகளில் வீழ்ந்து பொலிவிழந்து, கண்டவர் கால்பட்டு கசங்கி கிடக்கும் தாய் தமிழை கை கொடுத்து தூக்க இயலாமல் வேதனையுடன் வேடிக்கை பார்க்கும் ஒரு தமிழ் காதலனின் உணர்வுகள் என்று மட்டும் பார்த்து சிரித்துவிட்டு செல்லவும்.

என் தாயைவிட அடுத்த பெண் அழகு என்று அடுத்தவர் சொல்லும் பொழுது எத்தனை முறை திரும்பி பார்த்தாலும் ஏனோ என் தாய் மட்டுமே அழகாய் தெரிகிறாள். நம்மாள் தமிழில் நல்ல கவிதைகள், கட்டுரைகள், கதைகள் படைக்கவும் முடியவில்லை முன்னோர் படைத்ததை அடுத்தவர் உமிழும் பொழுது காக்கவும் முடியவில்லை. விவாதித்த காலம் எல்லாம் வீண் வாதம் செய்த காலமாய் தோன்றுவதால் இன்று விவாதிக்க வேண்டிய நேரத்திலும் அமைதியாக இருக்கவே தோன்றுகிறது.

இன்னும் சில நூற்றாண்டுகளில் நான் ரசித்து படித்த தமிழ் புத்தகங்கள் மண்ணுக்கடியில் மட்டும் கிடைக்கும். தமிழனின் வீரமும், ஈரமும், ஈகையும், காதலும் அதற்கு அடுத்த சில நூற்றாண்டுகளில் கரைந்து காணாமல் போக போகும் கோவில் சுவர்களில் மட்டும் யாருக்கும் புரியாத எழுத்துகளாய் கல் வெட்டில் என்றாவது ஒரு நாள் ஒரு அயல் நாட்டு ஆராய்ச்சி மாணவன் வந்து படித்து சொல்வான் என்று காத்து கிடக்கும்.

விருந்துக்கு வந்த வெள்ளையனை வேட்டைக்கு அழைத்து சென்று வெறும் கையால் புலியை வீழ்த்தி அதன் பல் பிடுங்கி பரிசாக கொடுத்த மருதுவின் வீரம் பரங்கி பிரபுவின் நாட்குறிப்பேட்டில் மட்டும் காணப்படும். தினவெடுத்த தோள்கள்களுடன் வெள்ளையருடன் வாளெடுத்து வீசிய வரலாறு அந்நிய மொழியில் படித்து அந்த வம்சத்தில் வந்தவர்களா நாங்கள் என்று அதிசயக்கும் நாள் வந்து கொண்டு இருக்கிறது.

வாழ்நாள் எல்லாம் அர்ப்பணித்து ஞானாலயம் எழுப்பிய தியாகமெல்லாம் வசதியாக வாழ தெரியாமல் வாரி இறைத்து வீணாக்கிய வரிசையில் சேர்க்கபடும். அந்நியர் கையால் தமிழன் அழிந்ததை வேடிக்கை பார்க்க முடிந்த நம் கண்ணேதிரில் நம் தமிழ் அழிவதை மட்டும் வேடிக்கை பார்க்க முடியாதா என்ன? வீழ்வது தமிழாக இருந்தாலும் வாழ்வது நாமாக இருக்கட்டும்.

முடிவுரை : சுற்றி நிகழ்ந்த சில நிகழ்வுகளால் சுடபட்டு வந்து விழுந்த வார்த்தைகளின் வடிகல் இது. உங்கள் மாற்று கருத்துகளை கேட்க என் செவிகள் திறந்து இருக்கவில்லை. அதனால் விவாதங்களை தவிர்க்கவும். நன்றி!!

.

22 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்கால் கறுத்தூ ஆறுமை. ஈது பேல் நிரையா எலுத்துங்கோல்!

vinu said...

vaalga thamil

வெளங்காதவன்™ said...

//உங்கள் மாற்று கருத்துகளை கேட்க என் செவிகள் திறந்து இருக்கவில்லை. அதனால் விவாதங்களை தவிர்க்கவும். நன்றி!! ///

நன்றி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//உங்கள் மாற்று கருத்துகளை கேட்க என் செவிகள் திறந்து இருக்கவில்லை. அதனால் விவாதங்களை தவிர்க்கவும். நன்றி!! ///

நன்றி..........

நாய் நக்ஸ் said...

Thanks....

Intha comment box-ium.....
Close....pannidalaame.....
:)
:)
:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

சொல்லாம கொள்ளாம கடைய திறந்திருக்கீங்க,... இது இன்னைக்கு போட்ட பதிவு தானா.#டவுட்டு

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஜெயந்த் கிருஷ்ணா said...

""நம்மாள்" தமிழில் நல்ல கவிதைகள், கட்டுரைகள், கதைகள் படைக்கவும் முடியவில்லை//

தமிழ் வளர்கிறது

ஜெயந்த் கிருஷ்ணா said...

