முஸ்கி : மக்கா இங்க வந்து ஓட்டு, கமெண்ட் போட்டு வம்புல மாட்டிக்காத. படிச்சிட்டு அப்படியே ஓடி போய்டு. நாம அடுத்த பதிவுல ஜாலியா கும்மி அடிக்கலாம்.
மக்கா ஒரு சந்தோஷமான விஷயம்... நான் பிரபல பதிவர்னா (அதிர்வு... பயபடாதிங்க பயபடாதிங்க அந்த வார்த்தை சொன்னாலே சும்மா அதிரும் இல்ல...) யார்னு கண்டு பிடிச்சிட்டேன். நம்புங்கபா உண்மையாதான். பிரபல பதிவர்னா யாரு தெரியுமா?? 100 மேற்பட்டோர் பின் தொடரனும். குறைந்தது 50 பதிவு எழுதி இருக்கனும். எது எழுதினாலும் ஓட்டு போட ஆள் இருக்கனும். டைம் கிடைக்கற அப்பொ எல்லாம் கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்னு எழுதி தள்ளிட்டே இருப்பாங்க. நல்ல தரமான பதிவுக்கு மட்டும் ஓட்டு, கமெண்ட் போடுவாங்க. எப்படி தரமான பதிவுனு கண்டு பிடிக்கறதா? அது எனக்கு தெரியாது.. ஏன்ன நான் பிரபல பதிவர் இல்லிங்கோ...ல்லிங்கோ...ங்கோ..கோ.
இப்பொ ஒரு பிரபல பதிவர்கிட்ட எப்படி நடந்துகணும் சொல்லுகிறேன் கேளுங்க. நீங்க புதுசா எழுத வந்தவரா இருந்தா அவர் எது சொன்னாலும் ஆமாம், ஆமாம் ஆமாம், நீங்க சொன்னா சரிதான், அருமையான கருத்து இப்படி சொல்லனும். எதாவாது எதிர்த்து கூறு கெட்ட தனமா கோள்வி கேட்டிங்க.... "டாய் சைலன்ஸ்... பேசிக்கிட்டு இருக்கோம் இல்லை!!" அப்படினு இளைய தளபதி மாதிரி கோவ படுவாங்க. பயமா இருக்கு இல்ல? பயமா இருக்கு இல்ல? அப்பொ அவங்க கிட்ட கேள்வி கேக்காத. எழுதி இருக்கது புரியலனாவா?? உனக்கு புரிஞ்சா என்ன புரியாட்டி என்ன வாய மூடிட்டு படிச்சிட்டு வா பங்காளி.
என்னாது நீங்களும் பிரபல பதிவரா?? அப்பொ சரி நீங்க என்ன சொன்னாலும் கருத்துதான். உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் இல்லைன வரவேற்கிறேன் அப்படினு சொல்லுவாங்க. தைரியமா உள்ள போங்க. அவ்வளோ ஏன் நீங்க நக்கல் அடிச்சாலும் பிரச்சனை இல்லை because நீங்க இரண்டு பேரும் பிரபல பதிவர்ஸ் பாஸ். உங்களுக்குனு பதிவுலகத்துல ஒரு இது இருக்கு... அதான்பா பிரிஸ்டீஜி... நேத்து வந்தவன் எல்லாம் கேள்வி கேட்டா அந்த அது... இதுவாகிடாது??
ஐயோ!! முன்னாடியே சொல்லனும் நெனச்சேன் மறந்துடேன். சார் / மேடம் இது யார பத்தியும் எழுதின புனைவு இல்லிங்கோ ஒரு வேலை நீங்க பிரபல பதிவரா இருந்து எதாவது சில விஷயம் உங்க கூட ஒத்து போச்சினா அது ஒரு தற்செயலான நிகழ்வு. அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் உங்கள் மனதை இந்த பதிவு புண்படுத்தி இருந்தால் நான் ரொம்ப வருத்தபடரேன் பிரபல பதிவர் அவர்களே. உங்களால இந்த நக்கல ரசிச்சி சிரிக்க முடிஞ்சா சிரிங்க. முடியலையா அடுத்த பதிவுக்கு வாங்க. ஆனா கண்டிப்பா வரணும். ஏன்னா எனக்கு நாலு நண்பர்கள் வேணும். ஏன்னா நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலிங்கோ...
எலேய் மக்கா!! மறுபடியும் சொல்றேன் ஓட்டு, கமெண்ட் போட்டு மாட்டிக்காத. யாராவது பிரபல பதிவர் கோபபட்டு என்னை கிழி கிழினு கிழிச்சா ஜாலியா ப்ளாக் மூடிட்டு புது பேர்ல புது ப்ளாக் ஆரம்பிச்சி நக்கல் அடிப்பேன்... என் கைல இருந்து கம்பியூட்டர பிடுங்கி கடல்ல போடர வரை நக்கல் அடிப்போன். அட பிடுங்கி போட்டாலும் கவலை இல்லிங்க... ஏன்னா இது ஆபிஸ் கம்பியூட்டர் நீங்க பாத்து சூதானமா இருந்துகோங்க..... :)))
டிஸ்கி : பிரபல பதிவர்.... அட்ரா அட்ரா சொல்லி பாத்தாலே ஒரு கெத்தா இருக்கு. எப்படியாவது ஒரு பிரபல பதிவர் ஆகிடனும்.
.