உங்கள் மாற்று கருத்துகளை கேட்க என் செவிகள் திறந்து இருக்கவில்லை. அதனால் விவாதங்களை தவிர்க்கவும். நன்றி!!//

நன்றி வணக்கம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
""நம்மாள்" தமிழில் நல்ல கவிதைகள், கட்டுரைகள், கதைகள் படைக்கவும் முடியவில்லை//

தமிழ் வளர்கிறது//////

பின்ன நீ மட்டும்தான் வளருவியா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

@பன்னிகுட்டி ராமசாமி

இங்கே தான் கும்மியடிச்சா கழுத்த புடிச்சு வெளிய தள்ளிடுவேன்னு சொல்லாம சொல்லியிருக்கான்.. அதுக்கப்புறமும் நமக்கு இது தேவையா.. பேசாமா ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கலாம் வாத்தியாரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
@பன்னிகுட்டி ராமசாமி

இங்கே தான் கும்மியடிச்சா கழுத்த புடிச்சு வெளிய தள்ளிடுவேன்னு சொல்லாம சொல்லியிருக்கான்.. அதுக்கப்புறமும் நமக்கு இது தேவையா.. பேசாமா ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கலாம் வாத்தியாரே//////

ஆமா அவரு பதிவ போட்டு நாட்டோட எகானமியா அப்படியே சேஞ்ச் பண்ணிட்டுத்தான் மறுவேல பாப்பாரு........ படுவா அவனே திடீர்னு ப்ளாக் யூசர்நேம் ஞாபகம் வந்திடுச்சின்னு என்னத்தையோ எழுதி வெச்சிருக்கான்........ இவன் வேற........!

வெளங்காதவன்™ said...

//படுவா அவனே திடீர்னு ப்ளாக் யூசர்நேம் ஞாபகம் வந்திடுச்சின்னு என்னத்தையோ எழுதி வெச்சிருக்கான்........ இவன் வேற........!///

:-)

நிகழ்காலத்தில்... said...

ஞானாலயாவிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை, தனிப்பதிவாக போட்டு வெளிப்படுத்தியமைக்கு நன்றிகள் பல:)))

நாய் நக்ஸ் said...

@ பாண்டி....

தலைப்பு ஒரு----------இருக்கே....

ரை---இதை வேற கலர்ல போடப்பிடாதா....??????

ஒரு வினாடி....மூச்சே நின்னுடுச்சி......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெளங்காதவன்™ said...

//படுவா அவனே திடீர்னு ப்ளாக் யூசர்நேம் ஞாபகம் வந்திடுச்சின்னு என்னத்தையோ எழுதி வெச்சிருக்கான்........ இவன் வேற........!///

:-)
//


:-)))))

Jey said...

ஆத்திசூடி

By

ஔவையார்



உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்


32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்


44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்


55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்


66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்


77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்


88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.


வகர வருக்கம்


99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.


முடிவு

பட்டிகாட்டான் Jey said...

மயில் இந்தியாவின் தேசியப்பறவை.
ஆண் மயிலுக்கு நீண்ட தோகை உண்டு.
ஆண் மயில் நீலம் கலந்த பச்சை நிறமுடையவை.
பெண் மயிலுக்கு நீண்ட தோகை இல்லை.
பெண் மயில் பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது.
மயில் தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன.
மயில் அழகான பறவை.
மயில் தோகையை விரித்து ஆடும்.
மயில்கள் நீண்டதூரம் பறக்க இயலாது. உயரமான மரங்களில்ஏறி அமர்ந்துக் கொள்ளும்.
மயில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும்.
வெள்ளை நிற மயில்களும் உண்டு.
இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது குற்றமாகும்.

பட்டிகாட்டான் Jey said...

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி
--ஔவையார்

சாதி இரண்டே இரண்டுதான். நீதி தவறாமல் வாழ்ந்து, ஈட்டிய பொருளை பொது நலனுக்காக செலவழிப்பவர் உயர் குலத்தோர். அப்படிச் செய்யாதவர்கள் தாழ்ந்தவர்கள்.

பட்டிகாட்டான் Jey said...

உடல் நிலை சரியில்லாத காரணத்தாலும், அதிக நேரம் கணிணியில் செலவிட முடியாததாலும் விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

என் சார்பாக, பட்டாபட்டி,பன்னி மற்றும் மங்குனி அவர்கள் தொடர்ந்து பின்னூட்டமிட்டு இந்த இலக்கியப் பதிவிற்கு ஆதரவு தருவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொல்(ள்)கிறேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@Jey

முனைவர் பட்டாபட்டியே சும்மா சிரிச்சிட்டு போய்ட்டாரு... போங்க போய் ரெஸ்ட் எடுங்க.. :)

Unknown said...

vaalga tamil...vaalga terror tamil.